For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நண்பர்கள் இல்லாமல் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்....

By Maha
|

தலைப்பைப் பார்த்து அனைவரும் கோபத்துடன் படிக்க வருவீர்கள் என்பது தெரியும். ஏனெனில் நண்பர்கள் இல்லாமல் சந்தோஷம் கிடைக்காது என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சந்தோஷம் பள்ளி, காலேஜ் போன்ற காலங்களில் தானே தவிர, வேலைக்கு வந்த பின்னர் பலர் நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்ணுவார்கள். இத்தனை நாட்கள் எப்போதும் அருகில் இருந்து சந்தோஷம், கஷ்டம் போன்றவற்றை பகிர்ந்து கொண்ட நண்பர்கள், வேலை என்று வந்த பின்னர் அருகில் இல்லாவிட்டால், அவைருக்குமே வாழ்க்கையானது மிகவும் போராக செல்லும்.

மேலும் என்ன தான் அலுவலகத்தில் நண்பர்கள் கிடைத்தாலும், பள்ளி மற்றும் காலேஜ் பருவத்தில் கிடைத்த நண்பர்கள் போல் கிடைப்பது மிகவும் கடினமே. எனவே இத்தகைய நேரத்தில் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்வதற்கு ஒருசில சூப்பர் டிப்ஸ் உள்ளது. அதனைப் பின்பற்றினால், நிச்சயம் வாழ்க்கை சந்தோஷமாக விருப்பப்படி செல்லும்.

Ways To Be Happy Without Friends

நண்பர்களின்றி சந்தோஷமாக இருப்பதற்கான டிப்ஸ்....

* பிடித்த விளையாட்டுக்கள் அல்லது வேறு ஏதேனும் விருப்பமான செயல்களில் நீண்ட நேரம் ஈடுபடலாம். இதனால் நண்பர்கள் அருகில் இல்லை என்ற கவலை மறக்கப்படுவதோடு, விருப்பமும் நிறைவேறும்.

* பள்ளி, காலேஜ் படிக்கும் போது, நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே நேரம் போதாத நிலையில், அழகுப்படுத்த எங்கு நேரம் கிடைத்திருக்கும். ஆனால் வேலைக்கு வந்து நண்பர்களை பிரிந்திருக்கும் வேளையில், ஸ்பா, அழகு நிலையம் போன்ற இடங்களுக்குச் சென்று தம்மை அழகுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.

* பொதுவாக படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் ஊர்சுற்ற அதிக நேரம் இருக்குமே தவிர, குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கவே தோன்றாது. இதனால் அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருப்போம். இப்போது குடும்பத்தினரிடம் நல்ல பெயர் எடுக்க நேரம் வந்துவிட்டது. இந்த நேரத்தை குடும்பத்தினருடன் நன்கு பழகி, தனிமையை தவிர்த்து, நண்பர்கள் இல்லை என்ற வருத்தத்திலிருந்து விடுபட்டு, சந்தோஷமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

* இல்லையென்றால், ஒரு அழகான மற்றும் விருப்பமான செல்லப் பிராணியை வளர்க்கலாம்.

* வேண்டுமெனில், இந்த மாதிரியான நேரங்களில் ஏதேனும் ஆர்வமுள்ள நாவல்களைப் படித்து, தனிமையைப் போக்கலாம்.

மேற்கூறியவற்றையெல்லாம் சந்தோஷமாக மேற்கொண்டால், வாழ்க்கையும் நன்கு சந்தோஷமாக செல்லும். நீங்க உங்க நண்பர்களை மிஸ் பண்ணினால், எந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Ways To Be Happy Without Friends

There might come a time in your life when you find yourself alone, without the company of friends. This may be the case once you graduate from college and lose touch with all your school or college friends. You might move to a new city or country and find yourself alone there. Here are some ways to be happy without friends.
Story first published: Monday, June 17, 2013, 19:17 [IST]
Desktop Bottom Promotion