For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல் தோல்வியினால் உண்டான கஷ்டத்திலிருந்து வெளிவருவது எப்படி?

By Maha
|

தற்போதெல்லாம் காதல் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. ஆம், அக்காலத்தில் எல்லாம் காதலுக்காக உயிரையே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போதெல்லாம் அப்படி இல்லை. சரியாக ஒத்துப்போகாவிட்டால், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு செல்கின்றனர். மேலும் இன்றைய காலத்தில் காதல் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் உண்டு.

அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபப்பட்டு பிரிவது. இப்படி பிரிந்தால் எவ்வித ஏமாற்றமும் தெரியாது. அதுவே வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, இருக்கும் காதலை வெட்டிவிடுவர். இந்த வகையை காதல் என்றே சொல்லக்கூடாது. மற்றொன்று குடும்பத்தினருக்காக பிரிவது. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று திருமணத்திற்கு முன், இன்னொன்று திருமணத்திற்கு பின். இந்த இரண்டு வகைகளால் காதல் பிரியும் போது, ஏற்படும் துயரத்தில் இருந்து பிரிவது என்பது மிகவும் கடினம்.

அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்கு ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி அந்த துயரத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிர்ச்சி

அதிர்ச்சி

தொடக்கத்தில், நம் துணைவர் மற்றொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் ஏற்காது. முதலில் நம்ப மறுக்கும். நாம் இருக்க வேண்டிய இடத்தில் மற்றொருவர் என்பதை முற்றிலும் மனம் ஏற்க இயலாது. அதிலும் உங்கள் துணைவர் உங்களை தவிர வேறு ஒருவருடன் உணர்வுபூர்வமாக நெருங்கி பழகுவதை பார்க்கும் பொழுதோ, உங்களை சுற்றி ஏதோ இழிவான செயலில் ஈடுபடுவதைக் கண்டாலோ, என்ன நடக்கிறது என்று உணர்வது மிக கடினம். இதெல்லாம் கெட்ட கனவா, இல்லை வெறும் பிரம்மையா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கும் போது, ஒரு மூடுபனியில் இருப்பது போல் இருக்கும். இந்த கட்டத்தில் நீங்கள் உங்களை உணர்வது அவசியம்.

ஆத்திரம்

ஆத்திரம்

பிரிவு நிச்சயம் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது. உடல் நிலை மோசமாக மாறும். எந்த செயலையும் செய்ய முடியாது. வேலைக்கு செல்லாமலும், அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமலும், எப்போதும் காதல் நினைவையே மனம் நாடும். நடந்தவற்றையே நினைத்து சிந்தித்து கொண்டிருப்பர். பின் பொருட்களை தூக்கி உடைப்பது, கத்துவது, அனைவரிடமும் சண்டை போடுவது மற்றும் தன் சுய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது போன்றவைகள் நிகழும். அழுது புலம்புவர். சில நாட்களுக்கு பின் இந்த நிலை மாறும். ஆனால் மனதில் வலி மட்டும் வேரூன்றி இருக்கும். இந்த நிலை போக போக சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.

கோபம்

கோபம்

ஆரம்பத்தில் வன்முறை செயலில் ஆத்திரம் கொண்டு, பின் அந்த வலியிலிருந்து மீண்டு, மனமானது கல்லாகி, ஒரு சாதாரண நிலையை அடைந்திருப்பீர். இந்த நிலையில் தான் பொதுவாக நீங்கள் சமரச கருத்து தொடங்குவது அல்லது விவாகரத்து பற்றிய முடிவு எடுப்பது நடக்கும். ஆழமான காயம் கொண்டிருந்தாலும், நடைமுறை வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது நல்லது. அதை விட்டு பழி வாங்குவது என்பது முட்டாள்தனம். ஆகவே இந்த நேரத்தில் துயரத்திலிருந்து வெளிவர வாழ்க்கையின் இலக்குகளை அடைய மிகுந்த ஆர்வத்தை காட்டலாம் அல்லது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.

நினைவு சின்னங்கள்

நினைவு சின்னங்கள்

உங்கள் துணைவருடன் சென்றிருந்த சில இடங்கள், பொருட்கள், மற்றும் நினைவூட்டும் அனைத்தையும் மனதில் இருந்து அழிப்பது நல்லது. காதல் கொண்ட வேளையில் கேட்ட சில பாடல்கள், அவர்களுடன் சென்ற ஹோட்டல்கள் அல்லது அவர்கள் கூறிய வார்த்தைகள், அவர்களால் ஏற்பட்ட நட்பு, உறவுகள் போன்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.

புது உறவு

புது உறவு

காதல் தோல்வி அடைந்த உடனே வேறு ஒருவரை நம்பி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். சில நாட்கள் கழித்து பழகி, பேசி, ஒருவரை புரிந்து பின் திருமணம் முடிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைக்கு மற்றொரு நபரை தேர்ந்தெடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். இதனால் மறுபடியும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.

இலக்குகள்

இலக்குகள்

காதல் தோல்வி அடைந்துவிட்டோம் என்று மனம் தளர்ந்து விடாமல், இலக்குகளை தொடர வேண்டும். சதா அதே நினைவாக இருக்காமல், புத்தகம் படிப்பது, பிடித்த வேலைகளை செய்வது, எங்காவது தூரமாக சென்று ஒரு மாத காலம் மன நிம்மதியுடன் இருந்து வருவது, எப்போதும் நம்மை பிஸியாக வைத்து கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால், விரைவில் அந்த துயரத்திலிருந்து மீண்டு, இலக்குகளை அடைய முடியும். ஆகவே எப்போதும் நம்மை நாமே புரிந்து கொண்டு, பின் வாழ்க்கையை தொடர்வது மிக முக்கியம். வாழ்க்கையில் அனைத்துமே பாடமாக அமையும். நிறைய கற்று கொள்ள நேரிடும். ஒவ்வொருவரையும் எப்படி சமாளிப்பது என்பதை அறிய வேண்டும். எனவே காதல் தோல்வி ஏற்பட்டால், அவற்றை மறந்து, நம் வாழ்க்கையை தொடர நமக்கு எப்போதும் சந்தோஷம் கொடுக்கும் நம் நண்பர்களோடு சேர்ந்து சிரித்து பேசி வாழ்க்கையை அனுபவியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Overcome Love Failure

Want to know how to overcome love failure? Time is usually the only way to overcome failed love. Yes, it hurts when you deeply love.
Story first published: Thursday, September 4, 2014, 16:57 [IST]
Desktop Bottom Promotion