For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூச்ச சுபாவம் கொண்ட ஆணுடன் டேட்டிங் போக போறீங்களா? முதல்ல இத படிங்க...

By Maha
|

காதலானது எந்நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும். அதிலும் இன்றைய காலத்தில் காதலிக்காமல் இருப்பவர்களைப் பார்க்கவே முடியாது. மேலும் இந்த காதல் ஒருவர் மீது வருவதற்கு எந்த ஒரு காரணமும் தேவையில்லை. காரணத்தோடு வரும் காதலை விட, காரணம் மற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல் வரும் காதல் சிறந்தது. அந்த வகையில் ஒருவர் மீது காதல் வந்துவிட்டால், அவர்களை புரிந்து கொள்வதற்கு, இன்றைய காலத்தில் மேற்கொள்ளும் ஒரு செயல் தான் டேட்டிங்.

நிறைய பேர் டேட்டிங் என்று சொன்னால் கோபப்படுவார்கள். ஏனெனில் அதன் உண்மையான அர்த்தம் தெரியாததாலேயே ஆகும். ஆனால் உண்மையில் டேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள, இருவரும் அமைதியான ஒரு இடத்திற்கு செல்வதாகும். அந்த வகையில் நல்ல கலகலப்புடன் இருக்கும் ஆணுடன் டேட்டிங் சென்றால், கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களே நம்மை பேச வைத்து விடுவார்கள். ஆனால் கூச்ச சுபாவம் கொண்ட ஆணுடன் சென்றால், அவர்களை எளிதில் பேச வைப்பது என்பது கடினமான ஒன்று.

ஏனெனில் அத்தகையவர்கள் எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். எப்போதும் அமைதியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஆகவே அந்த மாதிரியான ஆணுடன் டேட்டிங் செல்வதாக இருந்தால், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில முக்கியமான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவ்வாறு நடந்தால், நிச்சயம் அவர்களது கூச்சத்தைப் போக்கி, அவர்களது நடவடிக்கையை மாற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்

பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்

கூச்ச சுபாவம் கொண்ட ஆணாக இருந்தால், அவர்கள் மற்றவர்களுடன் எளிதில் பழகமாட்டார்கள். அப்படி பழகினாலும், அவர்கள் ஒருவித வசதியின்மையை உணர்வார்கள். மேலும் எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். எனவே அவர்களிடம் அவர்களது நண்பர்கள், வாழ்க்கை மற்றும் இதர விஷயங்களை கேட்கும் முன், அவர்கள் உங்களுடன் வசதியாக இருக்கும் நிலையை அடையும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்

உங்களைப் பற்றி சொல்லுங்கள்

கூச்ச சுபாவம் உள்ள ஆண்கள், வெட்கத்தினால் மனதில் உங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமல் இருப்பார்கள். ஆகவே அதனை அவர்களின் கண்களைப் பார்த்து புரிந்து கொண்டு, உங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்ல வேண்டும். இதனால் அவர் ஆச்சரியப் பட்டு, உங்களது அன்பைக் கண்டு வியப்பார்கள்.

அவர்கள் சொல்வதை கவனிக்கவும்

அவர்கள் சொல்வதை கவனிக்கவும்

எந்த ஒரு உறவாக இருந்தாலும், அதில் ஒருவர் மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் சொல்வதை சலிப்பு தட்டாமல் கேட்டால், அவர்களும் தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

உடல் மொழியை அறிந்து கொள்ளவும்

உடல் மொழியை அறிந்து கொள்ளவும்

உங்கள் துணை வெளிப்படையாக எதையும் சொல்லாமல் இருந்தாலும், அவர்களது உடல் மொழியை கவனித்தால், அது பல விஷயங்களை சொல்லும். எனவே இருவரும் ஒன்றாக இருக்கும் போது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதோடு, உடல் மொழியையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கோபப்பட வேண்டாம்

கோபப்பட வேண்டாம்

மற்ற காதலர்களுடன், உங்கள் காதலரை ஒப்பிட வேண்டாம். ஏனெனில் இவர்கள் சற்று கூச்ச சுபாவம் கொண்டவர்களாதலால்,. அவர்கள் உங்களிடம் காதலை வெளிப்படுத்த சற்று நாட்கள் ஆகும். ஆகவே அதுவரை அவர்கள் மேல் கோபப்படாமல், பொறுமையாக இருக்க வேண்டும்.

வசதியாக உணர வையுங்கள்

வசதியாக உணர வையுங்கள்

கூச்ச சுபாவம் கொண்ட உங்கள் காதலனை குடும்பத்தினர், நண்பர்கள் போன்றவர்களுடன் அறிமுகப்படுத்தி, அவர்கள் மற்றவர்களுடன் வெட்கப்படாமல் பேசுமாறான நிலைமையை உருவாக்கிக் கொடுங்கள்.

கொஞ்சம் குறும்புத்தனத்துடன் இருங்கள்

கொஞ்சம் குறும்புத்தனத்துடன் இருங்கள்

உங்கள் காதலன் குறும்புத்தனத்துடன் நடக்காவிட்டாலும், நீங்கள் இருக்கலாமே! ஆகவே அவர்களுக்கு முத்தம் கொடுப்பது, நண்பர்களுடன் ஒன்றாக இருக்கும் போது அவர்களைப் பார்த்து கண் அடிப்பது, லொடலொடவெனப் பேசுவது போன்றவற்றை மேற்கொண்டு, அவர்கள் உங்களுடன் பேசும் போது வசதியாக உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Date A Reserved Guy

There are many things like this which you can do to help your reserved guy to open up with you. Let's have a look on the tips to date a reserved guy.
Story first published: Tuesday, September 24, 2013, 16:37 [IST]
Desktop Bottom Promotion