For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணின் வாழ்க்கையில் ஏழு தருணங்களில் பெண் முக்கியமான பங்குவகிக்கிறாள்!!

ஆண்களின் வாழ்க்கையில் பெண்கள் எவ்வளவு முக்கியமான பங்கு வகிக்கிறார்கள் என்பது குறித்தான சில உண்மைகளை தாங்கிய பதிவு

By Staff
|

- ராகேஷ், பாண்டிச்சேரி (வாசகர் கட்டுரை)

நீரின்றி அமையாது உலகு என்பதை போல ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. உறவுகள் அற்ற வாழ்க்கை உவமைகள் அற்ற கவிதைகளை போல பெரியதாய் சுவைக்காது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள்.

அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது. இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள், இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி இனிக் காண்போம்.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலகம்

உலகம்

தாய் என்பவை ஓர் ஆணின் வாழ்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறாள். இவ்வுலகிற்கு அறிமுகம் படுத்தியது மட்டுமின்றி, இவள் மூலமாக தான் உறவுகளும் நமக்கு அறிமுகம் ஆகிறது.

காவலன்

காவலன்

ஓர் ஆண் முதன் முதலாக காவலனாக இருப்பது அவனது சகோதரிக்கு தான். ஒவ்வொரு மகளின் முதல் ஹீரோ அப்பா என்றால், முதல் காவலன் அவளது சகோதரனாக தான் இருக்க முடியும்.

பள்ளி / கல்லூரி

பள்ளி / கல்லூரி

உறவினர், தாய், சகோதரிக்கு பிறகு ஓர் ஆணுக்கு கிடைக்கும் முதல் வெளியுலக பெண் உறவு, தோழி தான். ஓர் உண்மையான தோழியுடன் ஆண் தன் வாழ்க்கையின் அனைத்து சுக, துக்கங்களையும் பகிர்ந்துக் கொள்கிறான். ஏனெனில், அந்த ஒரு தோழியினால் தான் அவனது துக்கத்தை குறைக்கவும், சுகத்தை பெருக்கவும் முடியும்.

பருவ வயது

பருவ வயது

சிலருக்கு காதலி மனைவியாக அமைகிறார்கள், சிலருக்கு மனைவி தான் காதலியாக அமைகிறார்கள். ஏதோ ஓர் வகையில் அனைவருக்கும் ஓர் காதலில் கிடைத்துவிடுகிறாள். ஒவ்வொரு ஆண்மகனின் பருவ வயது ஏக்கம் காதல். ஆனால் அது பதின் வயதை தாண்டியும் நிலைத்து நின்றால் மட்டுமே புனிதம் ஆகிறது. காதல் என்பது ஓர் ஆணின் வாழ்க்கையை சொர்க்கமாக்குகிறது (அது உண்மையாக இருப்பின் மட்டுமே).

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை

தன் பதியை நம்பி உடல், பொருள், ஆவியில் பாதி அங்கம் கொடுப்பவள் மனைவி. மனைவி தவறு செய்யும் கணவன் கண்டிப்பான், அதே கணவன் தவறு செய்யும் போது மனைவி திருத்துவாள். இதுதான் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் வித்தியாசம். உண்மையிலேயே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்.

புதிய உலகம் மகள்

புதிய உலகம் மகள்

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர் பெண்ணின் கருவறையில் தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது. தாயின் கருவறையில் இருந்து இவ்வுலகில் தொடங்கி, மனைவியின் கருவில் இருந்து உதித்த மகள் எனும் புதிய உலகம் என ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன.

கடைநிலை

கடைநிலை

முதுமை எட்டிய பிறகு ஓர் ஆண் அதிகம் மனம் மகிழ்ந்து புன்னகைக்கிறான் எனில் அதற்கு முக்கிய காரணம் அவனது உயிரில் இருந்து ஜனித்த உயிரின் உயிராக தான் இருக்க முடியும். தாத்தா ஆரம்பித்து பேத்தி கேட்கும் விடைகளுக்கு ஏதேனும் ஓர் பதிலை அவன் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Important Is Womens Role In Mens Life

Women plays an very important role in mens life. Its starts from mother and end ups with daughter.
Desktop Bottom Promotion