For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் துணையுடன் எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும்?

By Ashok CR
|

உங்கள் துணையுடன் நீங்கள் செலவழிக்க வேண்டிய ஆரோக்கியமான அளவிலான நேரம் எவ்வளவு? ஒரு உறவிற்குள் வேகமாக தன் தலையை நுழைத்து, 24 மணி நேரமும் தன் துணையுடன் நேரத்தை செலவழித்து, தன் நண்பர்கள் மற்றும் இதர உறவுகளை மறந்து போகிறவர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால் இன்னும் சிலரோ மாதத்தில் சிறிது நேரம் மட்டுமே ஒன்றாக செலவழிப்பார்கள்.

ஆனால் எங்கே உள்ளது சமநிலை? உங்கள் துணையுடன் செலவழிக்க வேண்டிய ஆரோக்கியமான அளவிலான நேரம் எவ்வளவு? 100 சதவீதம் மிகவும் அதிகம் என்றால் 0 சதவீதம் மிகவும் குறைவாகும். அப்படியானால் எது சரியான அளவு?

இதற்கான சமநிலை நீங்கள் நினைப்பதை போல் சுலபமில்லை. ஒரு பக்கம், தன் வாழ்க்கையில் முக்கியமானவராக மாறுபவருடன் நீண்ட நேரத்தை செலவிட துடிப்பார்கள். மற்றொரு பக்கம், வேலை மற்றும் இதர தேவைப்பாடுகள் இப்படி ஒன்றாக செலவிடும் நேரத்திற்கு முட்டுக்கட்டையாக விளங்கும். சரி இந்த சமநிலையை எப்படி கொண்டு வருவது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்பை மறக்காதீர்கள்

நட்பை மறக்காதீர்கள்

ஆரம்பத்தில் நீங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்காக செலவழித்த நேரத்தை உங்கள் துணை மெதுவாக ஆக்கிரமித்துக் கொள்வார். உறவில் இருக்கும் நபர்கள் தங்களின் தற்போதைய நட்பு வட்டாரத்தை விட்டு மெல்ல வெளியேற ஆரம்பிப்பார்கள். உதாரணத்திற்கு, தங்கள் காதலனோடு அதிக நேரத்தை செலவழிக்கும் பெண்கள், அதே வேகத்தில் தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் செலவழிக்கும் நேரத்தை குறைக்க தொடங்கி விடுவார்கள்.

அளவுக்கு அதிகமான நெருக்கம்

அளவுக்கு அதிகமான நெருக்கம்

நண்பர்களும் உங்களை காண முடியவில்லையே என குறை கூறும் போதும், நீங்கள் எங்கே போனீர்கள் என உங்கள் குடும்பம் வியக்கும் போதும், கண்டிப்பாக சமநிலையை கொண்டு வருவது முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவரின் மீது ஒருவர் அதிகமாக சார்ந்திருக்காதீர்கள்

ஒருவரின் மீது ஒருவர் அதிகமாக சார்ந்திருக்காதீர்கள்

பல பேர் தங்கள் தேவைகளுக்கு தங்களின் துணையையே அதிகமாக நாடுகிறார்கள். அவர்களை சுற்றியே அவர்களுடைய சமுதாய வாழ்க்கை நகரும், வார இறுதி என்றாலே பெற்றோர் மற்றும் அவர்களின் துணை மட்டுமே, அவர்களின் ஒரே நண்பன் அவர்களது துணை மட்டுமே - இது ஆபத்தான அளவிலான நெருக்கத்தை உருவாக்கி, ஒருவர் மீது ஒருவர் அதிகமாக சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கிவிடும். மேலும் இது அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி அந்த மெல்லிய உறவை அழித்துவிடும் அபாயத்தை உண்டாக்கும். ஒருவர் மீது ஒருவர் சார்ந்திருப்பது தவறில்லை, ஆனால் உங்களுக்கு தேவையான அளவிலான சுதந்திரமும் வேண்டும்.

உங்களுக்கும், உங்கள் துணைக்கும் தனிமை அவசியம்

உங்களுக்கும், உங்கள் துணைக்கும் தனிமை அவசியம்

மற்ற தேவைகளை போல தனிமையில் நேரத்தை செலவிடுவதும் தேவையான ஒன்றே. தங்கள் துணை இல்லாமல், தாங்களாக செய்ய விரும்பும் வேலைகளை அல்லது தங்கள் நண்பர்களுடன் செய்ய விரும்பும் வேலைகளை செய்து பலரும் அதன் பயனை அனுபவித்து வருகின்றனர். உறவுகள் நமக்கு பெரிது தான் என்றாலும், சிறிது சுய கவனிப்பும் சரிசமமாக முக்கியமே.

சமநிலையை உண்டாக்குங்கள்

சமநிலையை உண்டாக்குங்கள்

ஆரோக்கியமான அளவில் தம்பதிகள் நேரத்தை செலவழிப்பது என்பது இரண்டு பேரும் சேர்ந்து நேரத்தை செலவழிக்கும் போது இரண்டு பேருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும் சமநிலையை கண்டறிவதாகும். அது மட்டுமல்லாமல், நெஞ்சார்ந்த நட்பு மற்றும் குடும்ப உறவு, தொழில் ரீதியான இலக்கை நோக்கி நகர்வது போன்றவைகளும் அடங்கும். சமநிலைக்கு இவையனைத்தும் தேவை என்பதை சொல்லத் தேவையில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Much Time Should You Spend With Your Partner

Striking a balance is much harder than you think. On one hand, people are tempted to spend time with their partners, who go on to become the most important people in their lives. Meanwhile, work and other demands often impose limits on the amount of time couples can actually spend together. Tamil Boldsky tells you how you can strike that balance.
 
Desktop Bottom Promotion