For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறவுகளால் காயமடைந்த மனதை சரிசெய்ய சில சுலபமான வழிகள்!!!

By Ashok CR
|

பல உறவுகள் காயங்கள் மற்றும் வலி மிகுந்த காலங்களை கடக்கும். இருப்பினும் இந்த காயங்களும், வலிகளும் நிரந்தமானவை அல்ல என்பதை புரிந்து கொள்வது முக்கியம். அவைகளை கடந்து சென்றால் தான், வாழ்க்கையை தொடர்ந்து நம்மால் வாழ முடியும். நீங்கள் உங்கள் துணையை அளவுக்கு அதிகமாக நேசித்தாலும் கூட, பல காரணங்களால், அவரால் நீங்கள் காயப்பட்டிருக்கலாம்.

இப்போது உங்களுக்கு இரண்டு வழிகள் உள்ளது; ஒன்று அந்த உறவை முடித்துக் கொள்வது அல்லது அந்த காயங்களை மறந்து நடை போடுவது. நீங்கள் இரண்டாவது பாதையை தேர்ந்தெடுத்தால், அந்த காயங்களை ஆற்றும் சில வழிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுவாரஸ்யமான வேறு: ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 10 விஷயங்கள்!!!

உறவில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்ற, அடித்தளத்தில் இருந்து நீங்கள் தொடங்க வேண்டும். பிரச்சனையின் ஆழத்திற்கு சென்று, அந்த காயங்களை அகற்ற முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் துணையை மனமார நேசித்தால், உங்கள் உறவில் ஏற்பட்டுள்ள காயங்களை அகற்ற பல வழிகளை முயற்சி செய்ய தயங்காதீர்கள். ஒரு உறவில் காயப்படுவது பொதுவான ஒன்றே. அதனால் அதோடு உலகம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். இந்த காயங்கள் ஆறுவதற்கான வழிகளை கண்டுபிடித்தால் தான், வலி மிக்க அந்த காலத்தை கடக்க முடியும்.

அவசியம் படிக்க வேண்டியவை: பெண்கள் ஆண்களிடமிருந்து மறைக்க வேண்டிய விஷயங்கள் இதுதான்...

வலியும் காயங்களும் உங்கள் உறவிற்கு நல்லதல்ல. இருப்பினும் அனைத்திற்கும் ஒரு நேரம் உள்ளது. அதனால் தீர்வு வேண்டும் என்பதற்காக பறக்காதீர்கள். காலம் உங்கள் காயங்களுக்கு மருந்தாக மாறும். அதுவே உங்களுக்கு ஏற்று நடக்கவும் செய்யும். அதனால் போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டு, ஒரு உறவை சரி செய்வது எப்படி என்பதை சரியான முறையில் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உங்கள் உறவில் வலியை ஏற்படுத்தும் காயங்களை அகற்றுவதற்கான சுலபமான வழிகள், இதோ:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரத்தை ஒன்றாக செலவழியுங்கள்

நேரத்தை ஒன்றாக செலவழியுங்கள்

காலம் பலவற்றையும் ஆற்றும். உடைந்த இதயங்கள் மீண்டு வருவதற்கு சிறிது காலம் தேவைப்படும். அதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் போதிய நேரத்தை அளித்திடுங்கள். இந்த நேரத்தை ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ கழிக்கலாம்.

தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்

தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்

உங்கள் துணையை ஒரு குறிப்பிட்ட தவறுக்காக நீங்கள் காயப்படுத்தியிருந்தால், அந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள். காயங்களை எப்படி ஆற்ற வேண்டும் என்பதை நீங்கள் அறிய வேண்டுமானால், உங்கள் தவறுகளை நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது.

மன்னிப்பு கேளுங்கள்

மன்னிப்பு கேளுங்கள்

மன்னிப்பு கேட்பது என்பது சுலபமே. ஆனால் அதை உணர்ந்து கேட்பது தான் கடினம். அதனால் நீங்கள் மனதார உணர்ந்தால் மட்டுமே மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்கும் போது எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் இருங்கள். மன்னிப்பு கேட்பதால் ஒன்றும் நீங்கள் குறைந்து போய் விட மாட்டீர்கள்.

மன்னிப்பதற்கு கால தாமதம் எடுத்துக் கொள்ளாதீர்கள்

மன்னிப்பதற்கு கால தாமதம் எடுத்துக் கொள்ளாதீர்கள்

ஒருவரை மன்னிப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளாதீர்கள். காரணம் அவரை மன்னிக்க நீங்கள் நீண்ட காலம் எடுக்கும் வேளையில், அவரை முழுமையாக வெறுக்க தொடங்கி விடுவீர்கள்.

சுறுசுறுப்பாக வேலையை பாருங்கள்

சுறுசுறுப்பாக வேலையை பாருங்கள்

உங்கள் மனம் சரியில்லாமல் இருக்கும் நேரத்தில், மனதை நிலைப்படுத்த, சுறுசுறுப்புடன் வேலையை பாருங்கள். உறவுகளில் ஏற்பட்டுள்ள காயங்களை சரிசெய்ய, சில நேரங்களில் இதுவும் முக்கியமானதாக உள்ளது.

தூங்க செல்லும் போது சண்டையை மறந்து விடுங்கள்

தூங்க செல்லும் போது சண்டையை மறந்து விடுங்கள்

உங்கள் சண்டைகள் மற்றும் தவறான புரிதல்களை தூங்கச் செல்லும் போது மறந்து விடுங்கள். காலையில் விழிக்கும் போது, பிரச்சனைகளின் மீதான உங்கள் பார்வை தெளிவாகிவிடும். அதனால் காயங்களையும், வலிகளையும் தூங்கும் போது மறந்து விடுவதும், ஒரு சிறந்த வழியாகும்.

அவசரப்படாதீர்கள்

அவசரப்படாதீர்கள்

காயம் ஏற்பட்டு அது ஆறாமல் இருக்கும் நேரத்தில், உடனடியாக அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்காதீர்கள். இது நிலைமையை இன்னும் மோசமடைய தான் செய்யும். காயங்களை ஆற்ற நீங்கள் மெதுவாக பொறுமையாக தான் செயல்பட வேண்டும்.

கண்ணியத்தை காத்திடுங்கள்

கண்ணியத்தை காத்திடுங்கள்

என்ன நடந்தாலும் சரி, உங்கள் கண்ணியத்தை காப்பது முக்கியமான ஒன்றாகும். எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் உங்கள் சுய மரியாதையை இழந்து விடாதீர்கள்.

வலியை கடந்து செல்வோம்

வலியை கடந்து செல்வோம்

வலியுடன் வாழ்வது சுலபமல்ல. அன்றாடம் வலியுடன் நாட்களை கடப்பது, நரகத்தில் வாழ்வதை போன்றதாகும். அதனால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக நடை போட, உங்கள் துணையால் ஏற்பட்டுள்ள காயங்களை மறந்து விடுங்கள்.

மற்றவர்கள் காயங்களை ஆற்றுவதற்கு முன்பாக உங்கள் காயங்களை ஆற்றுங்கள்

மற்றவர்கள் காயங்களை ஆற்றுவதற்கு முன்பாக உங்கள் காயங்களை ஆற்றுங்கள்

நீங்களே ஏதோ காரணத்தினால் காயப்பட்டிருந்தால், நீங்கள் எப்படி அடுத்தவர்களின் காயத்தை ஆற்ற முடியும். அதனால் முதலில் உங்கள் காயங்களை நிவர்த்தி செய்யுங்கள். அதன் பின் உங்கள் உறவில் ஏற்பட்டுள்ள காயங்களை சரி செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Ways To Heal A Hurtful Relationship

Pain and hurt are not good for you or your relationship. However, there is a time for everything. So never rush into a solution. Here are some easy steps to heal a relationship that is causing you pain:
Desktop Bottom Promotion