For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறவுமுறைகளைப் பற்றி தம்பதிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 7 முக்கியமான விஷயங்கள்!!!

By Nithya Devi Muthuraman
|

ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சி காண வேண்டுமெனில், உறவுமுறைகளைப் பற்றிய பல விஷயங்களை அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். பொதுவாக அனுபவத்தின் மூலமே இது தொடர்பான பக்குவமும், லாகவமும் கைவரப் பெறும் என்றாலும், இதனைப் பற்றிய சில உண்மைகளை உணர்ந்து கொள்ள முற்படுவதில் தவறொன்றுமில்லை.

உங்காளு அல்வா கொடுக்கப் போறார்ங்கிறதை தெரிஞ்சுக்க ஆசையா?.. காதைக் கிட்ட கொண்டு வாங்க...!

இங்கு உறவுமுறைகளைப் பற்றிய 7 முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை மனதில் கொண்டு தம்பதிகள் வாழ்ந்து வந்தால், உறவுமுறையானது நீண்ட நாட்கள் சந்தோஷமாக நிலைத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூய்மையான அன்பு அற்புதங்களை நிகழ்த்தவல்லது

தூய்மையான அன்பு அற்புதங்களை நிகழ்த்தவல்லது

இன்றைய அவசர யுகத்தில், அன்பின் ஆற்றலை அறிந்திருப்போரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. அனைவரும் அவசர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் நாம் அன்பாக நடந்து கொள்ள மறந்து விடுகிறோம். அன்பாக நடந்து கொள்வதற்கு அருமுயற்சி ஒன்றும் தேவையில்லை, அவ்வாறு நடந்து கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள், அவ்வளவு தான். நீங்கள் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட பின், அன்பாக இருத்தல் எத்துணை ஆற்றல் வாய்ந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அன்பாக இருத்தல், உங்கள் உறவுமுறைகளை ஆரோக்கியமானதாகவும், வலிமையானதாகவும் ஆக்கி, சிறப்பான பல நற்பயன்களை உங்களுக்கு அள்ளிக்கொடுக்கும்.

துன்பமான நாட்கள் என்பது அனைவரின் வாழ்விலும் வந்து போகக்கூடியதே

துன்பமான நாட்கள் என்பது அனைவரின் வாழ்விலும் வந்து போகக்கூடியதே

உங்கள் அன்புக்குரியவரின் எரிச்சல் உங்கள் மீது தான் என்று எதிர்மறையாக நினைக்க வேண்டியது அவசியமில்லை. அனைவரின் வாழ்க்கையிலும் துன்பத்தை ஏற்படுத்தக்கூடிய சில தினங்கள் இருக்கக்கூடும். அத்தினங்களில் அவர்கள் கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கக்கூடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கையின் பல்வேறு அடுக்குகளில் உங்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் துணைவரின் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வாய்ப்பு இல்லை; பல சமயங்களில் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை உங்களால் யூகிக்கக்கூட முடியாது. உங்கள் துணைவர் எத்தகைய கஷ்டங்களுடன் போராடுகிறார் என்பதை உணர்ந்து, அவற்றிலிருந்து மீள்வதற்கு அவருக்கு அவகாசம் கொடுங்கள். அந்தரங்கமாக அவற்றை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

பொது இடங்களில் சண்டையிடாதீர்கள்

பொது இடங்களில் சண்டையிடாதீர்கள்

வலிமையான மற்றும் நீடித்திருக்கக்கூடிய உறவுமுறைக்குள் ஒரு சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பது உண்மையே. அனைத்து வகை உறவுமுறையிலும் இது இன்றியமையாத ஒரு விஷயம் என்பதை ஏராளமான தம்பதிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்காக உங்கள் கருத்து வேறுபாடுகளை பொது இடங்களில் வைத்து களைய வேண்டும் என்று அர்த்தமில்லை. தேவைப்பட்டால் உங்கள் உரிமைகளை நிலைநாட்ட சண்டையிடலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவ்வாறு பொது இடங்களில் நடப்பது உங்களை மிகையுணர்ச்சிக் கோளாறு உடையவராகவோ அல்லது எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவோ காட்டி, அடுத்தவர் முன்னிலையில் உங்களின் கௌரவத்தை குலைக்கும். உங்கள் அழுக்குத் துணிகளை பொது இடத்தில் வைத்து துவைக்காதீர்கள். உங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

மன்னிப்பு தான் எந்த உறவுக்கும் அடிப்படை

மன்னிப்பு தான் எந்த உறவுக்கும் அடிப்படை

பரஸ்பரம் மன்னித்துக் கொள்ளும் தம்பதிகள் மட்டும் தான் நீண்டகால உறவுமுறைகளுடன் வாழ்ந்திருப்பர். யாருமே குறைபாடற்று இருக்க முடியாது. நீங்கள் இருவருமே தவறு செய்யக்கூடியவர்கள் தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். கடந்து போனவை கடந்து போனவைகளாகவே இருக்கட்டும். இறந்த காலத்தை முன்னிறுத்தி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்வீர்களானால், அப்போது உங்களிடையே இருக்கக்கூடிய நேசம் மரித்துப் போய்விடும். உங்கள் நேசத்தையும், வாழ்க்கையையும் முடிந்த வரையில் நன்கு அனுபவியுங்கள். உங்களில் யார் தவறு செய்தாலும் மன்னிக்கப் பழகுங்கள்.

சேர்ந்து சிரித்து மகிழ வேண்டியது மிகவும் முக்கியம்

சேர்ந்து சிரித்து மகிழ வேண்டியது மிகவும் முக்கியம்

நல்ல உணர்வுகள், முக்கியமாக மனமார்ந்த சிரிப்பு, மனக்கிலேசங்களை இலகுவாக்கி, மனங்களை ஒன்றிணைக்கக்கூடியதாகும். உள்ளூர இருக்கக்கூடிய தடுப்புகள், பதற்றம் முதலானவற்றை உடைத்தெறியக்கூடிய சக்தி சிரிப்புக்கு உண்டு. இவ்வளவு ஏன், மன அழுத்தத்துக்கு எதிராக போராடும் சக்தியும் கூட சிரிப்புக்கு உண்டு. வாய் விட்டு சிரிப்போரின் ஆயுட்காலம் நீடிக்கும் என்பதோடு வயது முதிர்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியையும் இது வெகுவாக கட்டுப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், எப்போதும் நல்ல சிந்தனைகளுடனும், உற்சாகத்துடனும் இருப்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயமாகும்.

தெளிவான முறையில் உரையாடுங்கள்

தெளிவான முறையில் உரையாடுங்கள்

மனதில் என்ன உள்ளது என்பதை திறம்பட படிப்பது என்பது எல்லோராலும் இயலாத ஒரு காரியமாகும். ஒருவர் மனதில் என்ன உள்ளது என்பதை மற்றொருவர் அறிந்து கொள்ள இயலாத காரணத்தினாலேயே பல தம்பதிகள் மனமுடைந்து போகிறார்கள். மனதில் என்ன இருக்கிறது என்பதை மிகவும் முயன்று படிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தெளிவான முறையில் மனதில் உள்ளவற்றை மற்றவர் அறிய பேசிக் கொள்வது, அதை விட எளிதான ஒன்றல்லவா? இதன் மூலம் உங்கள் நேரம் விரயமாவதை தவிர்ப்பதோடு, தவறான புரிதலால் வரக்கூடிய பல்வேறு பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். உரையாடலின் போது உங்களுக்கு என்ன தேவை என்பதை, புரியும் விதத்தில் எளிமையாக சொன்னாலே போதும்; அதை விடுத்து புதிராக பேசுவது தேவையற்றது.

பொறுப்புணர்ச்சி

பொறுப்புணர்ச்சி

பொறுப்பாக நடந்து கொள்வது உங்கள் அன்பை நிரூபிப்பதோடு, உங்களின் அன்புக்குரியவர்க்கு நீங்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்துவதற்கும் உதவும். இதன் மூலம் உங்களவர்க்கு நுட்பமான உங்களின் உள் மன உணர்வுகளை எளிதாக புரிய வைத்து, அவருக்காக நீங்கள் எதையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையை விதைக்க முடியும். பொறுப்பாக நடந்து கொள்வதன் மூலம் உங்கள் அன்புக்குரியவரின் நன்னம்பிக்கையை நீங்கள் கட்டாயம் பெறலாம். எந்த உறவுமுறையை எடுத்துக் கொண்டாலும், அதில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வதே மிகவும் முக்கியமானதாகும். வெறும் வாய்ச்சொல்லோடு நின்று விடாமல், அதனை செயல்படுத்திக் காட்டுவதில் தான் உங்கள் திறமை உள்ளது!

உறவுமுறை நெடுங்காலம் நிலைபெற்றிருக்க...

உறவுமுறை நெடுங்காலம் நிலைபெற்றிருக்க...

நீண்ட காலத்திற்கு உறவுமுறையை சந்தோஷமாக தக்க வைத்துக் கொள்வதற்கென ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. ஆரோக்கியமான உறவுமுறையை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் இந்த விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். வெவ்வேறு விதமான வாழ்வியல் சூழ்நிலைகளில் நியாயமாகவும், விவேகமாகவும் நடந்து கொள்வது மிக்க அவசியம். உங்கள் உறவுமுறை நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க எவை முக்கியமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Important Things Couples Should Know About Relationships

To have a lifetime of happiness together, every couple should know many important things about relationships. Check out the list of 7 important things couples should know about relationships.
Desktop Bottom Promotion