For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க ஆசையா? இத ஃபாலோ பண்ணுங்க...

By Super
|

பொதுவாக பெண்களைத் திருப்திப்படுத்துதல் மிகவும் கடினமான செயல் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆண்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் நெடுநாட்களுக்கு பெண்கள் மனதில் நீடித்து நிற்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், அவர்களது இதயத்தைத் தொடுவதுதான்.

பெண்களின் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள் என்றால், மீதமுள்ள காரியங்கள் எவையும் கடினமல்ல. பெரும்பாலான இளைஞர்கள் தமது காதலிகளுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வாங்கிப் பரிசளித்தல் மட்டுமே, அவர்களது இதயத்தில் இடம் பெற ஒரே வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம், பரிசளித்தல் நல்லது தான். ஆனால் உண்மையான இதயத்தையும், அன்பையும் பரிசளித்தால், அவற்றின் பிரகாசத்திற்கு முன் இதர பரிசுப் பொருட்கள் எல்லாம் மங்கிவிடும்.

முதலில் காதலியின் இதயத்தை வெல்ல மிக எளிதான வழி என்ன தெரியுமா? அவர் உண்மையிலேயே எப்படிப்பட்ட குணாதிசயம் உள்ளவர் என்பதைப் புரிந்து கொள்வது தான். பெண்களின் உள்ளத்தில் உள்ளதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்று ஆண்கள் கூறி வருகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பெண்களைப் புரிந்து கொள்வதுடன் அவர்களது உள்ளத்தோடு உணர்வுபூர்வமாக இணைந்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். ஆண்கள் எதையும் நேரடியாகப் பேசிவிடுவார்கள். ஆனால், பெண்களோ எல்லாவற்றையும் மறைமுகமாக உணர்த்துவதையே விரும்புவார்கள். ஆகவே உங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு இணைப்புப் புள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

இறுதியாக இளைஞர்களே! நீங்கள் உங்களது செக்ஸ் பற்றிய எதிர்பார்ப்புகளைக் கொஞ்சம் காலத்திற்கு அடக்கியே வைத்திருங்கள். செக்ஸ் என்பது உறவின் ஆழத்தை அதிகப்படுத்தும் என்பது உண்மை தான். ஆனாலும், உறவின் மையமாக அது ஆகி விடக் கூடாது. உடல் சார்ந்த இன்பம் மட்டும் தான் உங்களுக்கு மிகவும் முக்கியம் என்பது போன்ற தோற்றத்தை, நீங்கள் உங்கள் காதலியின் மனதில் உண்டாக்கி விடக் கூடாது. அது உங்களது உறவை வளர்ப்பதற்கு ஒருபோதும் துணையாக நிற்கப் போவதில்லை. மேலும் காதலியின் இதயத்தில் நீங்கா இடம் பிடிப்பதற்கு எண்ணற்ற வழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைக் கீழே பட்டியலிடுகிறோம். அவற்றைப் படித்து உங்கள் உறவை மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Want To Be The Perfect Man?

They say women can be quite a difficult lot to please, but it isn't so. All you need to do to make a lasting impression is target her heart. Portraying that the physical connect is the only thing that matters to you isn't going to help win her over. There are numerous ways to deepen your connection with your woman. Remember these pointers...
Desktop Bottom Promotion