For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் முத்தம்.. எப்படித் தரனும் தெரியுமா...?

By Ashok CR
|

உங்களுக்கு இது முதல் முத்தமா? அப்படியானால் ஒவ்வொரு விதத்திலும் அது உங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைய வேண்டுமல்லவா? முதல் முத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு காரணம் அது அந்த ஆண் அல்லது பெண்ணின் மீது கடைசி வரை அழியாத ஒரு முத்திரையை பதிக்கும். முதல் முத்தம் என்று வரும் போது முதலில் முன் வர பெண்கள் தான் பொதுவாக தயங்குவார்கள். அதே போல் பெண்களுக்கு தான் பயமும், நடுக்கமும் அதிகமாக இருக்கும்.

கிஸ்ஸடிக்கும்போது எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா...?

முதல் முத்தம் என்பது எப்போதும் மென்மையாக, மறக்க முடியாத, எல்லாவற்றையும் விட உணர்ச்சி ரசம் பொங்க இருக்க வேண்டும். உங்கள் காதலன் அல்லது காதலியை முதல் முறை முத்தமிடும் போது, வெறிகொண்ட நோக்கத்துடன் வலுக்கட்டாயமாக நடக்காதீர்கள். அமைதியாக, ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை உங்கள் காதலன் அல்லது காதலி லேசாக யூக்கிக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் காதலன் அல்லது காதலிக்கு முதல் முத்தம் கொடுத்து ஆச்சரியப்படுத்த போகிறீர்களா? அப்படியானால் அதற்கான டிப்ஸை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? எனவே அதைத் தெரிந்து கொண்டு உங்கள் சேட்டைகளை தொடருங்கள்.

முத்தம் கொடுக்கும் இடங்களும்... அதற்கான அர்த்தங்களும்...

முதல் முத்தத்திற்கான டிப்ஸ்களை படித்து விட்டு, உங்கள் உறவின் மீது அதிக நாட்டத்தை உண்டாக்குங்கள். இதனை மென்மையான தருணமாக மாற்றுங்கள். உங்களுக்கும் சரி உங்கள் காதலன் அல்லது காதலிக்கும் சரி கஷ்டத்தை கொடுக்காதீர்கள். அது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதோ முதல் முத்தம் கொடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் நாக்கை உள்ளே ஒட்டிக் கொள்ளாதீர்கள்

உங்கள் நாக்கை உள்ளே ஒட்டிக் கொள்ளாதீர்கள்

முதல் முத்தத்திலேயே ஆண்கள் தங்களின் நாக்கை பெண்களின் வாய்க்குள் ஒட்டிக் கொண்டால் அவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் முதல் முத்தம் கொடுக்கும் போது உங்கள் நாவின் சுவையை அவர்கள அறிய வேண்டாமே!

அதிகளவிலான எச்சில் வேண்டாமே

அதிகளவிலான எச்சில் வேண்டாமே

இது சற்று எரிச்சலை கூட ஏற்படுத்தும். முதல் முறை முத்தமிடும் போது உங்கள் காதலன் அல்லது காதலியின் வாயில் அதிகளவிலான எச்சிலை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் சுவாசத்தை இருமுறை சோதித்துக் கொள்ளுங்கள்

உங்கள் சுவாசத்தை இருமுறை சோதித்துக் கொள்ளுங்கள்

பயன்படுத்திய பழைய சாக்ஸ் போல உங்கள் சுவாசம் இருந்தால், யாருக்கு தான் உங்களுக்கு முத்தம் கொடுக்க பிடிக்கும். அதனால் முத்தமிடும் போது, உங்கள் சுவாசம் நன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

சிறிய முத்தமாக இருக்கட்டும்

சிறிய முத்தமாக இருக்கட்டும்

உங்கள் முத்தத்தை நீண்ட நேரத்திற்கு வளர்க்காதீர்கள். முதல் முத்தம் எப்போதும் சிறிய மற்றும் இனிய முத்தமாக இருக்க வேண்டும். ரொமான்ஸ் விஷயத்தில் உங்களை நன்கு அறிய அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு அளியுங்களேன்.

கழுத்தில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள்

கழுத்தில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள்

முதல் முத்தம் கொடுக்கும் போது, கைகளை அங்கே இங்கே என அலைய விடாதீர்கள். முதல் முத்தம் கொடுக்கும் போது பலரும் செய்யும் தவறு இது தான். உங்கள் கைகளை அவர் கழுத்தில் அல்லது முகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முதல் டேடிங் செல்லும் போது மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டாம்

முதல் டேடிங் செல்லும் போது மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டாம்

இரண்டு பேருக்கும் சற்று இடைவெளி இருப்பதில் தவறில்லை. முதல் முத்தத்தின் போது, இருவரும் உடல் ரீதியாக மிகவும் நெருக்கத்துடன் இருக்க வேண்டாம். அது எதிர்மறையான பல எண்ணங்களை உண்டாக்கி விடும்.

கண்களை மூடிக்கொள்ளுங்கள்

கண்களை மூடிக்கொள்ளுங்கள்

கண்களை மூடிக்கொண்டால் அந்த தருணத்தின் உணர்ச்சியையும் வெப்பத்தையும் அனுபவிக்க முடியும். அதனால் கண்களை மூடிக்கொண்டு ஆழமாக மூச்சு விடுவது முதல் முத்தத்தின் டிப்ஸ் ஆகும்.

இடம் முக்கியமானதாகும்

இடம் முக்கியமானதாகும்

முதல் முத்தம் என வரும் போது, அதற்கான இடம் மிகவும் முக்கியம். உங்கள் இருவருக்கும் அந்த அதிசய தருணத்தை அனுபவிக்க அது ஒரு விசேஷ இடமாக அமைய வேண்டும்.

அனுமதி கேட்காதீர்கள்

அனுமதி கேட்காதீர்கள்

முதல் முறை உங்கள் காதலன் அல்லது காதலிக்கு முத்தம் கொடுக்க வேண்டுமென்றால் அவர்களிடம் அனுமதி கேட்காதீர்கள். அது அபத்தமாக தோன்றும். மேலும் உங்களை நெளிய வைக்கும் நிலைக்கு தள்ளி விடும்.

திறந்த வாயுடன் தொடங்காதீர்கள்

திறந்த வாயுடன் தொடங்காதீர்கள்

முதல் முத்தத்தை திறந்த வாயுடன் நேரடியாக ஆரம்பித்து விடாதீர்கள். இரண்டு உதடுகளையும் இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். பின் உணர்ச்சியுடன் வெப்பத்துடன் மென்மையாக முத்தம் கொடுங்கள். முதல் முத்தம் கொடுக்கையில் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கிய டிப்ஸ் இது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Kiss For The First Time

Scared to kiss your date? Here are some of the first kiss tips you can make use of when you see your beautiful partner, the next time.
Desktop Bottom Promotion