For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண் ஊழியருடன் நெருங்கிப் பழகலாமா?.. பழகினால் என்னாகும்??

By Super
|

நம் வாழ்க்கையில் நட்பு என்பது ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயமாகும். நம் வாழ்க்கையில் பல வழிகளில் நண்பர்களையும் நட்பையும் அதிகரித்து கொண்டு தான் செல்கிறோம். நம் பாலிய பருவத்தில் தொடங்கி பள்ளி, கல்லூரி என அனைத்து கால கட்டத்திலும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் போகும். இப்போது நீங்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டால் இந்த நட்பு வட்டாரம் அங்கேயும் பெருகத் தொடங்கும். பொதுவாக நட்பு என்று வந்துவிட்டால் ஆண் பெண் என்ற பாகுபாடு இருப்பதில்லை. உங்களுக்கு ஆண் மற்றும் பெண் நண்பர்கள் இருக்கக் கூடும். இரு பாலினருக்கும் தகுந்த முக்கியத்துவத்தையும் நீங்கள் அளிப்பீர்கள்.

இவர்களில் சில பேரை பழக்கமானவர்கள் என்றும் சிலரை நண்பர்கள் என்றும் நாம் வகை படுத்துவதுண்டு. ஏன்? பொதுவாக நண்பர்களாக இருப்பவர்களிடம் மனரீதியான நல்லதொரு உறவை வளர்த்திருப்போம். அவர்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் தான் உங்கள் இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்வீர்கள். அதனால் தான் நண்பர்கள் என்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பெரிய சொத்தாகவும் ஊக்கமாகவும் பார்க்கப்படுகின்றனர், முக்கியமாக உங்கள் அலுவலகத்தில். அலுவலகம் என்று எடுத்துக் கொண்டால் ஆண் நண்பர்களின் அணுகுமுறை சற்று வித்தியாசமாகவே இருக்கும்.

Male Friends At Work: Pros And Cons

அலுவலகம் என்று வந்து விட்டால் வித்தியாசமான அணுகுமுறை அவசியமானதாகவே பார்க்கப்படுகிறது; அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் தனிப்பட்ட ரீதியாக இருந்தாலும் சரி. உடன் வேலை செய்யும் ஆண்கள் சில நேரம் பெரும் உதவியாக விளங்குவார்கள். நம் வேளையில் சில நேரம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவ்வேளையில் நம் நண்பர்களே நமக்கு கை கொடுப்பார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான நட்பு நேர்மறையாகவும் அமையும் எதிர்மறையாகவும் அமையும். அதனால் அதில் பல நன்மைகளும் அடங்கியுள்ளது, தீமைகளும் அடங்கியுள்ளது. உடன் வேலை செய்யும் ஆண் நண்பர்களால் ஏற்படும் அப்படிப்பட்ட நன்மைகளையும் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்மைகள்:

* வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனை என்பது பொதுவான ஒன்றே. அப்படி ஏதாவது பிரச்சனையால் நீங்கள் பாதிக்கப்பட்டால் உடன் வேலை செய்யும் ஆண்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார்கள். தொழில் என்று வந்து விட்டால் ஆண் நண்பர்களின் வேலை பார்க்கும் அணுகுமுறையில் ஒரு தனித்துவம் கண்டிப்பாக இருக்கும். அதனால் அவர்களுக்கென தனி ஸ்டைல் இருக்கும். அவர்கள் மனதில் பல ஐடியாக்களும் தோன்றும். அதனால் உங்கள் பிரச்சனைகளுக்கு அவர்கள் சிறந்த யோசனைகளை வழங்குவார்கள்.

* ஒரு நல்ல வேலை என்றால் அது உங்களுக்கு திருப்தியை அளிக்க வேண்டும். ஒரு வேலையில் நீங்கள் சேர்ந்த பின் உங்களின் முதல் எதிர்பார்ப்பே அந்த வேலையில் திருப்தி கிடைக்கிறதா இல்லையா என்று பார்ப்பதே. வேலை செய்யும் இடத்தில் ஆண் நண்பர்கள் இருக்கும் போது இந்த திருப்தி கிடைத்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகிறது.

* பொதுவாக உடன் வேலை செய்யும் ஆண்கள் உங்களுக்கு நல்ல தோழர்களாக இருப்பார்கள். அவர்களிடம் நீங்கள் தனிப்பட்ட முறையில் சொந்த வாழ்க்கையை பற்றி பேசாவிட்டாலும் கூட அவர்கள் உங்களுக்கு வேலை விஷயத்தில் பெரும் உதவியாக இருப்பார்கள். அலுவலகத்துக்கு வெளியே நீங்கள் தெரியாத மனிதர்களை போல் கூட நடந்து கொள்ள கூடும். அவர்கள் உங்களுக்கு தொழில் ரீதியாக செய்யும் உதவி உங்களுக்கு பெயரையும் புகழையும் கூட சேர்க்கும்.

* தொழில் என்பது ஒரு போட்டி நிறைந்த களமாகும். அதுவும் ஆணாதிக்கம் அதிகமாக நிறைந்த இடமாகும். தொழில் ரீதியாக பெண்கள் முன்னேற்ற ஏணிகளின் மேல் ஏறுவதற்கு உடன் வேலை செய்யும் ஆண் நண்பர்களின் துணை கண்டிப்பான ஒன்றாக விளங்குகிறது.

தீமைகள்:

* எல்லா நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதை போலவே, ஆண் பெண் இடையேயான நட்பிற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வெறும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியுமா என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு. இதற்காக பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு தான் வருகிறது. அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களிடம் நட்பு பாராட்டுவதால் பல நன்மைகள் இருந்தாலும் கூட சில தீமைகளும் இருக்கத் தான் செய்கிறது.

* ஆண்-பெண் நட்பு சில சமயம் உடல் கவர்ச்சியினால் அவர்களை ஆட்டுவிக்கும். அப்படி ஆகும் போது நட்பு என்ற எல்லைக்குள் மட்டும் உங்களால் அதிக காலம் இருக்க முடிவதில்லை.

* எதிர் பாலினத்தோடு அந்த மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுவது இயற்கை தானே. உங்களுடன் வேலை செய்யும் ஆண் நண்பரிடம் அவ்வகை உணர்வு ஏற்பட்டு விட்டால் அது அவ்வளவு சுலபத்தில் போகாது என்பதை மறந்து விடாதீர்கள். இது நன்றாக போய் கொண்டிருக்கும் உங்கள் உறவை பாதிக்கும்.

* உங்களுடன் வேலை செய்யும் ஆணுடன் நட்பு நிலைக்க வேண்டுமானால் நீங்கள் இருவருமே திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டு. திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் இருவருக்கமே சுதந்திரம் அதிகமாக இருக்கும். ஆனால் இதுவே உங்கள் இருவரில் யாரவது ஒருவர் திருமணமானவராக இருந்தாலும் கூட நிலைமையே தலைகீழ். உங்கள் வாழ்க்கையில் வேறொருவர் இருக்கிறார் என்ற எண்ணம் எப்போதும் உங்கள் தலையில் ஓடி கொண்டே இருக்கும். அதனால் அவருக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற குற்ற உணர்ச்சி ஏற்படும்.

* நீங்கள் திருமணமானவரா? அப்படியானால் உங்களுடன் வேலை செய்யும் உங்கள் ஆண் நண்பரால் உங்கள் கணவனுடனான உங்கள் உறவில் உரசல்கள் ஏற்படலாம். உங்கள் நட்பினால் உங்கள் கணவனின் மனதில் பொறாமையும், பாதுகாப்பின்மையும் ஏற்படும். அதனால் உங்கள் நண்பருடனான உறவில் கவனம் தேவை.

English summary

Male Friends At Work: Pros And Cons

A work place demands a different approach both professionally and personally. Male colleagues may be of great help sometimes. The male and female friendships may work both the positive and negative way. They also have their pros and cons attached to it. Here is a list of pros and cons of male friends at work.
Desktop Bottom Promotion