For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லிவ்-இன் உறவுமுறையில் ரொமான்ஸ் நிலைத்திருக்க செய்ய வேண்டியவைகள்!!!

By Babu
|

இன்றைய காலத்தில் லிவ்-இன் உறவுமுறையானது ட்ரெட்ண்ட்டில் உள்ளது. அதென்ன லிவ்-இன் என்று கேட்கிறீர்களா? அதாங்க திருமணத்திற்கு முன்பே ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்வது. அப்படி வாழ்வதால், முதல் ஒரு மாதத்திற்கு நன்றாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல காதல் வாழ்க்கையானது போர் அடித்துவிடும். மேலும் இருவருக்குள் பிரச்சனைகள் அதிகரித்துவிடும்.

குறிப்பாக இதுவரை ரொமான்ஸில் கலக்கிக் கொண்டிருந்த இருவரும் ரொமான்ஸ் செய்யாமல், வாக்குவாதம், சண்டை என எப்போதும் போர்களத்தில் இருப்பது போன்றே இருப்பீர்கள். ஆகவே லிவ்-இன் உறவுமுறையில் இருக்கும் போது, இருவருக்கும் இடையே இருந்த அன்பு அதிகரிக்கவும், வாழ்க்கை சுவாரஸ்யமாக செல்லவும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கொடுத்துள்ளது. அவற்றை படித்து, ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றை செய்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சின்ன சின்ன விஷயங்கள்

சின்ன சின்ன விஷயங்கள்

லிவ்-இன் உறவுமுறையின் போது, சின்ன சின்ன விஷயங்களை செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் ரொமான்ஸை நிலைத்திருக்க செய்ய முடியும். உதாரணமாக, குளிக்க செல்லும் போது, வேண்டுமென்றே டவலை எடுத்துச் செல்லாமல், குளித்து முடித்த பின்னர் டவலை எடுத்து தருமாறு கேட்கலாம்.

மற்றவர்களுக்கு புரியாத இரகசிய வார்த்தைகள்

மற்றவர்களுக்கு புரியாத இரகசிய வார்த்தைகள்

நண்பர்களுடன் இருக்கும் போது, மற்றவர்களுக்கு புரியாதவாறான இரகசிய வார்த்தைகளை வைத்துக் கொண்டு உங்கள் துணையை கிண்டல் செய்து மகிழலாம்.

ஒன்றாக நேரத்தை செலவழிக்கவும்

ஒன்றாக நேரத்தை செலவழிக்கவும்

வேலைப்பளு அதிகம் நிறைந்த இக்காலத்தில் காதலர்கள் அல்லது தம்பதியர்களால் ஒன்றாக நேரத்தை செலவிட முடியாத நிலை ஏற்படுகிறது. இருப்பினும், தம் மீது அன்பு கொண்டவருக்காக சிறிது நேரத்தை ஒதுக்கி, அவரை வெளியே அழைத்துச் செல்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.

துணைக்காக சமைப்பது

துணைக்காக சமைப்பது

துணைக்கு பிடித்த உணவை சமைத்து கொடுப்பதன் மூலம், அவருக்கு உங்கள் மீது பாசம், காதல் போன்றவை அதிகரித்து, வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்து செல்லும்.

ஆச்சரியங்கள்

ஆச்சரியங்கள்

துணைக்கு அவ்வப்போது ஆச்சரியப்படும் வகையில் பரிசுகள் கொடுப்பதன் மூலம் இருவருக்குள்ளும் உள்ள காதல் அதிகரிக்கும். அது பூ, சாக்லெட் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

புதிதாக முயற்சிக்கவும்

புதிதாக முயற்சிக்கவும்

வாரம் ஒரு முறை துணையுடன் நல்ல ரொமான்ஸை அதிகரிக்கும் இடங்களுக்கு சென்று, துணையுடன் சந்தோஷமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Live-In Relationships: 6 Tips To Keep Romance Alive

Staying together 24x7 can bring monotony which in turn makes the relationship boring. Live-in couples can keep the romance alive by being active and trying different ways to keep the relationship healthy. Here are some simple ways to keep the romance alive in live-in relationships.
Desktop Bottom Promotion