For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனிலவு தித்திக்க தேவையான 10 குறிப்புகள்!!!

By Super
|

புதுத் தம்பதியர்களுக்கு ஹனிமூன் ஒரு ஸ்பெஷலான சுற்றுப் பயணமாகும். திருமண சந்தடிகளுக்கு பின்னர் தம்பதியர் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவும் ஒரு விடுமுறை மட்டுமன்று, இருமனங்களும் பின்னிப் பிணைவதற்கு இது ஒரு பாலமாகவும் அமையும். தம்பதியர்கள் இருவரும் ஒன்றாக, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை கொடுக்கிறது.

ஆனால், எங்கு ஹனிமூன் செல்வது என்பதை தீர்மானித்தல், அதற்கான பிரயாண ஏற்பாடுகள் போன்றவை, திருமணத்திற்கு முன்னரே முடிவு செய்யப்பட வேண்டியிருப்பதால், இந்தப் பிரயாணத்திற்கு பல திட்டங்களும், ஆலோசனைகளும் தேவைப்படுகிறது. எனவே ஹனிமூன் பற்றி திட்டமிடும் போது, மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திட்டமிடுதல்

திட்டமிடுதல்

ஹனிமூன் பற்றி முன்னதாகவே திட்டமிடுதல் அவசியம். முன்னதாகவே திட்டமிடுவதால், கடைசி நேர்த்தில் புக்கிங் செய்வதிலுள்ள இடர்கள் மற்றும் சிக்கல்களை தவிர்க்க முடியும். ஹனிமூன் புதுதம்பதியர்களுக்கான ஒரு ஸ்பெஷ்ல் ட்ரிப் என்பதால், அது பற்றிய ப்லானிங் பார்ட்டை அவர்கள் கையிலே விட்டுவிட வேண்டும். அதேநேரம் தம்பதியர்கள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களையும் மனதில் வைத்து கொள்ளுதல் அவசியமாகும்.

பட்ஜெட் தேனிலவு

பட்ஜெட் தேனிலவு

பிரயாணத்திற்கான பட்ஜெட்டை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் செலவுகள் உங்கள் பட்ஜெட்டை தாண்டாது. வெவ்வேறுபட்ட பாக்கேஜுகளை பார்த்து, உங்களுக்கு பொருத்தமான ஹனிமூன் பாக்கேஜ்ஜை தேர்ந்தெடுங்கள். ஹோட்டல்கள் மற்றும் ட்ரிப் ஆபரேட்டர்கள் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளுங்கள். இன்டர்நெட் மூலம் ஹனிமூன் லொகேசன் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு, உங்களுக்கு என்றொரு சுற்றுப் பிரயாணத் திட்டத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.

வானிலை பற்றி அறிந்துகொள்ளுதல்

வானிலை பற்றி அறிந்துகொள்ளுதல்

வானிலை பற்றி அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் வெளியே செல்ல முடியாமல் நேரம் வீணாகிவிடும். ஆகவே எங்கு செல்ல திட்டமிடுகிறீர்களோ, அந்த இடத்தின் வானிலை பற்றி தெரிந்து கொள்ள மறவாதீர்கள். எப்போது செல்ல திட்டமிடுகிறீர்களோ, அப்போது உள்ள வானிலையை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ட்ராவல் டாக்குமென்டுகள்

ட்ராவல் டாக்குமென்டுகள்

ஹனிமூன் செல்வற்கு முன்னர் பாஸ்போர்ட்டில் மணமகளின் திருமணப் பெயர் அப்டேட் செய்யப்படவில்லையென்றால், டிக்கட்டை அவரது ‘மேரிட் நேம்மில்' புக் பண்ணாதீர்கள். மாறாக திருமணத்திற்கு முன்னர் உள்ள பெயரில் (மெய்டன் நேம்) புக் செய்யுங்கள். பிரயாணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே, பாஸ்போர்ட் காலவதியாகும் தேதி, வீசா, அடையாள அட்டை மற்றும் ஏனைய பிரயாண பத்திரங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பணம்

பணம்

கிரெடிட் கார்ட் மற்றும் ட்ராவலெர்ஸ் செக் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், சில சிறிய கடைகளில் பணம் கொடுத்தே பொருள் வாங்க வேண்டியிருக்கும். எனவே கையில் சிறிதளவாவது பணம் (Local currency) வைத்திருப்பது புத்திசலித்தனமாகும்.

முதலுதவி மருந்து பொருட்கள்

முதலுதவி மருந்து பொருட்கள்

பாண்டேஜ், ஆன்டி-செப்டிக் ஆயின்மெண்ட், பெயின் கில்லர் ஆகியவை அடங்கிய ஒரு ‘மெடிக்கல் கிட்' அவசியம் தேவை. மேலும் உங்களில் யாராவது மெடிகேசனில் இருந்தால், அந்த மருந்துப் பொருட்களையும் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.

கேமரா

கேமரா

மறக்க முடியாத, மீண்டும் கிடைக்க முடியாத தருணங்களை போட்டோ எடுப்பதற்கு ஒரு சிறந்த கேமராவை எடுத்து செல்ல மறக்காதீர்கள். ஹனிமூன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்பதால், இந்த படங்கள் அதன் நினைவாக என்றும் இருக்கும்.

பொருத்தமான ஆடைகள்

பொருத்தமான ஆடைகள்

ஆண்களே! உங்கள் துணைவிக்கு சர்ப்பிரைஸ் கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள் என்பது தெரியும். ஆனால் கடற்கரை இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது, ஜீன்ஸோ அல்லது சேலையோ அணிந்து சென்றால், அது உங்கள் மனைவிக்கு த்ரிலிங்காக இருக்காது. ஆகவே ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும், இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதால், காஷுவல் லூக் தரக்கூடிய ஆடைகளை எடுத்துச் செல்வது சிறந்தது.

உள்ளாடைகள்

உள்ளாடைகள்

ஹனிமூனிற்கு செல்லும் போது பெண்கள் கவர்ச்சியான உள்ளாடைகளை எடுத்துச் சென்றால், இருவரும் தங்களை உடல் மற்றும் உணர்வு ரீதியாக வெளிப்படுத்தி தேனிலவு தித்திக்க வழிவகுக்கும்.

சர்ப்பிரைஸ் கொடுத்தல்

சர்ப்பிரைஸ் கொடுத்தல்

டுவர் ஆபரேட்டர்கள் மற்றும் இன்டர்நெட் உதவியுடன், ஹனிமூன் பற்றிய தகவல்களை அறிந்து, மனைவிக்கு சர்ப்பிரைஸ் தரக்கூடிய சில விஷயங்களை உங்கள் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தனிமையாக இருக்கக் கூடிய ஒரு அழகான தீவு அல்லது இரவு நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கும் வகையில் கரையில் அமைக்கப்பட்ட கூடாரம் (டென்ட்) ஆகியவை ஸ்வீட் கார்ட்டிற்கு ரொமான்டிக்கான இடங்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Ten Honeymoon Planning Essentials

Honeymoon is a special trip for a newlywed couple. It is not just a vacation that would help them to de-stress after the wedding hustle-bustle, but also help them to bond with each other. Honeymoon gives them some alone time together, to understand each other better. But, this trip requires a lot of planning and discussions, as everything from location to travel arrangements have to be finalised before the wedding. So, here are a few things that you should keep in mind while planning your honeymoon.
Desktop Bottom Promotion