For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணத்திற்கு வரும் உறவினர்களை அசத்த சில டிப்ஸ்...

By Super
|

திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்ச்சி. இருமனங்கள் ஒன்று சேரும் இந்த நிகழ்ச்சியில், உறவினர்கள் அனைவரும் வந்து வாழ்த்தினால், வாழ்க்கையே இனிமையாக அமையும். எவ்வளவு தான் திருமண ஏற்பாடுகளில் மிகவும் பிஸியாக இருந்தாலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் சரியாக உபசரிக்க வேண்டும். பொதுவாக தமிழர்கள் உபசரிப்பதில் வல்லவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். அத்தகைய பெயரை பெற்ற நாம், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை சரியாக உபசரிக்க வேண்டும் அல்லவா?

இவ்வாறு சரியாக உபசரித்தால், திருமணத்திற்கு வரும் உறவினர்களிடம் நல்ல பெயரைப் பெறுவதும், வெளியே நம்மைப் பற்றி புகழ்ந்தும் பேசுவார்கள். ஆகவே தான் திருமணத்திற்கு வாழ்த்த வரும் உறவினர்களின் மனதை குளிர வைக்க வேண்டும். குறிப்பாக இனிமையான இந்த நேரத்தில் யாருடைய மனதும் புண்படாத வகையில், திருமண ஏற்பாடுகள் இருப்பது அவசியம். சரி, அதைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்ஜெட் விஷயங்கள்

பட்ஜெட் விஷயங்கள்

எப்போதும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் ஒரு வரவு செலவு அமைத்து, அதன் பின்னர் விருந்தினர்களை அழைக்க வேண்டும். முக்கியமாக இடம் அனைவருக்கும் ஏற்ப அதிக அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் விருந்தினர்களுக்கு மூச்சு முட்டும். அனைத்து விருந்தினர்களுக்கும் கவனம் கொடுக்கவில்லை என்றாலும், யாரையும் ஒதுக்காமல் பார்த்து கொள்வது அவசியம். தனிப்பட்ட முறையில் அனைத்து விருந்தினர்களையும் கவனிக்க வேண்டும். இது கடினம் என்றாலும், கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

திருமணத்திற்கு முன் சேர்ந்து பேசுங்கள்

திருமணத்திற்கு முன் சேர்ந்து பேசுங்கள்

திருமண இரவுக்கு முன் அனைத்து விருந்தினர்களையும் சந்தியுங்கள். சில விருந்தினர்கள் முதல் முறையாக ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிடலாம். இந்த சந்திப்பின் மூலம் உங்கள் விருந்தினருக்கு நல்வரவையும், மகிழ்ச்சியையும் நீங்கள் தருகின்றீர்கள் என்பது உண்மை.

சுத்தமான வாஷ்ரூம்

சுத்தமான வாஷ்ரூம்

விருந்தினர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அடிக்கடி வாஷ்ரூம் செல்வார்கள். எனவே, வாஷ்ரூமை நன்கு தூய்மையாக வைத்துக் கொள்ள ஒரு உதவி பணியாளரை ஏற்பாடு செய்து, தூய்மையை கண்காணித்து விருந்தினரை அசத்துங்கள்.

அமரும் வசதி

அமரும் வசதி

பொதுவாக விருந்தினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இடங்களில் அமரும் வசதி மிகமிக முக்கியம். உட்கார இடம் இல்லை என்பதை பற்றி, உங்கள் விருந்தினர் முனுமுனுப்பதை தவிர்த்து, நீங்கள் போதுமான இட வசதியையும் உட்காரும் வசதியையும் செய்து கொடுங்கள். அதற்கு கூடுதல் நாற்காலிகள் இருக்கட்டும்.

உணவு வகைகள் அதிகம் இருக்கட்டும்

உணவு வகைகள் அதிகம் இருக்கட்டும்

விருந்தினர்களுக்கு உணவு மெனுவை கவனமாக திட்டமிடுங்கள். நல்ல திருமணத்தில் அவசியம் விருந்து ஏற்பாடு தான். திருமண சடங்குகளில் இரவு வெகு நேரம் வரை விருந்தினர்கள் சந்தோஷமாக இருக்க, நீங்கள் உங்கள் விருந்தினர்களுக்கு பசி ஏற்படுத்தாமல், அவ்வப்போது சிற்றுண்டிகளைக் கொடுக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். எனவே அதிக அளவில் பணியாளர்களை அமர்த்தி காலை மற்றும் இரவு உணவுகளை கவனமாக ஏற்பாடு செய்யுங்கள்.

கேளிக்கை

கேளிக்கை

திருமண முழுவதும் பொழுபோக்கு வைத்து விருந்தினர்களை அசத்த வேண்டும். ஒரு பாடகர் அல்லது இசைக்குழுவினரை அமர்த்தி அவர்கள் இன்பமாக உணர செய்ய வேண்டும். நடனக்குழு போன்ற பல்வேறு கேளிக்கைகளை நடத்துவதால் உங்கள் விருந்தினர்களை நீங்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்யலாம்.

சப்தமான இசையை தவிர்க்கவும்

சப்தமான இசையை தவிர்க்கவும்

அதிக காற்றோட்டம் இல்லாத கல்யாண மண்டபத்தில் அதிக சப்தத்துடன் இசையை வைப்பது, அனைவரின் காதையும் செவிடாக்குவது போன்றதாகும். சில விருந்தினர்களுக்கு இது உண்மையில் எரிச்சலை உண்டாக்கும். ஆகவே மென்மையான இசையை வைத்து அவர்களை மகிழ்ச்சியூட்டுங்கள்.

பரிசுகளை கொடுத்து நன்றி சொல்லுங்கள்

பரிசுகளை கொடுத்து நன்றி சொல்லுங்கள்

திருமணத்திற்கு வந்து, திருமணத்தை கலகலப்புடன் வைத்துக் கொண்ட உறவினர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்வூட்டுங்கள். இதனால் அவர்களின் அன்பை மேலும் சம்பாதிக்க முடியும்.

மேற்கூறியவற்றால், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை சந்தோஷமாக வைத்து கொள்வது எப்படி என்பதை அறிந்திருப்பீர்கள். இவற்றைப் பின்பற்றி, அவர்களை நன்கு அசத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Ideas To Keep Your Wedding Guests Happy

A perfect wedding is what every couple dreams of. It is a memorable occasion for a couple to share their happiness. It is important that you give priority to your guests comfort, while planning for your wedding arrangements. It becomes your responsibility to keep them happy. Here are some tips that will help you to keep your guests involved and feel comfortable during your wedding celebrations.
Desktop Bottom Promotion