"அப்பா..! என்னை வேசி என அழைக்கிறார்கள்.." உலக ஆண்களுக்கு ஒரு குட்டி மகளின் கடிதம்!

இந்த ஆண் சமூகம் பெண்ணை என்னவெல்லாம் சொல்லும் என தெரியவில்லை, ஒரு பெண் எங்கு சென்றாலும், எந்த உறவிலும் பெண்ணை தாழ்த்த மட்டும் தான் பார்க்கிறது இந்த ஆண் உலகம்.

Subscribe to Boldsky

கடவுள் எங்கும் இருப்பார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். அதே போல தான் பெண்களுக்கு ஆண்கள் மூலமான பிரச்சனைகள் எந்த இடமாக இருந்தாலும், அது எந்த உறவாக இருந்தாலும், ஆண்கள் மூலம் பெண்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சனை எண்ணிலடங்காதவை.

This World Will Be Called Me A Whore, A Touching Letter From Daughter

பெண்கள் தங்கள் உரிமை பற்றி பேசினால் பெண்ணியவாதிகள் என ஒத்துக்குகின்றனர். ஆண்கள் பெண்ணியம் பற்றி பேசினால் பொட்டை பயல் என ஒதுக்குகிறார்கள். பெண்களை பற்றி, பெண்களின் உரிமைகள் பற்றி, அவர்களுக்கு நேரிடும் அவலங்கள் பற்றி வேறு யார் தான் பேசுவார்கள்.

இதோ ஆணிடம் இருந்து அன்பை மட்டும் எதிர்நோக்கி மேலும், மேலும் ஏமாறும் ஒரு அவல பெண்ணின் கடிதம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எதை தான் உடுத்துவது...?

மாடர்ன் உடைகள் உடுத்தினால் அடங்காதவள், புடவை கட்டினால் கவர்ச்சிப் பொருள், சுடிதார், மிடி அணிந்தாலும் உரசல்களுக்கும், கூர்மையான பார்வை அம்புகளுக்கும், கூசும் வார்த்தைகளுக்கும் பஞ்சம் ஏதும் இல்லை. ஐந்து வயது மகள் கற்பழிக்கப்படுகிறாள் அவளும் கவர்ச்சியாக உடை உடுத்தியதற்காக கற்பழிக்கப்பட்டாளா?

உயரம் தொட தீண்டத்தகாதவளா நான்?

ஐந்து ஆண்கள் பணிபுரியும் ஒரு அணியில் ஒற்றை பெண்ணாக நான் பணியாற்றினால் பாஞ்சாலி என்கிறார்கள். ஐந்து பெண்களுடன் ஒரு ஆண் பணியாற்றினால் அவர் மன்மதன் ஆகிவிடுகிறான். தூற்றுதளிலும் ஆண்கள் பெருமையாகவே காணப்படுகின்றனர்.

அனைத்தையும் தாண்டி நான் என் துறையில் சாதிக்க துவங்கினால், சில படிகள் மேலே உயர்ந்தால் நான் எனது மேலதிகாரியுடன் இச்சை உறவில் இருப்பேன் என பச்சையாக பேசுகிறது இந்த ஆண் சமூகம்.

பிள்ளை பெற்றெடுக்கும் மெஷினா நான்?

திருமணமான 10 மாதங்களில் பிள்ளை பெற்றெடுக்க வேண்டிய மெஷினாக நான் இருக்க வேண்டுமா என்ன? ஒரு ஆண் தன் கனவுகளை சாதித்த பிறகு திருமணம் செய்துக் கொள்ளும் வரை சுதந்திரம் பெற்றுள்ளான்.

ஆனால், எனக்கு சுதந்திரம் என்பது கானல் நீரா? எனக்கான பாதையை, வாழ்க்கையை வாழ துவங்கினால் அடங்காப்பிடாரி, ஓடுகாலி என தூற்றப்படுகிறேன். பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால் கூட அவச்சொல்களுக்கு ஆளாகத்தான் வேண்டுமா?

காதலன் எனும் காமுகன்!

காதல் என்ற வளைக்கும் என்னை வீழ்த்தும் ஒருவன், என் அந்தரங்க உறுப்புகளை தீண்டுவதற்காக அன்பையும், காதலியும் சாவியாக நுழைக்கிறான். நம்பி ஏமாற்றப்படுகிறேன். ஏமாற்றினாலும், ஏமாற்றப்பட்டாலும் இந்து இழுக்கும், பழிச்சொல்லுக்கும் ஆளாவது நான் தான்.

வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் முதல் திரைப்பட பாடல் வரிகள் வரை என்னை தாழ்த்த வேண்டும் என்றால் ஆண்களின் வாயில் சொற்கள் வஞ்சனை இன்றி வருகிறது. அது ஏன் அப்பா?

அன்புக்குரிய அப்பா...

நான் கண்ட ஆண்களிலேயே என்னிடம் முழுவதுமான அன்பை எந்த போலித்தனமும் இல்லாமல் கொடுத்த ஒரே ஆண் நீங்கள் தான். சமையலறையில் இருந்த போதலும் சரி, விண்வெளி ஆய்வில் ஓங்கி வளர்ந்த பிறகும் சரி என்னை மனதார பார்ப்பவர்களை விட, உடல் சேர பார்ப்பவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

இது என் பிறவியின் தவறா அல்ல சில ஈனப்பிறவிகளின் தவறா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This World Will Be Called Me A Whore, A Touching Letter From Daughter

This World Will Be Called Me A Whore, A Touching Letter From Daughter
Story first published: Wednesday, October 19, 2016, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter