For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலரின் பெற்றோர்களை சந்திக்க போறீங்களா? இத படிச்சுட்டு போங்க...

By Super
|

ஒருவரை முதலில் சந்திக்கும் போது என்ன வகையான தோற்றத்தை ஏற்படுத்துகிறோமோ, அதுதான் அவரை மீண்டும் சந்திக்கும் போதும் நிலைத்து நிற்கும் என்று சொன்னால் அதில் உண்மை பொதிந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இப்படியிருக்கும் போது, எந்தவொரு பெண்ணும், தன்னுடைய காதலனின் பெற்றோர்களை முதன்முதலில் சந்திக்கும் போது பதட்டமடைவதையும் தவிர்க்க முடியாது. 'அவர்கள் என்னை விரும்புவார்களா? எனக்கு அவர்களை பிடிக்குமா?' என்பது போன்ற எண்ணங்கள் அப்பொழுது அவர்களை அலைக்கழிப்பதையும் தவிர்த்திட முடியாது. உங்களுடைய காதலரின் பெற்றோர்களை நீங்கள் முதன் முதலில் சந்திக்கும் அதில் தவறுகள் நடக்காத வண்ணம் நீங்கள் சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீறி தவறுகள் நடந்தால், எதிர்காலத்திலும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சோஃபாவில் சாய்ந்து படுத்துக் கொண்டு அவர்களை முதல் முறை சந்திக்கும் போது என்ன நடக்கும் அல்லது அவர்களை எப்படி கவரலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள் - இதற்கு காரணம் இது பற்றி சில மோசமான கதைகளை கேட்டிருப்பது தான். எல்லா சந்திப்புகளுமே மோசமாக முடிவடைவதில்லை. எனினும், காதலரின் பெற்றோர்களை சந்திப்பதற்கு சற்றே முன்னேற்பாடுகளுடன் தயாராவது சிறந்த வழியாகும். நேர்மறை அணுகுமுறையும், திறந்த மனதுடன் இருப்பதும் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும். அவர்களிடம் நன்மதிப்பை பெறுவதில் உறுதியாக இருக்கவும். காதலரின் பெற்றோர்களைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் உங்களைத் தூங்கவும் விடாது. எனினும், இந்த கட்டுரையை நீங்கள் படித்து முடிக்கும் நேரத்தில் காதலரின் பெற்றோர்களை சந்திக்க தயாராகி விட்டு, நிம்மதியாக உங்களால் தூங்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Tips To Meet Your Boyfriend's Parents

1. முன்யோசனை தேவை

காதலரின் பெற்றோர்களை பார்க்க முடிவெடுக்கும் முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, திட்டமிடவும். நீங்களிருவருமே இந்த சந்திப்பின் முக்கியத்துவத்தை மிகவும் உணர்ந்தவர்களாகவும், ஒரே எண்ணத்துடன் உழைக்கவும் வேண்டும். உங்கள் இருவருக்கும் இடையிலான உறவு எவ்வளவு தீவிரமானது மற்றும் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை இதில் உறுதிப்படுத்தவும். மேலும், காதலரின் பெற்றோர்களை சந்திக்க நீங்களும் சிறப்பாக திட்டமிட வேண்டும்.

2. சற்றே ஆராய்ச்சி செய்யவும்

இந்த விஷயம் பற்றி சற்றே ஆராய்ச்சி செய்வது நல்ல பலனைத் தரும்! எனினும், இந்த ஆராய்ச்சிக்காக உங்கள் காதலரை சிறிதளவு தொந்தரவு செய்ய வேண்டியிருக்கும். அவருடைய பெற்றோர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், முடிந்த வரையிலும் அவர்களைப் பற்றியும், அவர்களிடையேயான திருமண பந்தம் பற்றியும் கூட அறிந்து கொள்வது நலம். அவர்களுடைய இயல்பை புரிந்து கொள்ளவும், விருப்பு-வெறுப்புகளை அறிந்திடவும் முயற்சி செய்யவும். உறவு தொடர்பான இந்த அறிவுரைகள் உங்களுக்கு அவர்களை கவர மிகவும் உதவிகரமாக இருக்கும். காதலரின் பெற்றோர்களை சந்திப்பதில் சிறிதளவு முயற்சியும், வலியும் இருக்கும். சுகமாக அனுபவியுங்கள் - காதலுக்காக!

3. பரிசுகளில் வெளிப்படுத்தலாம்

இது உங்கள் காதலரின் பெற்றோருடனான முதல் சந்திப்பு! இதனை தனித்துவமானதாக மாற்ற, சில பரிசுகள் தேவை. உங்களுடைய வருங்கால மாமியாருக்காக ஒரு பூங்கொத்தை வாங்கலாம். பூக்கள் ஏற்படுத்தும் மந்திர விளைவுகள் அலாதியானவை. மிகவும் விலை உயர்ந்த பரிசுகளை வாங்க வேண்டாம். ஏனெனில் அவை நீங்கள் செலவாளி அல்லது அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முயலுகிறீர்கள் என்ற தோற்றத்தை அவை உருவாக்கிவிடும். உறவுக்கான இந்த அறிவுரை அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவையாகும்.

4. உடைகள்

'ஆள் பாதி ஆடை பாதி' - நீங்கள் அணியும் ஆடை உங்களைப் பற்றி தெளிவாக சொல்லிவிடும். உங்களுடைய ஆடை அவர்களிடம் மிகச்சரியான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஜீன்ஸ் மற்றும் அரைகுறை உடைகளுக்குப் பதிலாக, பாரம்பரியமான உடைகளை அணிந்து சொல்வது நல்லது. காதலரின் பெற்றோர்களைப் சந்திக்க செல்வது சற்றே செலவை வரவழைக்கும் விஷயம் தான், ஆனால் அந்த செலவை நல்ல உடைகளை வாங்க பயன்படுத்துங்கள்.

5. வார்த்தைகளில் கவனம்

காதலரின் பெற்றோர்களை சந்திக்க செல்பவர்களுக்கான உறவு அறிவுரைகளில் ஒன்று - வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள் என்பது தான். உரையாடும் போது சிற்சில தவறான வார்த்தைகள் வருவதையும் கூட தவிர்ப்பது நலம். ஆர்வமில்லாத தலைப்புகளில் பேச வேண்டாம், அவர்களுக்கு எந்த தலைப்பு பிடிக்குமோ அதனைப் பேசலாம் - அளவாக. மதம் மற்றும் அரசியல் போன்ற தலைப்புகளை தவிர்ப்பது நல்லது. உரையாடுவதில் நீங்கள் கில்லாடி என்றால், இந்த முதல் சந்திப்பு என்றென்றும் நினைவில் நிற்கும் சந்திப்பாக அனைவருக்கும் அமையும்.

6. நடத்தை

'நடத்தையே மனிதனை உருவாக்குகிறது' - இந்த பழமொழியை காதலரின் பெற்றோர்களை சந்திக்க செல்லும் போது நினைவில் கொள்வது நல்லது. சிறிய விஷயம் கூட பெரிய அளவிலான மாற்றங்களை நிகழ்த்தி விடும் - தன்மையுடன் நன்றி சொல்வது, பணிவாக வேண்டிக் கொள்வது (ப்ளீஸ்) போன்றவை உறவை அடுத்த படிக்கு கொண்டு செல்ல உதவும்.

7. வாழ்த்துக்களை அடுக்குங்கள்

வாழ்த்துக்களுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை, உங்கள் காதலரின் பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே, அவர்களிடமோ, அவர்கள் வீட்டிலோ எந்தவொரு நல்ல விஷயத்தைக் கண்டாலும் புகழத் தொடங்குங்கள்.

இது போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதால் காதலரின் பெற்றோர்களுடனான முதல் சந்திப்பு இனிமையான நினைவுகளைத் தரும். முயற்சி செய்யுங்கள், இதயங்களை வெல்லுங்கள்!!

English summary

Tips To Meet Your Boyfriend's Parents

First impression is the best impression" - no doubt! The saying is absolutely true and you may not necessarily get a better time to make a good second impression. It can be a scary time for any girl friend to meet your guy's parents for the first time.
Story first published: Saturday, November 23, 2013, 19:08 [IST]
Desktop Bottom Promotion