முத்த விஷயத்தில் எப்படியெல்லாம் நாம் சொதப்புகிறோம் என்று தெரியுமா?

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

முத்தத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது. ஒவ்வொரு உறவுக்கும் ஒரு குறிப்பிட்ட முத்த முறை இருந்தாலும், ஒவ்வொருவரும் தன் துணைக்குத் தரும் முத்தம் தான் அலாதியானது; அன்பானது; செக்ஸியானது; மனதை வருடக் கூடியது; வெட்கப்பட வைப்பது... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!

நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா 'நச்'சுன்னு இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

நீங்கள் கொடுக்கும் ஒரு சிறு முத்தத்தில் கூட உங்கள் துணை வீழ்ந்து உங்கள் காலடியில் விழ வேண்டும். அந்த அளவுக்கு அது அழுத்தமாக இருக்க வேண்டும். ஆனாலும், பலரும் தங்களின் முதல் முத்தத்தில் கடுமையாகச் சொதப்பி இருப்பார்கள். முதலில் மட்டுமல்ல, ஏகப்பட்ட முறை சொதப்பலாக முத்தம் தந்து, தன் துணையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

முதல் முத்தம்.. எப்படித் தரனும் தெரியுமா...?

நீங்கள் முத்தத்தில் எந்த அளவுக்கு எக்ஸ்பெர்ட் என்பதை உங்கள் துணை தான் சொல்ல வேண்டும். முத்தம் கொடுக்கும் போது பலவிதமான தவறுகள் ஏற்படலாம். நாக்கைப் பலமுறை சுழற்றுவது, ஈரமான உதடுகள், வாய் 'கப்' அடிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் உங்கள் துணைக்குப் பிடிக்காமல் போகலாம். இவற்றையெல்லாம் ஆரம்பத்திலேயே சரி செய்தால் தான் இருவருக்கும் சுகம்!

இங்கு முத்த விஷயத்தில் எப்படியெல்லாம் நாம் சொதப்புகிறோம் என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

முத்தம் கொடுக்கும் இடங்களும்... அதற்கான அர்த்தங்களும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஓவரான நாக்கு சுழற்றல்

வாயோடு வாய் வைத்து முத்தமிடுகிறேன் என்று கூறி, உணர்ச்சிவசப்பட்டு தன் துணையின் நாக்கைத் தன் நாக்கால் துழாவுவது ஒரு முக்கியச் சொதப்பல் ஆகும். ஆகவே அடுத்த முறை நீங்கள் முத்தமிடும் போது உங்கள் பார்ட்னர் ஓடிவிடாமல் மென்மையாக கொடுங்கள்.

அரைத்த மாவு

ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும் ஒரு வெரைட்டி காண்பிக்க வேண்டும். அரைத்த மாவையே அரைப்பது போல், ஒரே விதமான முத்தத்தையே கொடுத்துக் கொண்டிருந்தால் விரைவில் சலித்து விடும்.

உலர்ந்த உதடுகள்

முத்தம் என்பது மென்மையாகவும், ஸ்வீட்டாகவும், ஸ்மூத்தாகவும் இருக்க வேண்டும். அதற்கு உங்கள் உதடுகளும் ஸ்மூத்தாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் துணையின் உதடுகளும் முகமும் ரணகளமாகிவிடும்.

வற்புறுத்தி...

உங்கள் துணைக்கு வற்புறுத்தி முத்தம் கொடுக்கக் கூடாது. இது ஒரு மோசமான பழக்கமாகும். இருவரும் நன்றாக மூடை ஏற்படுத்திக் கொண்டு, விருப்பத்துடன் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டால் தான் எதிர்பார்ப்பு அதிகமாகும்.

படபடப்பு

முத்தம் கொடுக்கும் போது அதில் மட்டும் தான் முழு கவனமும் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு படபடப்புடன் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.

கண்ட இடங்களையும் தடவுதல்

முத்தம் கொடுக்கும் போது, அவ்வப்போது பார்ட்னரின் சில இடங்களையும் தடவிக் கொடுத்தல் நல்லது. ஆனால் கண்ட கண்ட இடங்களையும் ஓவராகத் தடவிக் கொண்டிருக்கக் கூடாது.

மூச்சு முக்கியம்

தன் துணைக்கு உம்மா கொடுக்கிறேன் பேர்வழி என்று சிலர் மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு அழுத்திக் கொண்டிருப்பார்கள். கொஞ்சமாவது மூச்சு விடுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.

அசமந்தம்

உங்கள் துணைக்கு நீங்கள் ஆற அமர அசமந்தமாக முத்தம் கொடுக்கக் கூடாது. இருவரும் சுறுசுறுப்பாகக் கொடுத்துக் கொண்டால் தான் முத்தம் இனிக்கும்!

கண்களைத் திறந்து கொண்டு...

சில ஆண்கள் தம் துணைக்கு முத்தம் கொடுக்கும் போது, கண்களைத் திறந்து கொண்டு கண்ட இடத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுடைய பார்ட்னருக்கு பெரும் அசவுகரியத்தைத் தான் கொடுக்கும்.

உதடுகளைக் கடித்தல்

சிலர் சூப்பர் உம்மா கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, துணையின் உதடுகளைக் கடித்துக் குதறிக் கொண்டிருப்பார்கள். முத்தம் என்பது மென்மையாக இட வேண்டிய ஒரு சமாச்சாரமாகும்.

சர்ப்ரைஸ் இல்லாமல்...

சில ஆண்கள் 'நான் இப்போ உனக்கு முத்தம் கொடுக்கப் போறேன்' என்று முன் அறிவிப்பு செய்து விட்டுத்தான் கொடுப்பார்கள். இதனால் அவர்களுடைய பெண் துணைக்கு ஒரு சர்ப்ரைஸும் இல்லாமல் 'சப்'பென்று போய் விடும்.

 

 

எப்போதும் மென்று கொண்டிருத்தல்

நீண்ட நேரம் முத்தம் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு, தன் துணையின் உதடுகளை ஓவராக மென்று கொண்டே இருக்கக் கூடாது. உங்கள் முத்தம் எப்போதும் படு ஸ்மூத்தாக இருக்க வேண்டும்.

உதட்டில் மட்டும் கவனம்

துணையின் உதடுகளில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருத்தல் ஒரு பெரிய முத்தத் தவறாகும். துணையின் அனல் பறக்கும் மற்ற சில முக்கிய அங்கங்களையும் மெலிதாகத் தொட்டுத் தடவிக் கொடுக்க வேண்டும்.

செத்த முத்தம்!

உங்கள் துணைக்குக் கொடுக்கும் ஒவ்வொரு முத்தமும் அழுத்தம் திருத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். சும்மா ஏதோ கடமைக்குக் கொடுக்கும் செத்துப் போன முத்தமாக அது இருக்கக் கூடாது.

 

 

மோசமான வாசனை

உங்கள் துணையின் உதடுகளில் முத்தம் கொடுக்கும் போது உங்கள் வாயிலிருந்து கடுமையான துர்நாற்றம் கிளம்பிவிடக் கூடாது. நாளைக்கும் அவர்கள் உங்களை முத்தமிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Kissing Mistakes Every Couple Makes

Guys make multiple mistakes while kissing their partner. Here are some of the kissing mistakes every couple makes. Don't miss this.
Story first published: Friday, November 14, 2014, 12:29 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter