For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதை ஆண்கள் வெறுப்பதற்கான காரணங்கள்!!!

By Ashok CR
|

ஒரு அறையை ஆண்களால் நிரப்பி விட்டு, அவர்களில் எத்தனை பேருக்கு திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதில் விருப்பம் இருக்கிறது, விருப்பம் இல்லை என இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். இரண்டு பிரிவிலும் சரி சமமான எண்ணிக்கை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நகரத்தை சேர்ந்த பல ஆண்களுக்கு திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதில் விருப்பம் இருந்தாலும், பாரம்பரிய முறைப்படி வளர்ந்த ஆண்களுக்கு இதில் உடன்பாடு இருப்பதில்லை.

திருமணமாகாமல் வாழ்க்கை நடுத்துவதை இன்னமும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை. அதனை கையாளுவதற்கான சட்டங்களும் இன்னும் இயற்றப்படாமல் உள்ளது. மனம் ஒத்து போன ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் வாழ்க்கை நடத்தினால் சமுதாயத்தை கெடுக்கும் அவலங்களாகத் தான் பார்க்கிறது பல கிழக்கு நாடுகள். இருப்பினும் இந்த பழக்கத்தை பல மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த நாடுகளில் பல இளைஞர்களும் திருமணமாகாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

Do Men Hate Live In Relationship: Reasons

நாம் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழிகள் நாளடைவில் நமக்கு அதிக செலவையும் பிரச்சனையையும் ஏற்படுத்தி செல்ல கூடாத வழியாக மாறி விடும். திருமணமாகாமல் குடும்பம் நடத்துவதும் கூட அவ்வகை குறுக்கு வழியாக தான் பார்க்கப்படுகிறது. சாஸ்திரம், சம்பிரதாயம் என்று முறைப்படி திருமணம் செய்து காலம் முழுக்க ஒருவருடன் வாழ்வதற்கு பதில் இம்முறையை சிலர் கையாளுகின்றனர். இந்த முறையினால் கிடைக்க போகும் நீண்ட நாள் பயன்கள் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. திருமணமாகாமல் வாழ்ந்து சில பேர் திருமணமும் செய்து கொள்கின்றனர்.

திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதில் ஏன் சில ஆண்களுக்கு உடன்பாடு இருப்பதில்லை என்பதை தெரிந்து கொள்வோமா?

சமூக அக்கறை

பல ஆண்களுக்கு சமூக அக்கறை இருப்பதனாலேயே அவர்களுக்கும் திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்தும் பழகத்தும் ஏணி வைத்தாலும் எட்டுவதில்லை. இந்தியாவில் உள்ள நகரங்களில் இந்த முறை இப்போது பிரபலம் அடைந்து வந்தாலும் கூட நம் சமுதாயம் அதனை திறந்த மனதுடன் வரவேற்கவில்லை. அதனை இன்னமும் ஒரு சமுதாய சீர்கேடாக தான் பலரும் பார்க்கின்றனர்; முக்கியமாக முதியவர்கள். அவ்வகை ஜோடிகள் சமுதாய அவலங்களாகத் தான் பார்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பல இடங்களில் ஏசப்பட்டு அவமானங்களுக்கு உள்ளாகின்றனர்.

சுலபமாக வெளியேறி விடலாம்

திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதில் உள்ள பெரிய பயனே அதற்கு எதிர்மறையான பயனாக உள்ளது - அது தான் உறவின் மீதுள்ள பொறுப்பும் உறுதியும். சின்ன சண்டை, ஒத்துப்போகாமை அல்லது தவறான கேள்விகளால் ஒருவரை விட்டு ஒருவர் சுலபமாக பிரிந்து சென்று விடுவார்கள். ஆனால் இதுவே அவர்கள் திருமணமானவர்கள் என்றால் தங்களின் உறவை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் முடிந்த வரை போராடுவார்கள் அல்லவா? பிரச்சனைகளுக்கு தீர்வினை கண்டுபிடித்து மனஸ்தாபங்களை தீர்க்க முற்படுவார்கள்.

குழந்தைகள்

திருமணமாகாமல் வாழ்க்கை நடுத்துவதால் பிறக்கும் குழந்தைகள் தான் இந்த உறவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முதலில், ஒழுக்கம் மற்றும் விதிமுறைகளின் மீது அவர்களுக்கு மதிப்பென்பதே இல்லாமல் போய் விடும். சேர்ந்து அல்லது பிரிந்து இருக்கும் அந்த தம்பதிகளிடம் இருந்து அந்த குழந்தைகளுக்கு போதிய அன்பும் கவனிப்பும் கிடைக்காமல் போவதால் அவர்கள் தனிமை படுத்தப்படுவார்கள். இப்படி தங்கள் குழந்தை வளருவதை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை. அதனால் தான் என்னவோ திருமணமாகாமல் குடும்பம் நடத்துவதில் அவர்களுக்கு நாட்டம் இருப்பதில்லை.

தோள் கொடுக்க துணை இருப்பதில்லை

கணவன்/மனைவியை சார்ந்து இருக்கும் அளவுக்கு திருமணமாகாமல் உடனிருக்கும் ஆணையோ/பெண்ணையோ சார்ந்து இருக்க முடியாது. சில நேரங்களில் உங்களுக்காக அவர்கள் தோள் கொடுக்க தான் செய்வார்கள். ஆனால் நீங்கள் கஷ்டப்படும் காலங்களில் இதனை எதிர்பார்க்க முடியாது. திருமண பந்தத்தில் உள்ள ஆழம் இதில் இருப்பதில்லை. இவ்வகை உறவில் ஒரு கமிட்மெண்ட் இல்லாததால் கஷ்ட காலங்களில் அவர்கள் உங்களை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மரியாதை இருப்பதில்லை

திருமண பந்தத்துடன் ஒப்பிடுகையில் திருமணமாகாமல் வாழ்க்கை நடத்தும் உறவு நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா என்பது சந்தேகமே. அதனால் இவ்வகை உறவில் ஆயுளை தீர்மானிக்க முடியாது. அதனால் தான் என்னவோ இந்த உறவில் ஈடுபடுபவர்கள் ஒருவரை ஒருவர் அதிக அளவில் மதிப்பதில்லை. அவர்களின் உறவு நுனியில் இருப்பதால் அது எப்போது வேண்டுமானாலும் உடையலாம்.

English summary

Do Men Hate Live In Relationship: Reasons

Live-in relationship is yet to be recognised in many countries and laws are yet to be established to deal with the idea. Two people consummating their relationship without marriage is still a taboo in major eastern cultures. However, most western cultures have come to terms and accepted live-in relationship that is being embraced by majority of youths there.
Story first published: Monday, December 23, 2013, 12:50 [IST]
Desktop Bottom Promotion