For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நட்பு காதலாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறிகள்!!!

By Maha
|

இவ்வுலகில் நட்பு இல்லாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதேப்போல் காதல் இல்லாதவர்களும் இருக்கவேமாட்டார்கள். ஆனால் இந்த நட்புக்கும் காதலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்னவென்றால், பல காதல்கள் நட்பிலிருந்து தான் ஆரம்பமாகிறது. அதிலும் ஒரு பெண்ணும் ஆணும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டால், நாளடைவில் அந்த நட்பானது காதலில் வந்து, திருமணத்தில் முடிந்து விடுகிறது.

இத்தகைய காதல் நட்பிலிருந்து வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் அதிகப்படியான அன்பு, புரிதல், நம்பிக்கை, ஆறுதல், அக்கறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை சற்று அதிகமாகிவிட்டால், அந்த நட்பானது காதலில் விழுந்துவிடுகிறது. பெரும்பாலுடம் நட்பாக பழகும் பெண்களின் மனதில் காதல் வந்துவிட்டால், அதனை மறைக்காமல் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள். ஆண்களோ அதனை மறைப்பார்கள். அதேப் போன்று சில பெண்களும் மறைப்பார்கள். ஆனால், அவர்களின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் தெரியும். இப்போது நட்புடன் பழகும் ஆணின் மனதில் காதல் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஒருசில அறிகுறிகள் உள்ளன. அது என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Hints That Your Friendship Has Turned To Love

* முதல் அறிகுறி என்னவென்றால், காதல் வந்துவிட்டால், பேசும் விதம் மற்றும் பார்க்கும் பார்வையில் மாற்றங்கள் தெரியும். உதாரணமாக, நட்புடன் இருக்கும் போது தொனதொனவென்று கண்டதை பேசும் ஆண்கள், காதல் வந்துவிட்டால், எதிர்காலத்தைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அதிலும் வரப்போகும் மனைவியைப் பற்றி அதிகம் பேசுவார்கள். அதுமட்டுமின்றி, கண்களை பார்த்து பேசவே வெட்கப்படுவார்கள்.

* சில ஆண்கள் திடீரென்று தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தையும் வெளிப்படையாக சொல்லவோ அல்லது பேசும் போது செல்லப் பெயர் வைத்து அழைக்கவோ ஆரம்பிப்பார்கள்.

* நட்பாக பழகும் போது இருந்த அக்கறையை விட, காதலுக்கு பின் அக்கறை அதிகமாக வெளிப்படும். உதாரணமாக, அடிக்கடி போன் செய்து எங்கு இருக்கிறாய், என்ன செய்கிறாய், ஏன் வீட்டிற்கு சென்றதும் போன் செய்யவில்லை என்று பல கேள்விகளை கேட்டு, அன்பை வெளிப்படுத்துவார்கள்.

* முக்கியமாக நட்பாக இருக்கும் போது, எப்போதும் பொது இடங்களில் அதிகம் தொட்டுப் பேசாதவர்கள், காதல் வந்த பின்னர், வெளியே சுற்றும் போது கைகளைப் பிடித்துக் கொண்டு வருவார்கள். ஏன் என்று கேட்டால், பிடிக்கக்கூடாதா? என்று கோபப்படுவது போல் கேட்பார்கள்.

* குறிப்பாக மற்ற பெண் தோழிகளிடம் நடந்து கொள்ளும் விதத்தை கவனித்தால் நன்கு வெளிப்படும். அதுவும் உங்களுடன் நடந்து கொள்வது போன்றே மற்றவர்களிடம் நடந்து கொண்டால், அங்கு காதல் இல்லை. ஆனால் அதுவே வித்தியாசம் தெரிந்தால், நிச்சயம் காதல் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேற்கூறியவையே நட்பானது காதலாக மாறிவிட்டது என்பதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் அனைத்தும் பெண்களுக்கும் பொருந்தும்.

English summary

Hints That Your Friendship Has Turned To Love

Guys have hidden feelings that they sometimes show through their physical acts. If you do not know the signs that your friendship has turned to a romantic tale, then here are some hints for you to take a look at.
Story first published: Wednesday, July 17, 2013, 17:36 [IST]
Desktop Bottom Promotion