பொண்ணுங்க எப்படியெப்படி "ஓகே" சொன்ன, அதுக்கு என்னென்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமா?

Subscribe to Boldsky

ஒவ்வொரு பொன்னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சான் என்பது நடிகர் சந்தானம் கூறிய தெய்வ வாக்கு.அதே போல, ஒரு பெண் கூறும் ஒரு சொல்லுக்கும் கூட பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஒரு வார்த்தையின் பொருள் தொனியை வைத்து மாறுபடுவதை நாம் எல்லாம் அறிந்திருப்போம்.

அதே போல பெண்கள் சாட்டிங் செய்யும் பொழுது, அனுப்பும் ஒரு வார்த்தையின் எழுத்து கோர்வையை வைத்தே அவர் கோபமாக இருக்கிறாரா, மனதில் என நினைக்கிறார் என அறிந்துக் கொள்ள முடியும்.

ஏறத்தாழ எல்லா சாட்டிங்கும் "ஓகே" என்ற வார்த்தையில் தான் முடியும். இந்த "ok" வை கூட பெண்கள் பல வகையில், பல பொருளில் கூறுகின்றனர். அது என்னென்ன என இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Okay?

சாட்டிங்கில் ஈடுப்பட்டிருக்கும் போது, கலந்துரையாடல் நடுவே பெண் "Okay?" என்று கூறினால், உனக்கெல்லாம் அறிவே இல்லையா?, யோசிக்கவே மாட்டியா, தெரிஞ்சு தான் பேசுறியா என்று பொருள்.

Okaay...

அதே சாட்டிங்கின் போது, பெண் Okaay... என புள்ளிகளுடன் அனுப்பினால், பைத்தியம் புடிக்க வைக்காதடா, ரொம்ப மொக்கையா போவுது, கொஞ்சம் நிறுத்து என்று பொருள்.

Okayy

ஒருவேளை "Okayy" என அனுப்பினால், நீ என்ன வேண்டலாம் பேசு (உளறு) எனக்கு ஒன்னும்மில்ல. உன்கிட்ட எல்லாம் பேச வந்ததுக்கு, சும்மாவே இருந்திருக்கலாம் என்று பொருள்.

Okay.

பொதுவாகவே சாட்டிங்கில் யாரும் கடைச்யில் புள்ளி வைக்க மாட்டார்கள். சாட்டிங்கின் போது பெண் ஒருவர் "Okay." என்று அனுப்பினால் நீ பேசுனதுல செம காண்டாயிட்டேன். இத்தோட நிறுத்து, ஓடிரு. இதுக்கு மேல எரிச்சல் ஏத்தாத இல்ல ப்ளாக் பண்ணிடுவேன் என்று பொருள்.

Okay

நீங்கள் ஒரு பெண்ணுடன் குறுஞ்செய்தி கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் போது அவர் "Okay" என்று கூறினால் மட்டும் தான் எல்லாம் சரி என்று அர்த்தம்.

kkkk

ஒரு செய்தி அனுப்பியவுடன், டக்கென்று "K" / "KK.." என பதில் வந்தால், அவர் அவசர வேளையில் இருக்கிறார், தொந்தரவு செய்ய வேண்டாம் அல்லது உங்களுடன் பேச விருப்பம் இல்லம் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Meanings of Okay in Girls Dictionary

Different Meanings of Okay in Girls Dictionary, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter