For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் துணையிடம் ஏன் உங்களின் கடந்த வாழ்க்கையை மறைக்கக்கூடாது என்பதற்கான 5 காரணங்கள்!!!

By Ashok CR
|

நீங்கள் ஒரு ஆணாக இருந்து, பல விதமான சில்மிஷ சேட்டைகளை செய்துள்ளீர்களா? அப்படியானால் கண்டிப்பாக உங்களின் பழைய வாழ்க்கையை உங்கள் காதலி அல்லது மனைவியிடம் மறைக்கவே செய்வீர்கள். ஆனால் என்றாவது ஒரு நாள் வெடிக்கக்கூடிய வெடி குண்டாகவே இது விளங்கும். ஒரு உறவில் ஆழமாக இறங்கிய பின்பு, தன் காதலனின் குணங்களைப் பற்றி தீவிரமாக ஆராயத் தொடங்குவார் அந்தப் பெண். அப்படி ஒன்று நடந்து விட்டால், உங்கள் குட்டு வெளிப்பட்டு விடும். இதனால் உங்கள் உறவின் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும்.

வெளிப்படையாக சொன்னால், உங்கள் பழைய வாழ்க்கையைப் பற்றி சொல்வதற்கு பயம் கொள்ள தேவையில்லை. அதற்காக நீங்கள் வெட்கப்பட தேவையில்லை. நாம் அனைவருமே மனிதர்கள் தானே. அதனால் தவறு செய்வது இயல்பு தான். நீங்கள் ஒன்றும் முற்றும் துறந்த முனிவர் இல்லை தானே. அதனால் மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் நீங்கள் வாழ வேண்டிய அவசியமில்லை. இதையும் மீறி நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மறைக்க விரும்பினால், அதை செய்யக்கூடாதற்கு சில காரணங்கள் உள்ளது. அதனைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் அகப்பட்டு கொண்ட பிறகு உங்கள் காதலி உங்களை சந்தேகப்படுவார்

நீங்கள் அகப்பட்டு கொண்ட பிறகு உங்கள் காதலி உங்களை சந்தேகப்படுவார்

உங்கள் காதலியிடம் உங்கள் கடந்த காலத்தை மறைப்பதால் என்னவாகும் என உங்களுக்கு தெரியுமா? உங்களின் பழைய உறவுகள் பற்றி ஒரு நாள் உங்கள் காதலிக்கு தெரிய வரும் போது, இனியும் அவர் எதையும் பொறுக்க மாட்டார். உங்கள் மீது சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார். தான் அவமதிக்கப்பட்டு விட்டதாக கருதுவார். உங்கள் உறவின் வருங்காலத்தின் மீது பாதுகாப்பின்மையை உணர்வார்.

உங்களை விட்டு பிரியலாம்

உங்களை விட்டு பிரியலாம்

உங்கள் கடந்த காலத்தை மறைப்பது சரியா? கண்டிப்பாக இல்லை. அதை மட்டும் அவர்களாகவே கண்டுபிடித்து விட்டால், உங்களை விட்டு நிரந்தரமாக பிரியவும் வாய்ப்புள்ளது. முதலில், நீங்கள் அவர் மீது உண்மையான காதலை கொண்டிருந்தால், ஏன் அவரிடம் இருந்து எதையும் மறைக்க வேண்டும்? அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உங்கள் கடந்த காலத்தை அவர் மன்னித்து உங்களை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை இல்லையா உங்களுக்கு? உங்கள் உறவின் மீது நீங்கள் உண்மையிலேயே மரியாதை வைத்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் நடந்துள்ள நல்லது, கெட்டது மற்றும் மோசமான அனைத்து கடந்த கால நிகழ்வுகளையும் அவரிடம் தைரியமாக கூறுங்கள்.

இந்த உறவு தொடர்ந்தாலும், வேறு யாருடனும் நெருங்கி பழக அவர் அனுமதிக்க மாட்டார்

இந்த உறவு தொடர்ந்தாலும், வேறு யாருடனும் நெருங்கி பழக அவர் அனுமதிக்க மாட்டார்

இன்னமும் உங்கள் கடந்த காலத்தை மறைக்க நினைக்கிறீர்களா? ஒரு நாள் என்ன நடக்கும் என தெரியுமா? உங்கள் கடந்த காலத்தை உங்கள் காதலி மன்னித்தாலும் கூட, இனி எந்த பெண்ணிடமும் நெருங்கி பழக உங்கள் காதலி அனுமதிக்க மாட்டார். அதற்கு காரணம் உங்கள் குணத்தின் மீது அவர் சந்தேகப்பட தொடங்குவார். ஆனால் அவராக அறிவதற்கு முன்பு, நீங்களே உங்களின் கடந்த காலத்தை பற்றி அவரிடம் சொல்லி விட்டால், உங்களின் வெளிப்படையை எண்ணி அவர் அசந்து போவார். அதனால் எதையும் மறைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்கள் உறவிற்கு நஞ்சாக அமைந்து விடும்.

அதே அளவில் உங்களை மீண்டும் காதலிக்க மாட்டார்

அதே அளவில் உங்களை மீண்டும் காதலிக்க மாட்டார்

தற்போது உங்கள் மீது குருட்டுத்தனமான காதலில் இருக்கும் உங்கள் காதலி, உங்களின் கடந்த காலத்தைப் பற்றி தாமாகவே கண்டுபிடித்து விட்டால், இப்போது உள்ள அதே அளவில் அவர் உங்களை காதலிக்க மாட்டார். அதற்கு காரணம் இந்த தர்மசங்கடத்தினால் அவர் காதலின் அளவு குறைந்து விடும். அப்படிப்பட்ட தருணம் வருவதற்கு முன்பு, நீங்களே பழைய வாழ்க்கையைப் பற்றி அனைத்தையும் கூறி விடுங்கள்.

மரியாதையை இழப்பீர்கள்

மரியாதையை இழப்பீர்கள்

ஒரு பெண்ணின் முன்பு ஒரு ஆண் மரியாதையை இழந்து விட்டால், அதற்கு பிறகு அவர் ஆணாகவே இருக்க முடியாது. அப்படி ஒரு நிலைமை வருவதற்கு முன்பு, உங்களின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அவரிடம் வேகமாக கூறி விடுங்கள். இன்னமும் உங்கள் பழைய வாழ்க்கையை மறைக்க நினைக்கிறீர்களா? வேண்டாம், ஒரு ஆணாக இருந்து தைரியமாக ஆரம்பியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Reasons Why You Must Never Hide Your Past

Frankly speaking, you don't need to feel scared about your past. Take a look at reasons why you must never hide your past from your girlfriend.
Desktop Bottom Promotion