For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலிக்காக 5,879 கி.மீ சைக்கிளில் பயணம் செய்த காதலன் - ஏன்? எதற்கு?

காதலியை காண செகன்ட் ஹேன்ட் சைக்கிள் வாங்கி 8 நாடுகளை 4 மாதத்தில் கடந்து கரம் பிடித்த ஒரு காதல் மன்னனின் கதை.

|

ஃபேஸ்புக் மூலம் பிரபலமடைந்த நபர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றே, நேற்று நடந்த சம்பவங்கள் தான் ஃபேஸ்புக்கில் வைரல் ஆகும் என கூறிவிட முடியாது. என்றோ நடந்த மறக்கடிக்கப்பட்ட விஷயங்களை கூட ஃபேஸ்புக் மூலம் மறுபிறவி கொடுத்து உண்மையை வெட்டவெளிச்சம் ஆக்க முடியும்.

அந்த வகையில் ஃபேஸ்புக் மூலம் டிரென்டான ஒரு காவிய காதல் தான் இது. காதலுக்காக ஃப்ளைட் ஏறி அமெரிக்கா போனவர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், செகன்ட் ஹேன்ட் சைக்கிளில் 8 நாடுகளை 4 மாதத்தில் கடந்து, காதலியின் கரம் பிடித்த காதல் மன்னனை பற்றி உங்களுக்கு தெரியுமா....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பி.கே. மகாநந்தியா!

பி.கே. மகாநந்தியா!

பி.கே. மகாநந்தியா ஒரு பிரபலமான ஸ்வீடன் ஓவியர். இவர் இந்தியாவில் பிறந்து, ஸ்வீடனில் வாழ்ந்து வரும் ஒரு ஓவிய கலைஞர். இவரது முழுப்பெயர் பிரதயும்னா குமார் மகாநந்தியா.

Image Source

1977!

1977!

1977-ல் டெல்லியில் இருந்து கோடெந்ப்ர்க்-க்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டார் பி.கே. மகாநந்தியா. சாதனைக்காக அல்ல, தனது காதலியின் கரம்பிடிக்க. பி.கே. மகாநந்தியா மனமுருகி காதலித்த அந்த பெண் சுவீடனை சேர்ந்த சார்லோட் வான்.

Image Source

திறமையை கண்டு வந்த காதலி!

திறமையை கண்டு வந்த காதலி!

சார்லோட் வான் லண்டனில் படித்து கொண்டிருந்த போது இந்தியாவில் வாழும் ஏழை ஓவிய மாணவன் பற்றி அறிந்துள்ளார். தனது படத்தை வரைய அவரை காண இந்தியா வந்துள்ளார் சார்லோட் வான்.

Image Source

மலர்ந்த காதல்!

மலர்ந்த காதல்!

படம் வரைய வந்த இடத்தில் காதல் வரைந்து மலர்ந்தது இருவர் மத்தியிலும். விரைவாக இருவரும் திருமணமும் செய்துக் கொண்டதாக, வைரலான முகநூல் பதிவில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

Image Source

கண்டம் தாண்டி வருவாயா?

கண்டம் தாண்டி வருவாயா?

இந்தியாவை விட்டு மீண்டும் நாடு திரும்பும் நிலை ஏற்பட்ட பிறகு, பி.கே.வை ஐரோப்பிய வர கூறினார். படிப்பின் பாதியில் இருந்த பி.கே அப்போது அவர் கொடுத்த விமான பயண சீட்டை கொண்டு ஐரோப்பிய செல்ல முடியவில்லை. பிறகு கடிதங்கள் மூலமாக காதல் பரிவர்த்தனை இருவர் மத்தியிலும் நடந்தது.

Image Source

பொருளாதார பிரச்சனை!

பொருளாதார பிரச்சனை!

படிப்பு முடிந்து பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்ட பி.கே-வினால் சார்லோட் வானை சந்திப்பதில் பிரச்சனை உண்டானது. பிறகு தனது காதலியை காண தனது உடமைகளை விற்று பணம் சேகரித்து ஒரு செகண்ட் ஹேன்ட் சைக்கிள் வாங்கி பயணம் மேற்கொண்டார் பி.கே.

Image Source

டெல்லியில் - கோடெந்ப்ர்க்!

டெல்லியில் - கோடெந்ப்ர்க்!

நான்கு மாதங்கள், மூன்று வாரத்தில் ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி, பல்கேரியா, யூகோஸ்லாவியா, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் போன்ற எட்டு நாடுகளை கடந்து சென்று தனது காதலி சார்லோட் வானின் கரம் பிடித்துள்ளார் பி.கே.

Image Source

காத்திருந்த சார்லோட் வான்!

காத்திருந்த சார்லோட் வான்!

சுவீடனுக்குள் நுழைய மறுப்பு வந்த போது, லெட்டர் கிடைத்து உடனே சரியான நேரத்தில் வந்து பி.கேவை சந்தித்து அவர் தனது குடும்பத்தை செர்ந்டஹ்வார் என அழைத்து சென்றுள்ளார் சார்லோட் வான். சார்லோட் வான் சுவீடனின் ராயல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

டாக்டர். பி.கே!

டாக்டர். பி.கே!

இப்போது ஓடிஷாவின் இந்திய கலாச்சார தூதராக சுவீடனில் இருக்கிறார் பி.கே. தனது திருமண வாழ்க்கையை 40 வருடங்களை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார் பி.கே. இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

India-Born Swedish Artist's Famous for his 4 Months and 3 Weeks Journey for his Love

India-Born Swedish Artist's Famous for his 4 Months and 3 Weeks Journey for his Love
Desktop Bottom Promotion