For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவனை அன்போடு அழைக்க சில அழகிய செல்லப்பெயர்கள்!!!

By Super
|

இந்த உலகத்தில் கணவன் மனைவி இருவரும் ஒரு அழகிய உறவுமுறையை பகிர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த உறவுக்கு இடையே அளவுக்கடந்த காதல், அன்பு, நம்பிக்கை, மற்றும் அக்கறை நிலவும்.இந்த காதலையும் அன்பையும் பல விடத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உடல் ரீதியான நெருக்கம், காதல் உணர்வுடன் டேடிங் மற்றும் இனிமையான உரையாடல் என இவையனைத்துமே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் வெளிக்காட்டும் விதமே.

பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவியை குஷிப்படுத்தி அவர்களை பரவசமடைய செய்ய அவர்களை செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பார்கள். பெண்களுக்கும் அதை மிகவும் விரும்புவார்கள். பெண்கள் இப்படி தங்கள் கணவனை செல்லப் பெயர் வைத்து அழைப்பதை ஆண்கள் விரும்பினாலும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சிலருக்கு அது க்யூட்டாக தோன்றும். சிலருக்கு அது காதலை உண்டாக்கும். இப்படி பட்ட செல்ல பெயர்கள் உங்கள் உறவுகளை ஆழமாக்கி ஒரு வித நெருக்கத்தை உண்டாக்கும்.

Couple

முன்பெல்லாம் மனைவிகள் கணவன் பெயரை உச்சரிக்கவே மாட்டார்கள். அதன் பின் "வாங்க", "போங்க", "என்னங்க", "அத்தான்", "மாமா" என்று அழைத்தனர். அதன் பின் பெயரை சொல்லி கூப்பிட தொடங்கினர். இன்றைய கால கட்டத்தில் "வாடா", "போடா" என்று இன்னமும் உரிமையுடன் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அதனுடன் சேர்த்து இன்னும் பல செல்லப் பெயர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு கணவனுக்கும் பல வகை குறும்புத்தனமான செல்லப் பெயர்களை மனைவிகள் உபயோக்கிகலாம். அப்படி பட்ட சில வகைகளை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். ஆவலாக உள்ளதா? இதோ உங்களுக்காக!

தித்திப்பான உரையாடல் செல்லப் பெயர்கள்

இனிப்பாகவும் தித்திப்பாகவும் இருக்கும் செல்லப் பெயர்களை கொண்டு உங்கள் கணவனை அழைக்க வேண்டுமா? அப்பெயர்கள் இவ்வகையை சாரும். அப்படி அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை தான் "ஹப்பி" - இது "ஹஸ்பண்ட்" என்ற வார்த்தையின் சுருக்கமாகும். இதே போல் இன்னும் சில பெயர்களும் உள்ளது - "ஹனி", "ஸ்வீட்டி", "பேபி", "சுகர்" போன்றவைகள் எல்லாம் சில உதாரணங்கள். இது நாள் வரை உங்கள் கணவனை இந்த மாதிரி செல்லப்பெயர்களை கொண்டு அழைக்கவில்லை என்றால் உங்கள் இருவருக்கும் இடையே இனிப்பான உரையாடல் நடந்திருக்கிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது?

நடு ராத்திரி செல்லப் பெயர்கள்

பொதுவாக உங்கள் கணவன் உங்களை விட்டு தூரமாக இருக்கும் வேளையில் இவ்வகை செல்லப்பெயர்களை மனைவிகள் பயன்படுத்துவார்கள். புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமண வாழ்வில் இன்னமும் கூட அன்யோநியமாக இருப்பவர்களுக்கு இவைகளை பற்றி நன்றாக தெரியும். இரவு நீண்ட நேரம் கழித்து உங்கள் கணவனிடம் தொலைபேசி மூலம் பேசி கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கண்டிப்பாக உங்களுக்கு குறும்புத்தனம் வந்து விடும். இந்த நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும் சில செல்லப்பெயர்கள் இதோ - "ஹாட்டி", "செக்ஸி", "மை மேன்", "ஹீரோ", "ஏஞ்செல்" போன்றவைகள்,

எல்லோருக்கும் தெரிந்த இந்திய செல்லப் பெயர்கள்

இவ்வகை செல்லப்பெயர்கள் இந்திய மொழிகளில் பல காலமாக நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வகை செல்லப்பெயர்களுக்கு இன்னமும் கூட அதே மவுசும் காதல் உணர்வும் ஏற்படுவது உண்டு. ஹிந்தியில் அப்படிப்பட்ட சில செல்லப்பெயர்கள் இதோ - "பச்சா", "சோனா", "பாபு", "ஜான்", "பெபோ" மற்றும் புகழ்பெற்ற "ஜானேமன்". இவைகள் குழந்தைத்தனமாக இருந்தாலும் கூட கேட்பதற்கு இனிமையாக தான் இருக்கும். இதே போல் மற்ற இந்திய மொழிகளிலும் கூட பல செல்லப்பெயர்கள் உள்ளது.

ஹப்பி - செல்லப் பெயர்கள்

நம் நாட்டில் இன்னமும் கூட பல பெண்கள் தங்களின் கணவன் பெயரை உச்சரிப்பதில்லை. அதற்கு பதிலாக ஹிந்தியில் "சுண்டே ஹோ", மராத்தியில் "அஹோ", தமிழில் "என்னங்க" என ஒவ்வொரு மொழியிலும் பயன்படுத்துகின்றனர். இவ்வகை செல்லப் பெயர்கள் கேட்பதற்கு இனிமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கணவன் மீதுள்ள மரியாதையையும் குறிக்கும். கணவன்களை இவ்வகை செல்லப்பெயர்கள் கொண்டு அழைக்கும் போது பெண்கள் அசட்டு சிரிப்பு சிரிப்பதுண்டு; குறிப்பாக புதிதாக திருமணமான பெண்கள். ஏன் கணவனுக்கு கூட மனைவி இப்படி அழைப்பது ரொம்பவும் பிடிக்கும்.

ரொமாண்டிக் ஹீரோ

பல பெண்களுக்கு தங்கள் கணவனை ரொமாண்டிக் ஹீரோக்களின் பெயர்களை கொண்டு அழைப்பதில் விருப்பம் இருக்கும். உதாரணத்திற்கு "ரோமியோ", "ரஞ்ச்ஹா", "மஜ்னு" போன்றவை. இந்த பெயர்கள் எல்லாம் காதலில் தோல்வி அடைந்த ஹீரோக்களின் பெயர்கள் என்பதை அனைவரும் அறிவீர்கள். இவைகளையெல்லாம் இப்போது செல்லப்பெயர்களாக மனைவிமார்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரோமியோ எம்று அழைத்தால் ஆண்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை ஆனால் பெண்கள் அதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

English summary

Cute nicknames for husband

For every husband there are different categories of naughty and cute nicknames that a wife can use. I have a few categories of cute nicknames that can be used for husbands. They are as listed below.
Desktop Bottom Promotion