For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறவில் ஏற்படும் பொறாமையை நீக்கும் வழிகள்!!!

By Ashok CR
|

பொறாமை என்ற குணம் ஒரு உறவையே நாசமாக்கிவிடும். பொதுவாக ஒரு உறவில் பெண்கள் தான் அதிக பொறாமை குணத்துடன் பாதுகாப்பின்மையோடு இருப்பார்கள். தன் காதலனோடு பல பெண்கள் கடலை போடும் போது அந்த காதலிக்கு பொறாமை குணம் உண்டாவது இயல்பு தானே? அந்த சூழ்நிலையில் நாம் உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் போது தான் பிரச்சனைகள் உருவாகிறது. பல பெண்கள் உங்கள் காதலனிடம் கடலை போடும் போதும் பதிலுக்கு அவரும் வழிந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்ட வேண்டும். உங்கள் காதலன் பார்க்கும் அனைத்து பெண்களுடனும் நட்புடன் பழகும் போது நீங்கள் கூடுதல் கவனத்துடன் நடக்க வேண்டும்.

ஆனால் சரியான காரணமே இல்லாமல் பொறாமை பட்டால் உங்கள் உறவு புளித்து போய் மூச்சு முட்டி தத்தளிக்கும். எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி அல்லது காதலாக இருந்தாலும் சரி, அவநம்பிக்கை என்பது மட்டும் இருக்கவே கூடாது. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே காதலும் நம்பிக்கையும் இருப்பதால் மட்டுமே உங்கள் துணை உங்களுடன் இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியோடு இருந்த காலங்கள் எல்லாம் மறைந்து போவதற்கு ஆத்திரமும் பொறாமையும் காரணமாக அமைந்து விடும்.

Ways To Remove Jealousy In A Relationship

உங்கள் உறவில் பொறாமை ஏற்படுவதற்கான காரணங்களை தவிர்க்க பல வழிகள் இருக்கிறது. அதற்கான சில டிப்ஸ்களை பற்றி இப்போது பார்க்கலாமா...

நம்பிக்கை

எந்த ஒரு உறவுக்குமே அடிப்படையாக விளங்குவது நம்பிக்கையே. உங்கள் துணையை எப்போதுமே உங்கள் அடி மனதில் இருந்து நம்புங்கள். அதற்காக அவரை குருட்டுத் தனமாக நம்ப வேண்டும் என்பதில்லை. உங்கள் நம்பிக்கையை முதலில் உங்கள் துணை சம்பாதிக்க வேண்டும். நம்பிக்கை என்பதை முதலில் நாம் சம்பாதிக்க வேண்டும். ஒரு முறை நம்பிக்கையை இழந்து விட்டால் அதனை மீண்டும் பெறுவது சுலபமல்ல. அதனால் பொறாமை குணத்தை தவிர்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் துணையின் மீது நம்பிக்கை வையுங்கள். அதே போல் அவரின் நம்பிக்கையையும் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

உரையாடுங்கள்

ஒரு உறவுக்கு பாலமாக இருப்பது உரையாடல்களே. ஒரு காதலன் காதலியிடையே சரிவர பேச்சுவார்த்தைகள் இல்லையென்றால் அவர்கள் காதல் உறவில் ஏதோ பிரச்சனை உள்ளதென்று அர்த்தமாகும். இரு உள்ளங்கள் ஒன்று சேர்வதே வாழ்நாள் முழுவதும் அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழ்வதற்காகவே. வெறுமனே உடலுறவு மட்டும் உங்களை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வைத்திருக்காது. உரையாடல்கள் என்பதும் கூட உங்கள் உறவில் பொறாமையை தவிர்க்க உதவும்.

விருப்பு வெறுப்புக்கு முக்கியத்துவம்

எந்த ஒரு உறவும் வெற்றிகரமாக அமைய, அந்த ஜோடி தங்கள் தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அவரவரின் சொந்த விருப்பு வெறுப்புகளில் தலையிடக் கூடாது. இதில் பிரச்சனை ஏற்படும் போது தான் அந்த உறவில் பாதுகாப்பின்மை மற்றும் பொறாமை முளைக்க துவங்கும். உங்கள் துணையின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமாக தலையிடக் கூடாது. அவர்களை அழுத்தி பிடிக்காமல் நிம்மதியாக மூச்சு விட விடுங்கள். நீங்கள் அவரை அதிகமாக அழுத்த அழுத்த அதற்கேற்ப உங்கள் காதலும் அழியத் தொடங்கும்.

புரிதல்

ஒரு உறவில் பொறாமையை வளர விடாமல் தடுக்க ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டும். உங்கள் உறவு ஆரோக்கியத்துடன் நீடிக்க புரிதல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உங்கள் துணையின் தேவைகளை நன்றாக புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கைக்கும் புரிதலுக்கும் வித்தியாசம் உள்ளது. அவைகள் இரண்டும் வேறு வேறு தான் என்றாலும் ஒரு உறவு நீண்ட நாட்கள் நிலைத்திட அவை இரண்டுமே முக்கியம் தான்.

காதலை வாழ விடுங்கள்

என்ன ஆனாலும் சரி, உங்கள் இதயத்தில் இருக்கும் காதல் மட்டும் தேய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த காதல் உணர்வு உங்களை விட்டு நீங்கி விட்டால் உங்கள் துணையை விட்டு எப்படி பிரியலாம் என்ற எண்ணம் தோன்ற துவங்கி விடும். ஒரு உறவு அழியாமல் நிலைத்திட காதல் என்பது அவசியம். காதல் மட்டும் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதனை தைரியமாக சமாளிக்கலாம். அதே போல் பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையையும் உங்கள் காதலினால் சுலபமாக தவிர்த்து விடலாம்.

English summary

Ways To Remove Jealousy In A Relationship

Jealousy is characteristic that is capable of ruining relationships. There are many ways to avoid the J factor to come in your relationship. A few such tips to are discussed below:
Story first published: Thursday, December 26, 2013, 19:28 [IST]
Desktop Bottom Promotion