For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை இது தான்!!!

|

உங்களது வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் அனைத்திற்கும் நீங்கள் தான் காரணம். நீங்கள் செய்த, செய்துக்கொண்டிருக்கும், செய்ய போகும் செயல்களின் பிரதிபலன் தான் உங்களது மகிழ்ச்சியும், இகழ்ச்சியும். சூழ்நிலைகள் வெறும் தளம் தான் அதில் உங்களது செயல்பாடு தான், உங்களுக்கான வெற்றி, தோல்வியை முடிவு செய்கிறது.

உதாரணமாக கூற வேண்டுமானால், உலகம் முழுதும் பல கிரிக்கெட் மைதானங்கள் இருக்கின்றன. அவைகள் தான் சூழ்நிலைகள், அந்த மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாட வேண்டியது உங்கள் திறமை. சரியாக வியையாடினால் வெற்றி, இல்லையேல் தோல்வி. இது தான் உங்கள் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இதில் எந்த மாதிரியான செயல்களில் (பயிற்சிகள்) நீங்கள் அதிகம் ஈடுபட்டால் வெற்றியும், மகிழ்சியும் அடைய முடியும் என்று இனி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள்

எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள்

எந்த காரியம் தொடங்கும் முன்னரும், செய்துக்கொண்டிருக்கும் போதும். இது விளங்காது, நாம் வெற்றி பெறுவோமா? நம்மால் முடியாதே.., என்ற எண்ணங்களை கைவிட்டாலே உங்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். மற்றும் இது உங்கள் மனநிலையை மேலோங்க செய்ய உதவும்.

சூழ்நிலையை சமாளித்தல்

சூழ்நிலையை சமாளித்தல்

உங்கள் வாழ்கையில் பல்வேறு விதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடும். அந்த வேளைகளில், நீங்கள் தான் சூழ்நிலையை கையாள வேண்டுமே தவிர, அந்த சூழ்நிலை உங்களை கையாளும் வகையில் இருந்துவிட கூடாது. இதை சரியாக நீங்கள் செய்து வந்தாலே, உங்கள் வாழ்விலும், தொழிலும் நல்ல முன்னேற்றம் காணலாம்.

நல்ல ஓய்வு

நல்ல ஓய்வு

வாரத்தில் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக இயங்குங்கள், அதே போன்று, வாரத்தில் ஓர் நாள் நல்ல ஓய்வு எடுங்கள். அந்த நாளில், உங்களை யார் என்ன கூறினாலும், காது கொடுத்து கேட்காது ஓய்வு எடுப்பதை குறிக்கோளாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலுக்கு தேவை இல்லை என்றாலும். மனதுக்குக் கட்டாயம் ஓய்வு தேவைப்படும். இந்த ஓர் நாள் ஓய்வு, உங்களை மற்ற ஆறு நாட்களும் நன்கு இயங்க உதவும்.

குடும்பத்துடன் நேரம் செலவு செய்யுங்கள்

குடும்பத்துடன் நேரம் செலவு செய்யுங்கள்

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கோளோடு நேரம் செலவழிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இவர்கள் தான் உங்கள் மன அழுத்தம் மற்றும் சந்தோசத்திற்கான நற்மருந்து. எனவே, மாதம் ஒருமுறையாவது குடும்பம், நண்பர்களுடன் வெளியிடங்கள் அல்லது வெளியூர்களுக்கு சென்று வந்தாலே உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும்.

சுயநலமற்ற வாழ்க்கை

சுயநலமற்ற வாழ்க்கை

நான், நான் என்று இருக்காமல், முடிந்த வரை சுயநலமின்றி இருந்தாலே உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். ஏனெனில், சுயநலம் உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும், மற்றும் மனதில் எதிர்மறை எண்ணங்களையும் வளர்க்கும் கருவியாக மாறிவிடும். இவையெல்லாம், உங்கள் மகிழ்ச்சியை அரிக்கும் கரையான்கள்.

சோதனை முயற்சிகள்

சோதனை முயற்சிகள்

உங்களால் முடிந்த வரை, உங்கள் வேலையிலும், தொழில் முறையிலும் புதிய முயற்சிகளை சோதித்து பாருங்கள். முடிந்தவரை அகலக்கால் வைக்காமல், சாதூரியமாக முயற்சி செய்ய வேண்டியது அவசியம். இந்த நேர்மறை (Positive) முயற்சிகள் உங்கள் வாழ்வாதாரத்தையும், நிலையம் மேலோங்க செய்ய உதவும்.

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது மிக மிக அவசியம். குறைந்தபட்சம் தினமும் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சியிலாவது ஈடுபடுங்கள். இது உங்கள் உடல்நிலை மற்றும் மனநிலை ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.

மக்களுக்கு உதவுங்கள்

மக்களுக்கு உதவுங்கள்

பெரிதாய் பணம், பொருள், பொன் தந்து தான் உதவ வேண்டும் என்றில்லை. உங்களால் முடிந்தவரை உங்கள் வாகனத்தில் ஓர் நபருக்கு லிப்ட் கொடுப்பது கூட உதவி தான். சாலையில் யாராவது விழுந்தால், அவரை தூக்கிவிடுவது கூட உதவி தான். இந்த உதவும் மனப்பான்மையனால் கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு யாராலும்,, பணத்தினாலும் கூட வாங்க முடியாது.

பயணம்

பயணம்

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பயணம் மேற்கொள்ளுங்கள். சுற்றுலாவாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. புதிய இடங்கள், புதிய கலாச்சாரம் போன்றவை புது உணர்வை தரும். இது உங்கள் மனம் மன அழுத்தம் இன்றி, இலகுவாக இருக்க உதவும். பிறகென்ன, மகிழ்ச்சி உங்கள் மடியில் குழந்தையை போல தவழ்ந்துக் கொண்டிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Nine Things You Can Do For A Happier Life

If you want to live a happier life, you can do this nine things. Take a look..,
Desktop Bottom Promotion