For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர் பார்த்து வைத்திருக்கும் வாழ்க்கை துணையைப் பற்றி தெரிந்து கொள்ள சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் என்பது நமது பழைய கலாச்சாரமாகும். இந்த முறை இன்னும் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளது. எந்த ஒரு முன் அறிமுகமும் இன்றி இருவர் இத்திருமணத்தின் மூலம் ஒன்று சேர்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள் அவர்களது பிள்ளைக்கு ஏற்ற துணையை தேடுகின்றனர். ஒன்று அல்லது இரண்டு முறை சந்தித்த பின் வாழ்நாள் முழுவதற்குமான முடிவு எடுக்கப்படுகின்றது. திருமணத்திற்கு முன் இருவருக்கும் தங்கள் துணையைப் பற்றி குறைந்த விஷயங்களே அறிந்து கொள்ள முடிகின்றது.

பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணம் ஒரு லாட்டரி சீட்டு போன்றது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்களது துணைவர் நீங்கள் எதிர்பார்த்தபடி இருப்பார்கள். ஒருவேளை உங்களுக்கு லக் இல்லாமல் போனால் நீங்கள் ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுதும் விட்டுக்கொடுத்து வாழ வேண்டியதாக இருக்கும். உங்களுக்குள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட பின் காதல் மலர வாய்ப்புக்கள் உள்ளது.

Tips To Know Your Arranged Marriage Partner

இப்படிப்பட்ட திருமண பந்தத்தில் உங்களுடைய வருங்கால துணைவரின் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்வது ஒரு பெரிய சவாலாக தான் இருக்கும். இது மிகவும் கடினம் அல்லது மிகவும் எளிமை என்றும் கூற முடியாது. இந்த விஷயங்களை உங்கள் துணைவருக்கு தெரியாமல் அறிந்து கொள்ள ஒரு சில வழிகள் உள்ளன.

நண்பர்கள்: பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும் நபரைப் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ள ஒரு சிறந்த வழி நண்பர்கள். நண்பர்கள் உங்கள் துணைவரின் குணாதிசயங்களை நன்கு அறிவார்கள். உங்கள் துணைவருக்கு பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம், கல்லூரி ரகசியங்கள் மற்றும் அவர்களின் மறக்க முடியாத நினைவுகள், அடிக்கடி செல்லும் இடங்கள, பழைய உறவுகள் மற்றும் உங்கள் துணைவர் விரும்பியவர்களின் பட்டியல் ஆகியவற்றை நண்பர்கள் மூலம் அறியலாம். திருமணம் செய்வதற்கு எங்களின் அறிவுரை யாதெனில் உங்கள் துணைவரின் நண்பர்களிடம் அவரைப்பற்றி பேசுங்கள். இவ்வாறு செய்வது சுவாரஸ்யமாகவும், நீங்களும் விரும்பும் வகையிலும் இருக்கும். உங்கள் துணைவருக்கு நண்பர்கள் இல்லையென்றால் அவர் வித்தியாசமானவராக இருப்பார்.

உடன் பிறப்புகள்: குடும்பத்திலுள்ள பெரியவர்களை விட உடன் பிறப்புகள் உங்கள் துணைவரைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். அவர்களின் சிறு வயது நினைவுகள் மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள துணைவரின் சகோதர, சகோதரிகளிடம் பேசுங்கள். துணைவரின் குடும்பத்தாரை பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வது சுவாரஸ்யமாகவும், நீங்களும் வாழவிருக்கும் குடும்பத்தைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ள உதவியாகவும் இருக்கும்.

இணைய தளம்: பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்கள் நமக்கு தேவையானவர்களை பற்றி அறிந்து கொள்ள சாதகமாக இருக்கின்றன. உங்கள் துணைவரின் கணக்கைத் தேடி கண்டுபிடித்து அவரது புகைப்படம், நண்பர்கள், மற்றும் இதர கருத்துக்களை நாம் காண முடியும். இதன் மூலம் அவர் எத்தகைய குணம் உடையவர் என்பதையும் அறிய முடியும். அது மட்டுமில்லாமல் அவருக்கு பிடித்த பாடல்கள், சமீப காலத்தில் பார்த்த படங்கள், படிப்பு தகுதி போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். அவர் எழுதும் ஸ்டேட்டஸ் மற்றும் அவரது கருத்துக்களை அதில் பதிவு செய்யும் போதும் அதை கண்டு ஒரு தோராயமாக அந்த நபர் எப்படிபட்டவர் என்பதை அறிய முடியும்.

துணைவரின் படுக்கையறை: உங்கள் துணைவரின் படுக்கை அறையை கண்டால் போதும். அவர் எப்படிப்பட்ட குணங்களை கொண்டவர் என்று கூற முடியும். படுக்கை அறை குப்பையாகவும் கலைந்த வண்ணம் இருந்தால் அவர் மிகவும் சோம்பேறி என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மிகவும் சரியாகவும் அனைத்து பொருட்களும் அந்தந்த இடத்தில் இருந்தால் அவர் மிகவும் ஒழுங்காக பராமரிப்பவர் மற்றும் அந்த குணம் சற்றே சலிப்பூட்டுவதாக இருக்கும் எனவும் புரிந்து கொள்ளலாம். அவரது அறையில் இருக்கும் பொருட்கள், புத்தகங்கள், படங்கள் ஆகியவற்றை சிறிது அலசிப் பாருங்கள். இவைகளே உங்களது வருங்கால துணைவர் பற்றி கூறி விடும்.

மாமியார்: உங்களது துணைவரின் நல்ல குணங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் மாமியாரிடம் பேச வேண்டும். அவருக்கும் பிடித்த உணவு, தினசரி தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். உங்கள் மாமியாருடன் சிறந்த உறவை வைத்துக் கொள்வதே உங்கள் துணைவரைப் பற்றி தெரிந்து கொள்ள சிறந்த வழியாகும்.

English summary

Tips To Know Your Arranged Marriage Partner

Understanding your partner’s habits and knowing them is a challenge in arranged marriages. It is not very difficult but not quite easy as well. There are a few ways to know your arranged marriage partner quickly without letting your partner know.
Story first published: Tuesday, December 17, 2013, 16:24 [IST]
Desktop Bottom Promotion