For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவது எப்படி?

By Ashok CR
|

இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் வாழும் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

இணையதளத்தில் ஃபார்ம்வில்லே விளையாட்டை உங்கள் மகனுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடும் தந்தையா நீங்கள்? இரவு உண்ணும் போது சந்தையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி பேசி கொண்டிருக்கும் தந்தையா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஒரு நவீன தந்தை என்ற பட்டத்தை பெறுவீர்கள். இவ்வகை தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடனும், பிணைப்புடனும் திகழ்வார்கள்.

Ways To Use Technology To Bond With Kids

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு விலகி பள்ளிக்கு சென்று அது சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இருப்பினும் பொது அறிவு மற்றும் விருப்புகள் ஒரு உறவை சிறப்பான முறையில் மேம்படும். அதனால் தொழில் நுட்பத்தை கொண்டு குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்க முற்படும் போது அது குழந்தைகளையும் ஊக்குவிக்கும்.

தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் இருங்கள்:

பொதுவாக புதிய தொழில்நுட்பங்களை ஆண்கள் வெகு விரைவிலேயே கற்றுக் கொள்வார்கள். இருப்பினும் இதில் அனைவருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. ஒரு பெற்றோராக வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.

சமுதாய வலைதளங்களின் மூலம் பிணைப்பு:

தங்கள் குழந்தைகளுடன் உரையாட, பத்தில் ஏழு பெற்றோர்கள் சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர் என்று UK-வை சேர்ந்த ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம் நாட்டு நகரங்களிலும் பல பெற்றோர்கள் இன்று சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சொல்லப் போனால் இன்றைய டீனேஜ் குழந்தைகள் சமுதாய வலைதளங்களில் தங்களுடைய பெற்றோரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்கின்றனர். இருப்பினும் தங்கள் குழந்தைகளுடன் சமுதாய வலைதளங்களில் உரையாடும் பெற்றோர்கள் அவர்களுக்கான வரைமுறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தந்தையாக மாறுவதற்கான டிப்ஸ்:

* புதிய காட்ஜெட்ஸ் மற்றும் கிஸ்மொஸ் பற்றிய விவரங்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை இணையதளத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப வார்த்தை புரியவில்லை அல்லது அதில் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தை வீடியோ கேம்ஸ் அல்லது கைப்பேசி வாங்க கடைக்கு சென்றால் நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள்.

* உங்கள் குழந்தைகளுடன் உரையாட சமுதாய வலைதளங்களை பயன்படுத்துங்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் நீங்கள் ஓரளவுக்கு மேல் தலையிடக் கூடாது.

English summary

Ways To Use Technology To Bond With Kids

Unlike the common perception of a geek, these new wave dads are cooler, connected and more engaged fathers. Children disconnect from parents and return to school or other activities. However, a common knowledge and interest can promote an effective relationship.
Desktop Bottom Promotion