உங்கள் துணை உங்களோடு உறங்க விரும்புவதற்கான பத்து அறிகுறிகள்!!!

By: Srinivasan P M
Subscribe to Boldsky

ஆண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த மிகவும் வெளிப்படையாக இருப்பர். ஆனால் பெண்கள் தங்கள் மனதிலுள்ள தாகத்தை வெளிப்படுத்த மிகவும் வெளிப்படையாக இருப்பது கடினம். அதனால் தான் ஆண்களுக்கு பெண்கள் உணர்வுகளை அறிந்து கொள்வதும் அவர்கள் உங்களுடன் உறங்க விரும்புவதை தெரிந்து கொள்வதும் அவசியம். அவள் உறவில் ஈடுபடத் தன் தேவையை வெளிப்படுத்தும் போது காட்டும் அறிகுறிகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே உங்களால் அவள் மனதை வெல்ல முடியும். நீங்கள் மிகவும் புத்திசாலியாக ஒரு பெண்ணை நன்கு புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இல்லையெனில் அனைத்து வித இன்னல்களுக்கும் ஆளாக நேரிடும்.

உங்களுடன் அவள் உறங்குவதற்குக் காட்டும் சிக்னல்கள் அப்பட்டமாக எப்போதும் தெரிவதில்லை. அவ்வாறு அப்பட்டமாக இருக்கும் பெண்களிடம் காதல் கொள்வதும், அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. பெண்கள் புதிரானவர்கள் என்பதோடு, ஆண்களும் அவர்களை அப்படி இருப்பதையே விரும்புகிறார்கள். உங்களுடன் உறங்க அவள் கொண்டுள்ள ஆசை இலைமறைகாயாகத் தான் இருக்கும், அவர்களின் பிற குணங்களைப் போல. எனவே அவள் உங்களுடன் உறவில் ஈடுபட விரும்பி அதற்கான குறிப்பை வெளியிடும் போது, அவள் அடிப்படையில் அந்த உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறாள் என்று அர்த்தம்.

உங்கள் துணை உங்களை படுக்கையில் விரும்புவதற்கான அறிகுறிகளை நீங்கள் கவனிக்கும் போது, ஒரு நேர்மையான ஆலோசனையைப் பெற்று, உங்கள் எண்ணங்களின் படி நடக்காமல் கவனமுடன் இருங்கள். ஏனெனில் ஆண்களின் எண்ணங்கள் ஒருபோதும் ஒத்துப்போகாது. எனவே நீங்கள் அடிப்படை வழிமுறைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றி "அலைஞ்சான்" என்ற பட்டத்திற்கு ஆளாகாமல் இருங்கள். அவள் உங்களுடன் உறவில் ஈடுபடத் தயாரக இருப்பதற்கு வெளிப்படுத்தும் குறிப்புகள் உங்களுக்காக இதோ..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அதிக அவசியமற்று உங்களைத் தொடுவது

இங்கே தொடுவது என்பது தழுவுவதையோ அல்லது அணைப்பதையோ குறிக்காது. அவள் உங்கள் உதட்டில் (இல்லாத) ஏதோ ஒன்றை துடைப்பது போலவோ அல்லது உங்களை மிகவும் நெருக்கமான ஒரு நடனத்திற்கு அழைக்கவோ செய்வது ஒரு முக்கிய அறிகுறி.

அவள் உங்கள் அரவணைப்பிற்காக மிக அருகில் நெருங்கி உட்கார்வது

பென்ச்சில் நிறைய இடம் இருந்தாலும், உங்களை உரசி மிக அருகில் உட்கார்வாள். உங்களுடைய பைக் சவாரி அவள் பின்னமர்ந்து உங்களை அணைப்பதால் பரவசமடையச் செய்யும் ஒன்றாக இருக்கும். இது எல்லாம் அவள் உங்களுடன் உறங்க விரும்புவதையே உணர்த்தும்.

அவள் உங்களுக்குத் தரும் பாராட்டுகள்

நீங்கள் என்ன உடுத்துகிறீர்கள் என்பதை அவள் உன்னிப்பாக கவனிப்பாள். உங்களைக் கிறங்கடிக்கும் "உன் முடி நன்றாக இருக்கிறது" "உன் கண்கள் அழகாக இருக்கிறது" என்பதைப் போன்ற வார்த்தைகளை உபயோகிப்பாள்.

உங்களை வேட்டையாடும் அவள் உடை

பெண்கள் தங்களின் படுக்கைத் தேவையை அறிந்தால், அவர்கள் தங்கள் உடையை மற்றவர் கவரும் வண்ணம் அணிந்து ஆர்வமூட்டுவர். உடலழகைக் காட்டும் உடை, மேக் அப், ஒரு அழகான தலைமுடி அலங்காரம் அல்லது மிகவும் கவர்ச்சிகரமான இரவு அல்லது உள்ளாடையை அவள் அணிவாள் (நீங்கள் அவளது ஆர்வத்தை அறிந்து கொண்டுவிட்டீர்களானால் கடைசி விவரத்தை படியுங்கள்).

அவள் உங்களை காபிக்கு அழைப்பாள்

அவளை அவள் இடத்தில் இறக்கிவிடும்போது அவள் உங்களிடம் "காபி?" எனக் கேட்டால், யோசிக்காமல், அவள் மனதில் ஒடுவது காதல் என்பதை அறியலாம். மேலே எதுவும் கேட்காமல், நேராக காரியத்தில் இறங்குங்கள்.

அவள் உங்களோடு தங்க முடிவெடுக்கிறாள்

வழக்கமாக அவள் உங்களுடன் இருக்கும் போது, இரவு தன் வீட்டிற்குப் போக விரும்புவாள். ஆனால், மாறாக இன்று இரவு உங்களுடனேயே இருக்கப் போவதாகத் தெரிவிக்கிறாள். இது நிச்சயமாக உங்கள் உறவை அவள் அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச்செல்ல கொடுக்கும் க்ரீன் சிக்னல்.

அவள் தன் உதடுகள் வருடுகிறாள் அல்லது முடியை கோதிக்கொள்கிறாள்

பெண்கள் உணர்ச்சிவயப்படும் போதும், தனிமையை விரும்பும் போதும், வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அவள் தொடர்ந்து தன் முடியை சரிசெய்து கொள்வதையும், உதடுகளை வருடுவதையும் நீங்கள் பார்க்கலாம்.

அவள் உங்களுக்கு சுவிங்கம் அல்லது மின்ட்டைக் கொடுப்பாள்

பெண்கள் பெரும்பாலும் வாய் நாற்றம் உள்ளவர்களுடன் முத்தமிட மிகவும் யோசிப்பார்கள். எனவே அவள் உங்களுக்கு ஒரு சுவிங்கத்தையோ அல்லது மின்ட்டையோ கொடுத்தால், நீங்கள் அதை உணர்ந்து கொள்ளலாம்.

அவள் பாலுறவைப் பற்றிப் பேசுகிறாள்

பாலுறவு பெண்களுக்கு ஒரு வரையறைக்குட்பட்ட விஷயம். எனினும், அவள் மிகவும் வெளிப்படையாக எந்த தடையும் இன்றி பாலுணர்வு குறித்த விஷயங்களைப் பற்றி மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசினால், உங்களுக்கு இன்று இரவு ஒரு கிளுகிளுப்பிற்கான வாய்ப்பிருக்கிறது எனக் கொள்ளலாம்.

பாலுணர்வை மறைமுகமாக உணர்த்துவாள்

அவளால் தன் பாலுணர்வை நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும், அவள் தன்னுடைய ஆசையை தன் லாவகமான பேச்சின் மூலம் அதை உணர்த்துவாள். பாலுணர்வு அர்த்தங்களைத் தரும் சில பொதுவான வார்த்தைகளையும் பயன்படுத்துவாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Signs She Wants To Sleep With You

If you know the signs that she wants to sleep with you, then you will score more chicks. To know the signs that she wants you in bed, read on...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter