For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மகளிடம் உறுதியான உறவை வளர்க்க சில டிப்ஸ்...

By Ashok CR
|

தங்கள் மகனின் அலைவரிசையோடு சுலபமாக இணைய முடியும் என தந்தைகள் பொதுவாக எண்ணுவதுண்டு. அதே போல் அவர்களின் எண்ணம் தங்கள் மகனின் எண்ணத்தோடு ஒத்து போய் இயற்கையாகவே அவர்களுக்குள் ஒரு பிணைப்பு இருக்கும் என்றும் அவர்கள் நம்புவதுண்டு. அதே போல் தங்கள் மகளின் அலைவரிசை தங்களை விட தங்கள் மனைவியோடு தான் சுலபமாக இணையும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல. மகள்கள் எப்போதும் தங்கள் தாயுடன் நெருக்கமாக இருப்பது வாடிக்கையான ஒன்று தான். ஆனால் சரியான வழிக்காட்டுதலுக்கும், வாழ்க்கையில் தேவைப்படும் ஆதரவுக்கும் தந்தையையே நாடுகிறார்கள். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் உறுதியான உறவுமுறை, அந்த மகளுக்கு தன்னம்பிக்கை, தற்சார்பு மற்றும் நல்ல மனப்பான்மையை உண்டாக்கும்.

ஒரு தந்தையாக உங்கள் மகளின் உணர்சிகளையும் தேவைகளையும் புரிந்து கொள்ளவும் பிணைப்பை ஏற்படுத்தவும் நீங்கள் அதிக உழைப்பையும் நேரத்தையும் செலவிட வேண்டி வரும். பல மகள்கள் தங்கள் தந்தையின் அடிச்சுவடியை பின்பற்றவே விரும்புவார்கள். அதனால் தங்களின் தந்தையை பின்பற்ற வேண்டுமானால் அவர்களின் தந்தை அவர்களுக்கு ஒரு சிறந்த வழி காட்டியாக விளங்க வேண்டும்.

Building A Strong Relationship With Daughter

உங்கள் மகளுடன் உறுதியான உறவை நிலைநாட்ட ஆரம்பத்திலிருந்தே சின்ன சின்ன முயற்சிகளில் ஈடுபட வேண்டும். உங்கள் மகளின் தேவைகள் மற்றும் உணர்சிகள் உங்கள் மகனின் தேவைகள் மற்றும் உணர்சிகளோடு ஒப்பிடுகையில் மாறுபடும். அதனால் அவைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சின்ன கப்புடன் தங்களின் டெடி பியருடன் விளையாடும் போது நீங்களும் அவர்களுடன் விளையாட வேண்டும் என்றில்லை. ஆனால் அவர்கள் விளையாடும் போது நீங்கள் அவர்களுடன் இருந்தாலே போதுமானது. அதுவே அவர்களுக்கு பெரிதாக தோன்றும். இது போன்ற செயல்கள் உங்கள் மகளுடனான உங்கள் உறவை உறுதிப்படுத்தும்.

பிறந்தநாள்

உங்கள் மகளுடனான உங்கள் உறவை உறுதிப்படுத்த முதல் படி என்ன தெரியுமா? அவர்களின் பிறந்த நாளின் போது அவர்களுடன் இருப்பது. அவர்களுக்கு பிடித்தவர்கள் அவர்களின் பிறந்த நாளின் போது உடனிருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாகும்.

அவர்களுக்கு தேவையான பரிசுகள்

பொதுவாக உங்கள் மகள் எதிர்பார்க்கும் பரிசுப்பொருட்கள் உங்கள் மகன் எதிர்ப்பார்ப்பில் இருந்து வேறுபடும். உங்கள் மகளின் விருப்பங்களை பற்றி ஆராய்ச்சி செய்து கொள்ளுங்கள். சில நேரம் அவர்களிடமே அவர்களின் விருப்பத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம். அப்படி அறிந்து அவர்களுக்கு பிடித்த பொருட்களை பரிசளித்தால் அவர்களின் மீது நீங்கள் எவ்வளவு அக்கறை வைத்துள்ளீர்கள் என்பதை அது எடுத்துக் காட்டும்.

அன்பாக பேசுங்கள்

உங்கள் மகள் உங்களிடம் பேசும் போது, நீங்கள் அவர்களிடத்தில் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்ள வேண்டும். மகள்கள் என்றாலே பொதுவாக ரொம்பவும் உணர்ச்சிவயப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்களை செல்லமாக அழைத்து அன்போடும் அனுசரணையோடும் பேசுங்கள்.

அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள்

விளையாட்டு என்று வந்து விட்டால் விதிமுறைகளை பின்பற்றி ஒழுக்கமாக விளையாடுபவராக இருக்கலாம் நீங்கள். ஆனால் உங்கள் மகளோடு விளையாடும் போது அவளின் விதிமுறைகளை பின்பற்றி அவள் கூறும் விளையாட்டை தான் விளையாட வேண்டும். ஒரு பொம்மை நாற்காலியில் அமர்ந்து பொம்மை கப்பில் அவர்களுடன் சேர்ந்து டீ குடிப்பதை போல் நடித்து விளையாட வேண்டி வரும். பார்க்க நகைப்பிற்கிடமாக இருந்தாலும், தன தந்தையுடன் அந்த டீயை பருகுவதே அவர்களுக்கு உலகமாக இருக்கும்.

அவர்களுடன் நேரம் செலவிடுதல்

சீரான முறையில் உங்கள் மகளுடன் நேரம் செலவிடுமாறு பார்த்துக் கொள்வது உங்களின் கடமையாகும். அவர்களுடன் நேரம் செலவிட்டால் தான் அவர்களுடனான உங்கள் உறவை உறுதியாக்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு முக்கிய அங்கமாகவே மாறுவீர்கள்.

வெளியே செல்லுதல்

பொதுவாக தந்தைமார்களுக்கு தங்களின் மகன்களுடன் வெளியே செல்வது என்றால் கொள்ளை பிரியமாக இருக்கும். ஆனால் அது மகன்களோடு நிற்காமல் மகள்களோடும் அதே அளவு ஆனந்தத்தை பெற முடியும். அவள் போக நினைக்கும் இடங்கள் மாறுபடலாம்; ஆனால் உங்கள் மகளுடன் ஒரு பூங்காவிற்கு சென்றால் கூட போதுமானதே. அது உங்கள் உறவை மேம்படுத்தும்.

ஷாப்பிங் செல்லுதல்

அனைத்து பெண்களுக்குமே ஷாப்பிங் செல்வதென்றால் பிடிக்காமல் இருப்பதில்லை. ஒரு வயது வரை பெண்களுக்கு தங்கள் தந்தையுடன் கடைக்கு செல்லவே விருப்பமாக இருக்கும். சில நேரம் அவர்களை ஆச்சரியப்படுத்துவதற்காக அவர்களை திடீரென சொல்லாமலும் ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்லலாம்.

கதை சொல்லுங்கள்

உங்கள் மகளுடனான உறவை மேம்படுத்த இரவு தூங்கும் நேரம் அவர்களுக்கு கதைகள் கூறுங்கள். எளிய கதை புத்தகங்களை அடிக்கடி அவர்களுக்காக வாங்கிக் கொடுங்கள். அவைகளை அவர்கள் தூங்கும் வேளையில் அவர்களுக்காக படித்துக் காட்டினால் அவர்கள் மீதான உங்கள் அன்பு அவர்களுக்கு புரியும்.

உல்லாச பயணம்

உங்கள் மகளுடன் சீரான முறையில் உல்லாச பயணம் மேற்கொள்ள திட்டமிடுங்கள். அப்படி பயணம் மேற்கொள்ள அவர்ளுக்கு பிடித்த இடங்களை தேர்வு செய்யுங்கள். அது அவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும்.

English summary

Building A Strong Relationship With Daughter

You need to take small steps from the beginning to establish a strong relationship with your daughter. You must understand the needs and emotions of a girl child is slightly different from that of a boy.
Story first published: Thursday, December 12, 2013, 19:14 [IST]
Desktop Bottom Promotion