For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதல் வலையில் விழாமல் இருக்க சில அருமையான யோசனைகள்!!!

By Boopathi Lakshmanan
|

காதல் வலையில் விழாமல் தவிர்க்கும் பொருட்டாக நீங்கள் தவித்துக் கொண்டிருந்தால், இதோ உங்களுக்கு உதவ 5 டிப்ஸ்கள். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், அந்த மனிதர் மேல் காதல் எண்ணம் வராமல் தவிர்க்க முடியும்.

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

அதிலும் இந்த குறிப்புகளை ஒருசில வாரங்கள் பின்பற்றி வந்தால் போதும், காதல் உணர்வுகளை முழுமையாக உதறி விட்டு, நல்லெண்ணத்துடன் வெளியேறி வர முடியும். மேலும் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். அது என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவனத்தை மாற்றிக் கொள்ளுதல்

கவனத்தை மாற்றிக் கொள்ளுதல்

அந்த மனிதர் உங்களுடைய மனதை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். அந்த மனிதரைப் பற்றி யோசிப்பது, எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு இந்த முயற்சி வெற்றி பெறுவது சாத்தியமாகும். புதிய செயல்களைச் செய்வதன் மூலம் உங்களுடைய கவனத்தை வேறு பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தனிமையிலோ அல்லது வேலை செய்யாமல் சும்மா இருந்தாலோ, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களை செய்து வாருங்கள்.

மிகவும் நெருங்கிய நண்பராக வேண்டாம்

மிகவும் நெருங்கிய நண்பராக வேண்டாம்

அந்த நபருடன் நெடுநேரம் பேசுவதை தவிர்க்கவும். அதுவும் இரவு நேரங்களில் அவருடன் போனில் பேசுவதையோ அல்லது குறுந்தகவல்கள் அனுப்புவதையோ, மிகவும் நெருக்கமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதையோ அறவே தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நீங்கள் அவருடன் நட்பு ரீதியில் நெருங்கிப் பழகுவதோடு மட்டுமல்லாமல், ஆழமான காதலுக்கும் வழிவகுத்து விடுவீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

மோசமான பக்கத்தை காட்டுங்கள்

மோசமான பக்கத்தை காட்டுங்கள்

நம் அனைவரிடமும் குறைபாடுகள் உள்ளன. காதலில் விழுவதிலிருந்து தப்பிக்க நினைத்தால், நீங்கள் தவிர்க்க நினைக்கும் மனிதரின் மோசமான பக்கத்தை நன்கு கவனியுங்கள் மற்றும் அவருடைய குறைகளை கவனியுங்கள். அவரை அல்லது அவளை நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், அந்த மோசமான பக்கத்தை நினைவில் கொண்டிருங்கள். அதிலும் அவர் உங்களை காயப்படுத்தும் வகையில் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்டிருக்கவும். இது மிகவும் சிறப்பாக வேலை செய்து, அந்த நண்பரை நீங்கள் விரும்புவதை, இன்று மட்டுமல்லாமல் என்றென்றும் நிறுத்தி வைக்கும்.

வேறுபாடுகளை உணருதல்

வேறுபாடுகளை உணருதல்

ஒருவரிடம் காதல் வயப்படுவதற்கும் மற்றும் ஈர்க்கப்படுவதற்கும் மற்றும் ஆர்வம் ஏற்படுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஒரு பெண்ணோ அல்லது ஆணோ கவர்ச்சியாக இருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால், அதை விளையாட்டாகவோ அல்லது உண்மையிலேயே நீங்கள் அவரை காதலிக்கிறீர்கள் என்று பொருள் கொள்ள வேண்டாம்.

வேறொருவரிடம் கவனத்தை திருப்புதல்

வேறொருவரிடம் கவனத்தை திருப்புதல்

சில நேரங்களில், ஒருவரின் காதல் வலையிலிருந்து வெளியேற ஏற்ற மிகவும் எளிய வழியாக இருப்பது வேறொருவரின் மீது கவனம் செலத்துவது தான். இவ்வாறு உங்களுக்கு காதலில் விழாமல் கவனத்தை திருப்புவது மிகவும் கடினமான விஷயமாக இருந்தால், உங்களுடைய கவனத்தை, அவர் அல்லாத வேறொரு நபரின் மீது செலுத்தத் தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion