பெண்கள் இன்றளவும் மாதவன் மீது ஈர்ப்பு கொண்டுள்ளதற்கான காரணங்கள் இதுதானாம்!

Subscribe to Boldsky

நம்ம ஊர் பெண்களுக்கு என்ன தான் வெள்ளையாக இருந்தாலும், ஷாருக்கான், ஹ்ரிதிக் போன்று இருந்தலும் ஈர்ப்பு பெருமளவில் இருக்காது. இதற்கு காரணம் நம்ம ஊரு, நம்ம நிறம், நம்ம கலாச்சாரம் இதை எல்லாம் தாண்டி அந்த குணம் மற்றும் பழகும் தன்மை.

தெறிக்க தெறிக்க ஷாலினியை காதலித்த அஜித்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

நன்றாக பார்த்தல் நன்கு வெள்ளையாக, அழகாக இருக்கும் நடிகர்களை விட, சற்று மாநிறம், சராசரி உயரம் இருக்கும் நடிகர்கள் மீது தான் பெண்களுக்கு அதிகமான ஈர்ப்பு இருக்கும். மாதவன், சூர்யா மீது லவ்வர் பாய் போன்ற ஈர்ப்பு. விஜய் மீது அண்ணா என்ற ஈர்ப்பு.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன் சுவாரஸ்யமான காதல் கதை!

அதிலும் மாதவன் மீதி அலைபாயுதேவில் தொடங்கிய ஈர்ப்பு இறுதி சுற்று வரை முடிவில்லமால் தொடர்கதையாக நீடிக்கிறது. அன்றிய இளம் பெண்கள் முதல், இன்றைய இளம் பெண்கள் வரை மாதவன் மீது இந்தளவு ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ரசிகை பட்டாளம்

எப்படி இப்போது சிவக்கார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்களோ. அது போல தான் அந்த காலக்கட்டத்தில் மாதவனுக்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளமாக இருந்தனர். இதற்கு காரணம், இருவரும் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தது தான்.

ரசிகை பட்டாளம்

இந்த ரசிகர் கூட்டம் எளிதில் அமைந்தது அல்ல. சின்ன திரையிலேயே இவர்கள் இவர்களது ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் பெரிய ஈர்ப்பை அமைத்துக் கொண்டது தான் இன்றைய இவர்களது பெரும் வளர்ச்சிக்கான காரணம் ஆகும்.

ஈர்ப்பு

எப்போதுமே என்ன தான் மாடல் போன்ற கவர்ச்சியாக இருப்பினும், பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் ஹேண்ட்சம் நடிகர்கள் மீது தான் பெண்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்படும். இதற்கு மற்றுமொரு உதாரணம் நடிகர் சூர்யா.

ஈர்ப்பு

சூர்யா, மாதவன் இருவரும் பிரசாந்த், அபாஸ் அளவிற்கு நிறம் இல்லை. சற்று மாநிறம், சுமாரான உயரம் தான். ஆனால், இவர்கள் பார்க்க நமது வீதிகளில் உலாவும் ஆண்களை போல இருப்பது தான் பெண்களுக்கு இவர்கள் மீது பெரிய அளவிலனா, இன்றளவும் குறையாத ஈர்ப்பு உண்டாக காரணம்.

ரொமான்ஸ் மற்றும் புன்னகை

அறிமுகமான முதல் படமான அலைபாயுதே படத்திலேயே தனது ரசிகர் கூட்டத்தை அமைத்துக் கொண்டார் மாதவன். காரணம், நிஜத்தில் ஒரு ஆண் எப்படி ரொமான்ஸ் செய்வானோ, எப்படி ப்ரொபோஸ் செய்வானோ அதே போல அவர் நடித்தது தான் அவரது ரசிகைகளுக்கு மிகவும் பிடித்தது.

ரொமான்ஸ் மற்றும் புன்னகை

மாதவனிடம் ரசிகைகளுக்கு மிகவும் பிடித்தமானது அவரது அக்மார்க் புன்னகை. தாடியில் வெள்ளை முடி எட்டிப் பார்த்தாலும். இன்றும் அந்த புன்னகையின் அழகு சற்றும் குறையவில்லை. அதற்கு தான் மாதவனை நாங்கள் ரசிக்கிறோம் என அன்றைய இளம்பெண்களும், இன்றைய இளம் பெண்களும் கூறுகின்றனர்.

காதல்

அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், போன்ற படங்களின் மூலமாக காதலித்தால் இப்படி ஒரு ஆணை காதலிக்க வேண்டும் என்ற என்னத்தை இவர் ரசிகைகள் மத்தியில் உண்டாக்கியதும் ஓர் காரணம் என கூறலாம்.

திறமையும் கூட

வெறும் அழகும், ஈர்ப்பும், புன்னகை மட்டும் வைத்து தான் மாதவன் இன்று வரை ரசிகை கூட்டம் வைத்திருக்கிறார் என கூறமுடியாது. ரங் தே பசந்தி, குரு, 3 இடியட்ஸ், தம்பி, எவனோ ஒருவன், இறுதி சுற்று போன்ற திரைப்படங்களில் இவர் தனித்தன்மையான நடிப்பை வெளிக்கட்டியதும் கூட முக்கிய காரணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Girls Still Have Crush On R Madhavan

Reasons Why Girls Still Have Crush On R Madhavanm, read here in tamil.
Story first published: Thursday, May 12, 2016, 14:18 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter