For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தம்பதிகளே! நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்க சில அற்புதமான வழிகள்!!!

By Karthikeyan Manickam
|

இந்தக் காலத்தில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ்க்கையை நடத்திச் செல்வது அவ்வளவு சாதாரணம் கிடையாது. இஞ்சி வாங்குவதிலிருந்து காரைக் கழுவித் துடைப்பது வரை ஏதாவது பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது.

'புசுக்'கென்றால் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் பெண்கள் போவது முன்பெல்லாம் சகஜம். ஆனால் விவாகரத்துக்கள் குண்டக்க மண்டக்க அதிகமாகிக் கொண்டிருக்கும் இப்போதைய சூழ்நிலையில் பிரச்சனைக்குரிய மக்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

4 Things Happy Couples Don’t Do No Matter What Happens

கணவன்-மனைவி இருவருக்குமே இந்தக் காலத்தில் கடமைகள் அதிகரித்துள்ளன. பொறுப்புணர்ச்சியும், கடின உழைப்பும், உணர்ச்சிமிக்க காதலும் தான் அவர்களுக்கிடையிலான உறவை மேலும் இறுக்குகின்றன. மேலும் அன்பான தம்பதிகள் சில பழக்கங்களை எப்போதுமே கடைப்பிடிப்பார்கள். அப்படிப்பட்ட பழக்கங்களில் சில இதோ...

டீம் ஒர்க் தரும் நூற்றுக்கு நூறு

சந்தோஷமாக இருக்கும் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலுமே நூற்றுக்கு நூறு ஸ்கோர் செய்வார்கள். தம் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளையுமே 'நீ முந்தி, நான் முந்தி' என்று போட்டி போட்டுக் கொண்டு செய்து முடிப்பார்கள். இதற்கு பெரும்பாலும் அவர்களுடைய டீம் ஒர்க் தான் காரணமாக இருக்கும்.

எப்போதும் பாராட்டு தான்

சின்னச் சின்ன நல்ல விஷயங்களுக்குக் கூட ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதும், தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். அப்படிப் பாராட்டிக் கொள்ள ஒருவேளை மறந்து விட்டாலும், ஞாபகம் வந்ததும் ஒரு குட்டி மன்னிப்பு கேட்டு & ஒரு பெரிய 'உம்மா' கொடுத்து நிலைமையை சரி செய்து விடுவார்கள்.

நிபந்தனையற்ற அன்பு

"நீ இன்னது செய்தால் தான் நான் உன்னிடம் இப்படி இருப்பேன்" என்று அன்புக்கு நிபந்தனைகள் விதிக்க முடியாது. நெகட்டிவ்வான விஷயங்கள் நடக்கும் போதும் ஒருவரையொருவர் தூற்றிக் கொள்ளக் கூடாது. கணவன்-மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழும் போது, அவர்கள் சந்தோஷத்திற்குக் கியாரண்டி கொடுக்கலாம்.

'உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்...'

சந்தோஷமாக இருக்கும் தம்பதிகளை நன்றாக உற்றுப் பாருங்கள். அவர்களுக்கிடையில் வீட்டுக்குள் சின்னச் சின்னப் பிரச்சனைகள் இருந்தாலும், ஒவ்வொரு நொடியையும் அவர்கள் துளித்துளியாக மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் ஒரு பிரைவஸி இருக்கும். அந்தச் சிறு சுதந்திரமும், தங்களுடைய மகிழ்ச்சிக்குத் தேவை என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.

English summary

4 Things Happy Couples Don’t Do No Matter What Happens

Happy couples don’t need to perform mental and emotional gymnastics on a daily basis to keep their torch lit. Here are four things gold medal partners do not do in the game of love.
Desktop Bottom Promotion