For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் காதலனுக்கு உங்கள் மீது நாட்டம் குறைவதற்கான 10 அறிகுறிகள்!!!

By Ashok CR
|

சிலருக்கு சில நேரங்களில் தங்களின் உறவின் மீதான நாட்டம் குறையத் தொடங்கி விடும். இது தற்காலிகமான உணர்வாக இருக்கலாம் அல்லது நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த உறவுக்கே முற்றுப் புள்ளி வைக்கும் அளவிற்கு வந்து விடலாம். உறவின் மீதான நாட்டம் குறைவதற்கு பல காரணிகள் உள்ளதால், அதனை யூகிப்பது சற்று சிரமமே.

உறவின் மீதான நாட்டம் வேகமாக குறைவது ஆணுக்கா அல்லது பெண்ணுக்கா என்பதை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது. ஆனால் நம் புரிதலின் படி, உறவின் மீதான நாட்டம் குறைவதில் ஆண்களும் பெண்களும் சரிசமமான வீதத்தில் பங்கு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

உடலுறவு பற்றி கணவன் - மனைவி ஏன் வெளிப்படையாக பேசிக் கொள்ள வேண்டும்?

இன்று, ஆண்களின் கோணத்தில் இருந்து தான் நாம் சிலவற்றை காண போகிறோம். உங்கள் உறவின் மீது உங்கள் காதலனுக்கு ஏன் நாட்டம் குறைகிறது என்பதை தான் பார்க்க போகிறோம். உங்கள் காதலனுக்கு உங்கள் மீதான நாட்டம் குறைவதற்கு என்ன காரணங்கள் உள்ளது என்பதையும் பார்க்கலாம்.

ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 10 விஷயங்கள்!!!

ஒரு ஆணுக்கு உறவின் மீது பிடிப்பு குறைந்து கொண்டே போவதற்கு பல காரணிகள் உள்ளது. அது ஏன் நடக்கிறது என்று ஆழமாக நாம் போய் பார்க்க போவதில்லை; காரணம் நம் கவனமெல்லாம் உங்கள் காதலனுக்கு உங்கள் மீதான நாட்டம் குறைவதற்கான அறிகுறிகளை பற்றிப் பார்ப்பது தான். அதனால் உங்கள் காதலனுக்கு ஏன் உங்கள் மீதுள்ள காதல் குறைகிறது என்பதை பற்றி சற்று விவரமாக பார்க்கலாம். இதோ அதற்கான 10 அறிகுறிகள்! இதனை உறவு பிரிவதற்கான அறிகுறிகளாகவும் பார்க்கலாம். தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 திட்டங்கள் என்ன?

திட்டங்கள் என்ன?

எப்போதும் இல்லையென்றாலும் கூட, பல நேரங்களில் உங்கள் காதலன் தான் திட்டங்களை எல்லாம் போடுவார். திடீரென அப்படி நடக்காமல் போகலாம். உங்கள் மீதுள்ள நாட்டம் குறைவதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும்.

அதிகமாக கத்துபவர் திடீரென ஊமை சாமியாராகி விடுவார்

அதிகமாக கத்துபவர் திடீரென ஊமை சாமியாராகி விடுவார்

உங்கள் மீது நாட்டம் குறைவதற்கு மிகவும் திடமான மற்றொரு அறிகுறி இதுவாகும். திடீரென அவர் மிகவும் பிடிவாதம் பிடித்து, அறிவற்ற வகையில் நடந்து கொள்வார். அதற்கு முக்கிய காரணமே உங்கள் உறவின் மீது அவர் திருப்தி அடையாததே.

உங்களை தவிர்க்க முயற்சிப்பார்

உங்களை தவிர்க்க முயற்சிப்பார்

நீங்கள் அவரை சந்திக்க ஆசைப்பட்டால், அதனை தவிர்க்க அவர் காரணங்களைக் கண்டுப்பிடிப்பார். அதில் பல காரணங்கள் மிகவும் சப்பையாக இருக்கும். உங்களை தவிர்ப்பதற்கு அவராலான அனைத்தையும் செய்வார். அதற்கு அவர் அளிக்கும் காரணங்களும் அறிவற்றதாக இருக்கும்.

உங்களிடம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பொய் கூறுவார்

உங்களிடம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பொய் கூறுவார்

இது போன அறிகுறியுடன் மிகவும் நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளது. உங்களிடம் அடிக்கடி பொய் சொல்ல ஆரம்பிப்பார். மிக அரிதாகவே உண்மை பேசுவார். உங்கள் மீதான நாட்டம் குறைவதற்கான மற்றொரு ஆணித்தனமான அறிகுறி இது. அதற்கு முக்கிய காரணமே இந்த உறவில் இருந்து அவருக்கு எதுவும் தேவைப்படாது அல்லது உறவின் மீது அதிருப்தி கொள்ளுதல்.

உடலுறவின் மீதான நாட்டம் இல்லாதது. உங்களுக்குள் அது நடப்பதும் நின்றுவிடும்

உடலுறவின் மீதான நாட்டம் இல்லாதது. உங்களுக்குள் அது நடப்பதும் நின்றுவிடும்

முன் இருந்ததை போல் உடலுறவு இருப்பதில்லை. விருப்பமின்மை உச்சியை தொட்டுள்ளது என்பதே இதற்கு அத்தாட்சி. உடல்ரீதியான நெருக்கத்தையும் அவர் தவிர்க்க நினைப்பார்.

உங்களை விட பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது

உங்களை விட பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது

உங்களை விட பிற விஷயங்கள் முக்கியத்துவத்தை பெறும்; அது மிகவும் சில்லரைத்தனமான விஷயமாக கூட இருக்கும். இனிமேலும் அவருக்கு நீங்கள் முக்கியமானவரல்ல.

ஒத்துப்போகும் முயற்சிகள் எடுப்பதை அவர் நிறுத்தி விடுவார்

ஒத்துப்போகும் முயற்சிகள் எடுப்பதை அவர் நிறுத்தி விடுவார்

சண்டைகள் அடிக்கடி நடக்கும்; தப்பு அவர் மீது இருந்தாலும் கூட அவர் மன்னிப்பு கேட்பதில்லை. இருவரும் ஒத்துப்போகும் முயற்சிகளையும் கூட அவர் எடுப்பதில்லை.

எப்போதும் முரட்டுத்தனமாக இருப்பார்

எப்போதும் முரட்டுத்தனமாக இருப்பார்

அடிக்கடி மோசமான சண்டைகள் அரங்கேறும். அப்படி நடக்கும் சண்டைகளில் அவர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார். சண்டை போடுவதற்கு காரணங்களைத் தேடி அலைவார். எப்போதுமே முரட்டுத்தனமாக நடப்பார்.

உங்கள் அழைப்புகளை அவர் எடுப்பதில்லை. அவரும் உங்களை அழைப்பதில்லை

உங்கள் அழைப்புகளை அவர் எடுப்பதில்லை. அவரும் உங்களை அழைப்பதில்லை

அழைப்புகள் இல்லை. தகவல்கள் மற்றும் எஸ்.எம்.எஸ். இல்லை. உங்கள் அழைப்புகளையும் எடுப்பதில்லை. அவரை பிடிக்கவும் முடிவதில்லை.

அவரை நீங்கள் கேள்வி கேட்கும் போது விந்தையாக நடந்து கொள்வார்

அவரை நீங்கள் கேள்வி கேட்கும் போது விந்தையாக நடந்து கொள்வார்

நீங்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினால் - முரட்டுத்தனம், அறிவற்ற செயல் மற்றும் தவிர்த்தல் ஆகிய குணங்களை தான் அவரிடம் காணலாம். உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் விரும்புவதில்லை.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Signs Your Boyfriend Is losing Interest In You

Let us go ahead and look into these signs your man is losing interest in you. Here are 10 tangible signs your boyfriend is losing interest.
Desktop Bottom Promotion