For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையுடன் இருக்கும் துணையில்லாத ஆண்/பெண் டேட்டிங் செல்வதால் ஏற்படும் பொதுவான பயங்கள்!

By Ashok CR
|

கணவன் அல்லது மனைவியை பிரிந்து, ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகளுடன் வாழ்பவரா நீங்கள்? அப்படியானால் டேட்டிங் சென்று பல காலம் கடந்திருப்பதால் உங்களுக்கு அதில் அனுபவம் குறைந்திருக்கும். அதனால் மறுபடியும் டேட்டிங் செல்வதற்கு பல வித தயக்கங்கள் ஏற்படும். திருமணத்திற்கு முன் நீங்கள் சென்ற டேட்டிங்கை போல் இருக்காது இப்போது. உங்கள் வாழ்க்கை முறை முழுமையாக மாறியிருக்கும். அதனால் மீண்டும் டேட்டிங் செல்ல முடிவெடுப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் கணவன் அல்லது மனைவியை பிரிந்து குழந்தையுடன் வாழ்பவர்கள் மீண்டும் டேட்டிங் செல்வதென்றால் சில பொதுவான பயங்களை உண்டாக்கும்.

உங்களுக்கு குழந்தைகள் பிறந்த பின் உங்கள் உலகமே தலைகீழாக மாறி விடும். அதனால் மீண்டும் உங்கள் வாழ்க்கை பழைய மாதிரி மாறுவது கஷ்டமாகி விடும். தனியொரு ஆளாக பிள்ளைகளை வளர்க்கும் போது பொதுவாக ஏற்படும் பயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். காளை மாட்டை அதன் கொம்பை பிடித்து அடக்குவதை போல் வாழ்க்கையை தைரியமாக சந்திக்க வேண்டியிருக்கும். நேர்மறையான சிந்தனையோடு உங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றுங்கள். குழந்தைகள் இருக்கும் போது மீண்டும் டேட்டிங் செல்வதில் பல சிக்கல்கள் இருந்தாலும் கூட அது நடந்து கொண்டு தான் இருக்கிறது. தனியொரு ஆளாக குழந்தையுடன் இருக்கும் போது டேட்டிங் செல்வதென்றால் ஏற்படும் பயங்களை போக்கிட உங்கள் மனநிலையை மாற்றிடுங்கள்.

Common Fears Of Single Parents Dating

டேட்டிங் செல்வதற்கான முதல் பயமாக இருப்பது உங்கள் குழந்தைகளே. உங்கள் டேட்டிங்கை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள், அதற்கு அவர்கள் எவ்வாறு செயலாற்றுவார்கள் என்றெல்லாம் எண்ணி பயணம் ஏற்படும். அப்படி பயப்படுவதால் உங்கள் டேட்டிங்கை கைவிட்டால் அதனால் உங்கள் மனதிற்கு பிடித்தவரை இழக்கும் அபாயமும் ஏற்படும்.

இப்படிப்பட்ட சில பொதுவான பயன்களை பற்றி கொஞ்சம் பார்க்கலாம், வாங்க!

குழந்தைகள்

உங்களுக்கு குழந்தைகள் பிறந்து விட்டால், உங்கள் உலகமே அவர்களை சுற்றி தான் இயங்கும். பெரிய முடிவுகள் எடுக்கும் வேளைகளில் அல்லது உங்கள் அனைவரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் வேளைகளில், உங்கள் குழந்தைகளின் தேவைகளுக்கு முன்னாள் உங்கள் தேவைகளை மூட்டை கட்டி வைத்து விடுவீர்கள். அதனால் மீண்டும் டேட்டிங் செய்வதென்றாலும் கூட அவர்களுக்காக உங்கள் முடிவை நீங்கள் தியாகம் செய்யலாம். தனியாளாக குழந்தைகளை வளர்க்கும் போது மீண்டும் டேட்டிங் செல்வதென்றால் பாதி பேருக்கு தங்களின் குழந்தைகள் என்ன நினைப்பார்கள் என்ற பயமே தொற்றிக் கொள்கிறது.

உங்கள் துணையும் குழந்தைகளும்

உங்கள் குழந்தையும் உங்கள் டேட்டிங்கின் போது உங்கள் உடன் வருகிறார்களா? அப்படியானால் அவர்கள் உங்கள் புது துணியை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாது. நீங்கள் உங்கள் பழைய துணையை, அதாவது உங்கள் பழைய கணவன்/மனைவியை இழந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீண்டிருக்க மாட்டார்கள். அதனால் உங்களின் புது துணையுடன் அவர்கள் உங்களை ஜோடியாக பார்க்கும் போது மனம் உடைந்து போவார்கள் என்ற பொதுவான பயம் உங்களுக்கு ஏற்படுவது இயல்பு தான்.

போதுமான நேரம் ஒதுக்கு முடியுமா என்ற பயம்

உங்கள் குழந்தை தனியாளாக நீங்கள் மட்டுமே கவனிப்பதால் உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். அவர்களை காப்பாற்றுவதற்காக அதிகமாக உழைக்க வேண்டி வரும். அந்த சூழ்நிலையில் நீங்கள் புதிதாக ஒரு உறவை நாடினால் அவர்களுக்காக போதிய நேரத்தை ஒதுக்க முடியுமா என்ற பயம் தொற்றிக் கொள்ளும். தனியொரு ஆளாக உங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டுமானால் குடும்பத்தின் ஒட்டு மொத்த நிதி சுமையும் உங்கள் மீது தான் விழும். அதனால் இவ்வகை பயம் ஏற்படுவது இயல்பு தான்.

முன்னுரிமைகளின் மீது பயம்

நீங்கள் புதிதாக யாருடனாவது டேட்டிங் சென்றாலும் கூட உங்கள் முன்னுரிமைகள் எல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு தான் இருக்கும். உங்கள் புது உருவில் நீங்கள் எவ்வளவு ஆழமாக சென்றாலும் கூட சில நேரம் தேர்வுகளை முடிவெடுப்பதில் குழப்பங்களே நிலவும்; உங்கள் குழந்தைகள் மீது தான் உங்களின் முதன்மையான அக்கறை நீடிக்கும். அதனால் புதிய துணையா அல்லது குழந்தைகளா என்று தேர்ந்தெடுக்கும் குழப்பமான சூழ்நிலைகள் நிலவும். உங்கள் புதிய துணை உங்களை புரிந்து கொள்ளாத வரை இவ்வகை சூழ்நிலையில் முடிவெடுப்பது என்பது கஷ்டமே.

தவறு நடந்துவிடும் என்ற பயம்

நீங்கள் தனியாளாக குழந்தையை வளர்ப்பவரா? உங்களின் பழைய துணையுடன் உங்கள் வாழ்க்கை கரடுமுரடாக இருந்ததா? அப்படியானால் மீண்டும் ஒரு புது உறவுடன் வாழ்ந்திட உங்களுக்கு பயம் ஏற்படுவது இயல்பு தான். புதிதாக கிடைத்த துணையால் மீண்டும் அதே நரகத்தை அனுபவிக்க நேரிடும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க்கக் கூடும். அதனால் இவ்வகை கசந்த உறவுகளில் இருந்து தப்பிக்க தொழில் ரீதியான கவுன்செலிங் செல்ல அவர்கள் முற்படுவார்கள்.

English summary

Common Fears Of Single Parents Dating

Once you have children, the whole world changes and it is never the same again. As a single parent you have to fight the common fears most single parents go through.
Story first published: Friday, December 20, 2013, 19:14 [IST]
Desktop Bottom Promotion