For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தம்பதிகள் பொதுவாக மறந்துவிடும் 10 எளிய உறவுமுறை விதிமுறைகள்!!!

By Ashok CR
|

ஒரு உறவை வெற்றிகரமானதாக ஆக்க சில முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். ஒரு உறவு ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் நீடிக்க கணவன் மனைவி என இவருடைய பரஸ்பர பங்களிப்பும், தியாகங்களும் முக்கியமானதாகும். உண்மையான சந்தோஷத்தை அனுபவித்திட சில நேரங்களில் வாழ்க்கையை கொஞ்சம் உப்புடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். உறவின் அடிப்படையில், ஒரு உறவு வெற்றிகரமாக அமைவதற்கான எளிய விதிமுறைகளை தான் இப்போது பார்க்க போகிறோம்.

தம்பதிகள் பொதுவாக மறக்கிற சில எளிய விஷயங்களையும், அதனால் ஏற்படுகிற பிரச்சனைகளையும் தான் பார்க்க போகிறோம். எந்த ஒரு உறவுமுறையும் சரியானதாக இருப்பதில்லை. அதை நாம் தான் சரியானதாக அமைத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக நாம் அனைவரும் ஒத்துக் கொள்ளும் விஷயம் தான் இது.

இதனை மனதில் கொண்டு ஒவ்வொரு தம்பதிகளுக்கும் தேவைப்படும் உறவுமுறை விதிமுறைகளை நாம் சற்று ஆய்வோம். ஒரு உறவு வெற்றிகரமாக அமைவதற்கு உதவிடும் இந்த விதிமுறைகளைப் பற்றி விவரமாக பார்க்கலாம். இதோ, தம்பதிகளுக்கான 10 உறவுமுறை விதிமுறைகள்! இந்த விதிமுறைகளை கடைப்பிடித்தால், உங்கள் உறவின் வாழ்வாதாரம் நீடித்து, அதனால் நீங்கள் மகிழ்ச்சியையும் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மறையான விமர்சனங்கள்

நேர்மறையான விமர்சனங்கள்

உங்கள் துணையின் முயற்சிகளின் மீது குறைந்தது இரண்டு அல்லது மூன்று நேர்மறை விமர்சனங்களையாவது அளிக்க மறந்துவிடாதீர்கள். சொல்ல வேண்டுமே என்ற கடமைக்காக தயவு செய்து சொல்லாதீர்கள். அப்படி செய்தால் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டுமே என்ற கட்டாயத்தினால் தான் செய்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிந்து விடும். உங்கள் உறவு ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமானால் உங்கள் துணியை மனதார பாராட்டுங்கள்.

தவறு இழைக்கும் போது மன்னியுங்கள்

தவறு இழைக்கும் போது மன்னியுங்கள்

ஒரு உறவிற்கு மத்தியில் ஈகோ தலைவிரித்து ஆடினால் கண்டிப்பாக அந்த உறவை காப்பாற்ற முடியாது. விருப்பத்தகாத செயலினால் உங்கள் துணை தவறு செய்திருந்தால் அவர்களை மன்னிக்க வேண்டியது கட்டாயமாகும்.

மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தாதீர்கள்

மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தாதீர்கள்

உங்கள் துணையை மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தாதீர்கள். இதனால் உங்கள் உறவில் உள்ள ஆரோக்கியமான சூழல் பாதிக்கப்படும். மன்னிப்பு கேட்பது என்பது எந்த ஒரு கட்டாயமும் இன்றி தானாக நடக்க வேண்டும்.

முக்கியமான மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது

முக்கியமான மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது

குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் புறக்கணிக்காதீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களோடு சமமான தொடர்பில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் துணையின் மீது தீவிர காதலில் இருக்கிறீர்கள் என்ற காரணத்தினால் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நபர்களை மறக்க வேண்டும் என்றில்லை.

உங்கள் துணை செய்யும் தவறை விமர்சிப்பது

உங்கள் துணை செய்யும் தவறை விமர்சிப்பது

உங்கள் துணையிடம் இருக்கும் எதிர்மறையான குணங்கள்/நடவடிக்கைகளை நீங்கள் விமர்சிப்பது இயல்பாக நடக்க கூடியது தான். இந்த முக்கியமான பழக்கத்தை நிறுத்து விடாதீர்கள். உங்கள் துணை கோபமாக இருந்தாலும் சரி, எரிச்சலாக இருந்தாலும் சரி, அவர்கள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட தவற விடக் கூடாது.

சத்தியங்களை மீறாதீர்கள்

சத்தியங்களை மீறாதீர்கள்

சத்தியங்களை மீறாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களால் செய்ய முடியாத விஷயத்திற்கு எல்லாம் தேவையில்லாமல் சத்தியம் செய்யாதீர்கள். நீங்கள் கொடுத்த எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த வாக்கை மீற செய்யும் விஷயங்களை உள்ளே நுழைய விடாதீர்கள்.

கோபத்தில் முடிவெடுக்காதீர்கள்

கோபத்தில் முடிவெடுக்காதீர்கள்

கோபத்தில் எடுக்கும் முடிவு பகுத்தறிவற்றதாக இருக்கும். அதனால் கோபத்தில் இருக்கும் போது எதையும் பேசாதீர்கள்; அதே போல் எதையும் செய்யாதீர்கள். அப்படி செய்தால் அது உங்கள் உறவை பாதிப்பதோடு நிற்காமல், முட்டாள்தனங்களை அரங்கேற்றும்.

உங்கள் மாமனார் மற்றும் மாமியாருக்கு உதவிடுங்கள்

உங்கள் மாமனார் மற்றும் மாமியாருக்கு உதவிடுங்கள்

திருமணமானவுடன் பலரும் தங்களின் மாமனார் மற்றும் மாமியாரை மறந்து விடுவார்கள். மாறாக, அவர்களுக்கு உதவியாக இருந்தால், அது மறைமுகமாக உங்களுக்கு பல வழிகளில் உதவிடும். முயற்சி செய்து பார்த்ததில்லையா? இன்றே தொடங்குங்கள்.

உடலுறவின் மீது எப்போது பார்த்தாலும் விருப்பமின்மையை காட்டாதீர்கள்

உடலுறவின் மீது எப்போது பார்த்தாலும் விருப்பமின்மையை காட்டாதீர்கள்

உடலுறவின் மீது எப்போது பார்த்தாலும் விருப்பமின்மையை காட்டாதவாறு உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு உறவு நீடித்து நிலைத்திட உடல் ரீதியான ஈர்ப்பும் உடலுறவும் மிகப்பெரிய தூண்களாகும்.

தனிமையில் நேரத்தை செலவிடுங்கள்

தனிமையில் நேரத்தை செலவிடுங்கள்

தனிமையில் நேரத்தை செலவிட்டால், பல விஷயங்கள் பிரதிபலிக்க அது உதவியாக இருக்கும். அது உறவை பற்றிய விஷயங்களோடு மட்டும் நிற்பதில்லை. உங்கள் உறவை எதிர்மறையான விஷயங்களால் ஏன் பாதிக்கப்படுகிறது என்பது கூட சுய பிரதிபலிப்பால் தெளிவடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Simple Relationship Rules Couples Generally Forget

Here are 10 relationship rules for couples. Incorporating these rules for a happy relationship will take you a long way in enjoying sustenance and integrity in the relationship. Read on....
Story first published: Friday, October 31, 2014, 19:02 [IST]
Desktop Bottom Promotion