For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெருங்கிய தோழன்/தோழியை திருமணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணம் செய்யும் போது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துடனும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப்பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான். மேலும் அந்த வாழ்க்கையானது இனிமையாக செல்லும்.

அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள போகும் நபர், மிகவும் நெருங்கிய நண்பனாகவோ/தோழியாகவோ இருந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டா? ஆம், தெரியாதவரை திருமணம் செய்து கொண்டு, மனம் ஒத்துப் போகாமல் இருந்து, அடிக்கடி சண்டை போடுவதை விட, நன்கு புரிந்து கொண்டு, காதல் மலர வைத்த தோழன்/தோழியை மணந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும்.

குறிப்பாக, இந்த கட்டுரையானது திருமணம் என்று வீட்டில் பேசும் போது, காதல் செய்தவரை மணப்பதா அல்லது வீட்டில் பார்ப்போரை மணப்பதா என்ற குழப்பத்தில் இருப்போர் படிக்க வேண்டும். ஏனெனில் காதலை மலர வைத்த நெருங்கிய தோழன்/தோழியை திருமணம் செய்து கொண்டால், நிறைய நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!!!

Benefits Of Marrying Your Best Friend

* நண்பர்களை மணந்து கொள்ளும் போது, அவர்களுக்கு நம்மைப் பற்றிய கடந்த கால வாழ்க்கைப் பற்றி நன்கு தெரியும். மேலும் விருப்பங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றை நன்கு புரிந்திருப்பதால், திருமணத்திற்கு பின் நல்ல புரிதலுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும்.

* புதிய நபரை திருமணம் செய்து கொண்டு, அவர்களுடன் சகஜமாக பழகுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். மேலும் அத்தகையவர்களிடம் சாதாரணமாக பழகுவதற்கு ஒருசில பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டி வரும். ஆனால் அதுவே தோழன்/தோழியாக இருந்தால், சாதாரணமாக சங்கடம் ஏதுமின்றி சகஜமாக பழகலாம்.

* நண்பர்களை மணந்து கொள்வதில் உள்ள நன்மைகளில் முக்கியமானது, மனதில் இருக்கும் கோபம், பொறாமை போன்றவற்றை வெளிக்காட்ட முடியும். இதனால் இருவரும் சிறு சண்டைகளுக்காக பிரியும் நிலை இருக்காது. ஆனால் வெளிநபராக இருந்தால், மனதில் வைத்து கஷ்டப்பட வேண்டியிருக்கும். எதையும் வெளிப்படையாக பேச முடியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது.

* நெருங்கிய தோழன்/தோழி வாழ்க்கைத் துணையாக வந்தால், வாழ்க்கையில் போர் அடிக்காது. இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு நிறைய டாபிக் இருக்கும். மேலும் உங்களுக்கு பிடித்தது ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்திருப்பதால், உங்களுக்காக அதற்கு தடை போடாமல், உங்களை ஊக்குவித்து, உங்களுடன் சேர்ந்து அதனை மேற்கொள்வார்கள். உதாரணமாக, விளையாட்டுக்கள்.

* முக்கியமாக தெரியாதவரை திருமணம் செய்த பின்னர் ரொமான்ஸ் செய்வதற்கு சற்று சங்கடமாக இருக்கும். ஆனால் அதுவே நண்பன்/தோழியை மணந்தால், எந்த ஒரு சங்கடமும் இருக்காது. மேலும் அப்போது மேற்கொள்ளும் ரொமான்ஸ் இன்னும் சூப்பராக இருக்கும்.

இவையே நெருங்கிய தோழன்/தோழி மீது காதல் வந்து, அவர்களை மணந்தால் கிடைக்கும் நன்மைகள். வேறு என்ன நன்மைகள் உள்ளது என்று உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Benefits Of Marrying Your Best Friend

If you are still feeling strange about the idea of marrying your best buddy, then read on for the benefits of marrying your best friend.
Story first published: Friday, August 16, 2013, 18:59 [IST]
Desktop Bottom Promotion