For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் சந்திப்பு பாதுகாப்பான சந்திப்பாக அமைய முத்தான 9 வழிமுறைகள்!!!

By Super
|

முதல் முறை டேட்டிங் அனுபவம் என்பது ஒவ்வொருவரின் ஆர்வத்தையும் தூண்டக்கூடியதாக இருக்கிறது அல்லவா?. ஒரு புதிய ஆண் மகனை சந்திக்க போகும் நிகழ்வு என்பது எந்த ஒரு பெண்ணுக்கும் கிளர்ச்சியை தூண்டக்கூடியதாக இருக்கும். அந்நிகழ்வு புதிய காதலையும், புதிய உறவையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கவும் செய்யும்.

இவ்வளவு மகிழ்ச்சியான எண்ணங்கள் முதல் முறை டேட்டிங் செல்லும் போது ஒரு பெண்ணின் மனதில் தோன்றினாலும், ஆபத்துகள் இல்லாமல் இல்லை. தற்போது சமூகத்தில் அரங்கேறும் குற்றங்களை கணக்கில் கொண்டு, இங்கே முதல் டேட்டிங்கை (Dating) பாதுகாப்பான நிகழ்வாக மாற்ற 9 வழிகளை தொகுத்துள்ளோம். அவற்றை படித்து மனதில் கொண்டு நடந்தால், மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகாத செய்திகள்

தகாத செய்திகள்

சந்திக்கப் போகும் ஆண் நபர், பொருத்தமற்ற மற்றும் தகாத செய்திகளை அனுப்புவதாக உணர்ந்தால், அவற்றை ஒதுக்கி புறந்தள்ள வேண்டாம். ஏனெனில் உங்களுடைய முதல் சந்திப்பின் போது, நீங்கள் சுதந்திரமாகவும், பதற்றமின்றியும் இருப்பது அவசியம். தகாத முறையில் ஒருவர் அனுப்பும் செய்திகள், அவருடைய உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்ட உதவும். மேலும் அந்நபர் எதற்காக உங்களை அணுகுகிறார் என்று தெரிந்து கொள்ளுதல் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.

இணையத்தில் அடையாளம் கொள்ளவும்

இணையத்தில் அடையாளம் கொள்ளவும்

இன்றைய தொழில்நுட்ப உலகில், ஒருவரை இணையத்தில் கண்டுபிடிப்பது மிக எளிதான செயலாக மாறிவிட்டது. ஆண் ஒருவருடன் பழக ஆரம்பிக்கும் முன்னர், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ன பிற சமூக வலைதளங்களில் அவரை கண்டுபிடித்து, அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில் இருவருக்கும் தெரிந்த பொது நண்பர்களை கண்டிபிடிக்கும் போதும், இந்த அணுகுமுறைகளை கையாளலாம்.

பொது இடத்தில் சந்திக்கவும்

பொது இடத்தில் சந்திக்கவும்

தனிமையான இடத்திலோ அல்லது முன்பின் தெரியாத இடத்திலோ முதல் சந்திப்பை ஏற்படுத்த வேண்டாம். சந்திப்பின் போது இருக்கும் இடம் பற்றியும், சந்திக்க போகும் நபர் பற்றியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் சந்திக்கப் போகும் நபர் எப்படிப்பட்டவர் என்று தெரியாத வேளையில், அவரை முழுமையாக நம்ப முடியாது. ஆகவே பொது இடங்களே முதல் சந்திப்பிற்கு ஏற்றதாக இருக்கும்.

நண்பர்களிடம் தெரிவிக்கவும்

நண்பர்களிடம் தெரிவிக்கவும்

உங்களுடைய தோழிகளிடம், டேட்டிங் செல்லும் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். தக்க நேரத்தில், இருக்கும் இடம் பற்றிய தகவல் பரிமாற்றங்களை தோழியுடன் செய்வதன் மூலம், வரும் சிக்கல்களை எளிதில் முன்நோக்க முடியும். அவ்வாறு ஏதேனும் தொந்தரவுகள் ஏற்படும் வேளையில், உங்கள் தோழியால் தக்க நேரத்தில் உதவிட முடியும்.

உடலை வெளிச்சம் போட்டு காட்டும் உடையை தவிர்க்கவும்

உடலை வெளிச்சம் போட்டு காட்டும் உடையை தவிர்க்கவும்

நம்மை அழகாகவும், செக்ஸியாகவும் காட்டிக் கொள்ள அனைவரும் விரும்புவது என்பது தவிர்க்க இயலாதது. இருப்பினும் உடலின் அங்கங்களை அடுத்தவர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஆடைகளை அணிவதென்பது முதல் சந்திப்பின் நோக்கத்தை கெடுத்துவிடும் அபாயத்தை கொண்டது. நாகரீகமாக மற்றும் கச்சிதமாக பொருந்தக் கூடிய உடைகளை அணிவதே நலம் பயக்கும். உடலின் அங்கங்களை அதிகப்படியான அளவில் தெரியப்படுத்தும் உடைகளை அணிவது, ஆண் மனதில் வேறு விதமான நோக்கங்களை ஏற்படுத்தி விடக்கூடும்.

சிக்கலெனில் இடத்தை காலி பண்ணிவிடவும்

சிக்கலெனில் இடத்தை காலி பண்ணிவிடவும்

சில வேளைகளில், ஆணுடன் சுதந்திரமாகவும், வசதியாகவும் இல்லை என்று உணரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரச்சனைகள் ஏற்படும் என உணர்ந்தால் கழிவறை சென்று தோழிகளுக்கு தெரியப்படுத்தி, அவர்களை வர வைக்க வேண்டும். ஒருவேளை பாதுகாப்பற்ற தன்மையை உணர்ந்தால், எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இருக்கும் இடத்தில இருந்து வெளியேறும் வழிகளைப் பார்க்க வேண்டும்.

உங்கள் செலவை நீங்களே செலுத்தவும்

உங்கள் செலவை நீங்களே செலுத்தவும்

ஆண் நண்பர் ஒருவர் நம்முடைய உணவிற்கான கட்டணத்தை செலுத்துவதென்பது நன்றாகத் தான் இருக்கும். ஆனால் முதல் சந்திப்பில் இதை தவிர்த்து விட வேண்டும். உங்களுக்கான செலவுத் தொகையை நீங்களே செலுத்துங்கள் அல்லது செலவுத் தொகையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதின் மூலம் உங்களுடைய ஆளுமைத்திறன் வெளிப்படுகிறது. மேலும் இதை நீங்கள் ஆணைச் சார்ந்து இல்லை என நிருபிக்ககிடைத்த சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், இது உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆற்றலும், சக்தியும் உங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும்.

எதிர்காலத்தைப் பற்றிய பேச்சை தவிர்க்கவும்

எதிர்காலத்தைப் பற்றிய பேச்சை தவிர்க்கவும்

முதல் சந்திப்பில் குறிப்பிட்ட வரம்புக்குள், எல்லை மீறாமல் பேசுவது அவசியமானது. குறிப்பாக எதிர்கால திட்டங்கள் மற்றும் குறிக்கோள் பற்றிய பேச்சுக்களை முதல் சந்திப்பில் தவிர்ப்பது நலம். ஒரு நபரை முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், எதிர்காலம் பற்றிய பேச்சை துவங்குதல் நலம் பயக்கும். குறைந்தபட்சம் முதல் சந்திப்பில் தவிர்ப்பதே சாலச் சிறந்தது.

ஆணின் வீட்டுக்கு போகாதே!

ஆணின் வீட்டுக்கு போகாதே!

ஒருபோதும் முதல் சந்திப்பின் போது ஆணின் வீட்டுக்கோ அல்லது தனிமையான இடத்திற்கோ போகாமல் இருப்பது சிறந்தது. நெருப்பும். பஞ்சும் அருகாமையை தவிர்ப்பது மிக முக்கியமானது. தனிமையான இடத்தில சந்திக்க நேர்ந்தால், மது அருந்தும் வாய்ப்பும் ஏற்படும். அதனால் ஏற்படும் பின் விளைவுகள் மோசமானவைகளாகவே இருக்கும். தப்பி தவறிக் கூட, முதல் சந்திப்பின் போது ஆணின் மஞ்சத்துக்கு போக வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Stay Safe on a First Date

You need to be cautious about what you do and say on your first date. Take a look at 9 ways to remain safe on your first date.
Desktop Bottom Promotion