For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறவுகளில் பிரச்சனைகள் வராமலிருக்க ஃபேஸ்புக்கில் நிச்சயம் செய்யக்கூடாதவைகள்!!!

By Super
|

நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைய வழி சமூக வலைத்தளங்கள் மாறி விட்டன. நம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நாம் விரும்பும் மனிதர்களுடன் தொடர்பு கொள்ள மிகவும் இன்றியமையாத சாதனங்களாக இவை உள்ளன. குறிப்பாக ஃபேஸ்புக்கானது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பேருக்கும் மேலாக பயன்படுத்தப்படும் வலைத்தளமாக உள்ளது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக் வழியாக தொடர்பு கொள்வது மிகவும் எளிய விஷயமாக இருப்பதே இதன் காரணமாகும். இது நம்மை அனைவருடனும் தொடர்பில் இருக்க வைக்கிறது. மேலும், உங்களுக்கு ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லையென்றால், உலகை விட்டே விலகியுள்ளவர் போல நடத்தும் நிலையும் கூட இன்று நிலவி வருகிறது.

சமூக வலைத்தளங்கள் எவ்வளவோ உதவிகரமாக இருந்து வந்தாலும், தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க அவற்றை கவனத்துடன் கையாள வேண்டும். நீங்கள் மணமாணவராகவோ அல்லது வேறு தொடர்பிலோ இருக்கும் போது இந்த கவனம் சற்றே கூடுதலாக இருக்க வேண்டும். இன்றைய ஃபேஸ்புக் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமல் இல்லாமல், வாழ்க்கையுடன் ஆழமான தொடர்புடைய ஊடகமாக மாறி விட்டது. மனிதர்கள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவும், உங்களுடைய விபரங்களை வைத்தே உங்களைப் பற்றி கணிக்கவும் வகை செய்து விடும்.

Facebook Mistakes To Avoid In Relationships

நீங்கள் ஒரு உறவில் உறுதியாக இருக்கும் வேளைகளில் ஃபேஸ்புக்கில் சில அடிப்படையான தவறுகள் நடப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம். உங்கள் பெண் நண்பரின் விபரங்களை வேவு பார்த்தல், அனுமதியின்றி ஊடுருவுதல், அவருக்குத் தெரியாமலேயே அவருடைய நண்பர்களுடன் நட்பு பாராட்டுவது போன்ற செயல்களை இந்த தவறுகளில் சிலவாக குறிப்பிட முடியும். ஃபேஸ்புக்கில் நீங்கள் செய்யும் செயல்கள், உங்கள் துணைவருக்கு எதிராக திரும்பாத வகையில் செயல்பட வேண்டும். சில நேரங்களில், அவருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை முகநூலில் அவருக்குத் தெரியாமல் வெளியிட்டால் உறவில் விரிசல் ஏற்பட்டு, மீண்டும் இணைய வழியில்லாமல் போய் விடும்.

இங்கே ஃபேஸ்புக்கில் தவிர்க்கப்பட வேண்டிய சில தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

1. வேவு பார்த்தல்

உங்கள் துணையின் விபரங்களை எப்பொழுதும் வேவு பார்க்க வேண்டாம். இது அவளுடைய கற்பனை உலக தனிமையை பாதித்து விடுகிறது. முகநூல் என்பது மனிதர்களின் இரண்டாவது வாழ்க்கையாக இல்லாமல், இன்றளவில் நிகழ்கால வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது.

2. அனுமதியின்றி ஊடுருவுதல்

தங்களுடைய திறமையை நிரூபிக்கவோ அல்லது வேறு ஏதாவது நோக்கத்துடனோ சில பேர் விளையாட்டுத் தனமாக செய்யும் அடிப்படையான தவறுகளில் ஒன்றாக இது உள்ளது. உங்கள் துணைவர் எவ்வளவு தான் உங்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும், அவருடைய சுய விபரங்களை அவருக்குத் தெரியாமல் ஊடுருவிப் பார்க்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

3. அவளுடைய நண்பர்களுக்கு நட்பு கோரிக்கைகள் அனுப்புதல்

உங்களுக்கும் அவளுக்கும் தெரிந்த நண்பர்களுக்கு 'நட்பு கோரிக்கைகள்' அனுப்புவது நல்லது தான். ஆனால், அதே விஷயத்தை அவளுக்கு மட்டுமே தெரிந்து, உங்களுக்குத் தெரியாத அழகிய பெண்ணொருத்திக்கு அனுப்பினால், அது கொண்டு வரும் பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள்.

4. புதிய விஷயங்களை புறக்கணித்தல்

நீங்கள் ஃபேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்துபவராக இருந்து, அவளுடைய 'அப்டேட்ஸ்'களை கவனிக்காமலும், 'லைக்' போடாமலும் இருந்தால் கூட பிரச்சனைகள் பிரளயமாக உருவெடுக்கும்.

5. எதிர்ப்பு விஷயங்களை பதிவிடுதல்

நீங்கள் தொடர்பில் இருக்கும் போது, அதுவும் ஃபேஸ்புக் வழியாகவும் தொடர்பில் இருக்கும் போது, நீங்கள் பதிவிடும் எதிர்வாதம் மிக்க மற்றும் கண்ணியமில்லாத பதிவுகளை சற்றே கவனத்துடன் பரிசீலனை செய்யுங்கள். பலருக்கும் தெரியக் கூடிய இது போன்ற பதிவுகளால், அவளுடைய நண்பர்களும் கூட கேலி செய்து மோசமான நிலைக்கு அவளை தள்ளி விடுவார்கள்.

6. நெருக்கமான புகைப்படங்களை பதிவேற்ற வேண்டாம்

உங்கள் காதலியுடன் நீங்கள் தனிமையில் செய்பவை அனைத்தும் தனிமையாகவே இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களிடம் ‘பாப்புலாரிட்டி' பெற வேண்டும் என்ற நோக்கில், இது போன்று நெருக்கமான படங்களை பதிவேற்றம் செய்வதை அறவே நினைத்தும் கூட பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் காதலியின் தனிமை மற்றும் உணர்வுகளை பாதிக்கும்.

7. எதிர்மறை கருத்துக்கள்

நீங்கள் அவளுடைய பதிவுகளுக்கு அவ்வப்போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் அவளை கவனிக்கிறீர்கள் என்பது தெரியும். எனினும், எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் இழிவு படுத்தும் கருத்துக்களை பதிவிட்டு, அவரை வெளிப்படையாக விமர்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது.

English summary

Facebook Mistakes To Avoid In Relationships

When you are in a committed relationship, it is important to avoid certain basic Facebook mistakes. Here are some Facebook mistakes you must avoid being in a relationship.
Story first published: Saturday, November 23, 2013, 13:08 [IST]
Desktop Bottom Promotion