For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க டீன்-ஏஜ் பருவத்தை தாண்டிவிட்டீங்களா? அப்ப இத முதல்ல படிங்க...

By Karthikeyan Manickam
|

'இளம் கன்று பயமறியாது' என்பதற்கிணங்க 13 முதல் 19 வயதுள்ள டீன் ஏஜ் பருவத்தில் பின் விளைவு எதையும் யோசிக்காமல், தாம்தூமென்று குதிப்பதும் அவசர அவசரமாக முடிவெடுப்பதும் என்று பசங்களும் பொண்ணுங்களும் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்வது வழக்கம்.

ஆனால், 20 வயதுக்கு அப்புறம் தான் மனம் சிறிது சிறிதாகப் பக்குவப்பட ஆரம்பிக்கும். இதுதான் மெச்சூரிட்டிக்கான ஆரம்பம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் மனம் எந்த அளவுக்குப் பக்குவப்படுகிறதோ அதுதான் வாழ்க்கையின் கடைசி வரை நீடிக்கும். 20 வயதின் ஆரம்பத்தில் நாம் இந்த உலகை மிரட்சியாகப் பார்க்கும் பார்வைக்கும், அந்த உலகம் நம்மை அசாதாரணமாகப் பார்க்கும் பார்வைக்கும் இடையில் சிக்கி நாம் சீரழிந்து விடக் கூடாது.

'உறவுகள் வளர்வதற்கு மனம்தானே காரணம்' என்ற ஒரு பழைய பாடலுக்கேற்ப, நம் எதிர்கால உறவை வாழ்க்கையின் கடைசி வரை நாம் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 20 வயதுத் தொடக்கம் தான் வழிவகுக்கிறது. இந்தச் சமயத்தில் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளித்து, அத்தகைய உறவைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ்கள் இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்திசாலித்தனம்

புத்திசாலித்தனம்

நீங்கள் கல்லூரிப் படிப்பையும் முடித்து விட்டதால், எந்த விஷயத்தையும் புத்திசாலித்தனமாகக் கையாள வேண்டியது மிகமிக அவசியம். எதிர்கால உறவைத் தேர்ந்தெடுப்பதும் அதுபோலத்தான். உங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், உங்கள் வேலைக்கும் (அல்லது தொழிலுக்கும்), உங்கள் குடும்பத்திற்கும் அந்த உறவு உபயோகப்படும்படி இருக்க வேண்டும். அதனால், இந்த வயதில் அத்தகைய நல்ல உறவைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுத்தால் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க அது உதவும்.

நேரம்

நேரம்

இந்த வயதில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறவுக்கான நேரத்தை ஒதுக்குவது ஒரு பெரிய சவாலான விஷயமாகும். ஏனென்றால், உங்கள் மேற்படிப்பிற்காகவும் வேலை அல்லது தொழில் விஷயங்களுக்காகவும் நீங்கள் மிகவும் பிஸியாக அலைந்து கொண்டிருப்பீர்கள். அந்த பிஸியான நேரத்தில், அந்த உறவுக்காக உங்களால் நேரத்தை ஒதுக்க முடிந்தால், நீங்கள் உண்மையில் லக்கிதான். உங்கள் எதிர்கால பார்ட்னருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லவா?

பணம்

பணம்

இந்த உலகம் பணத்தால் தான் இயங்கி வருகிறது என்பதை உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த வயதில் நீங்கள் அதற்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுத்துத் தான் ஆக வேண்டும். பணத்தை சம்பாதிப்பதற்கான அனைத்து வழிகளையும் கண்டறிய வேண்டும். அதேபோல்தான் நம் எதிர்கால உறவும். உங்கள் பார்ட்னருடைய தேவைகளைச் சந்திப்பதற்கும் உங்களுக்கும் பணத்தின் தேவை அவசியம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

சிறு பிரச்சனைகள்

சிறு பிரச்சனைகள்

இந்த வயதில் நீங்கள் தேர்வு செய்துள்ள உங்கள் எதிர்காலத் துணைக்கும், உங்களுக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், சிறுபிள்ளைத்தனமாக அத்தகைய பிரச்சனைகளை பெரும் ஈகோவாக வளர விட்டால், உங்களுக்குள் விரைவில் விரிசல் ஏற்பட்டுவிடும். புத்திசாலித்தனமாக அத்தகைய பிரச்சனைகளைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள். 'சமாதானம்' என்ற வார்த்தை மட்டுமே பெரும் தாரக மந்திரம்!

மாற்றம்

மாற்றம்

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்று சொல்வார்கள். வாழ்க்கையில் நாம் எப்போதுமே பலவிதமான மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். சில சமயம், உங்கள் எதிர்கால உறவில் கூட சில மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். இதற்கு எப்போதும் நீங்கள் தயாராகவே இருக்க வேண்டும். மாற்றங்களுக்குத் தயாராக இல்லையென்றால், அதற்கேற்ற விளைவுகளைக் கண்டிப்பாக எதிர்கொண்டே ஆக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Maintain Your First Real Mature Relationship

If you are lucky enough to find someone serious, your focus shifts to making it work. So, without further ado, here are a few tips, tricks, and things to look out for as you enter the big, scary world of serious, long-term relationships.
Story first published: Saturday, November 8, 2014, 9:42 [IST]
Desktop Bottom Promotion