For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நண்பன் மனதில் காதல் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!!!

By Maha
|

காதல் என்ற உணர்வு எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வரா வேண்டிய நேரத்தில் மட்டும் சரியாக வந்துவிடும். அவ்வாறு காதல் வந்துவிட்டால், சிலர் கண்மூடித்தனமாக காதலிப்பார்கள். அதிலும் பெண்களை விட ஆண்கள் காதலில் அதிகம் மூழ்கி விடுவார்கள். பெரும்பாலான ஆண்கள் காதலை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளமாட்டார்கள். அதற்கு பதிலாக உணர வைப்பார்கள். அதில் ஆண்கள் கில்லாடிகள்.

அதிலும் நட்புறவில் ஆரம்பித்து தான் காதலானது மலர ஆரம்பிக்கும். அவ்வாறு நட்பில் இருக்கும் போது, காதல் வந்தால், சில ஆண்கள் வாயில் சொல்வதை விட, உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக இந்த மாதிரியான செயலில் பெண்களை விட, ஆண்கள் தான் அதிகம் காதலில் சிக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு சிக்கிக் கொள்வதை விட, அதனை வெளியே சொல்லாமல், அதற்கான செய்கையை மட்டும் வெளிப்படுத்துவார்கள். அந்த மாதிரி உங்கள் நண்பன், காதலை வைத்துக் கொண்டு பழகுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? படித்து பாருங்கள்.

Signs That He Is In Love With You

* ஆண்கள், நண்பர்களாக இருக்கும் போது செய்யும் போனை விட, காதல் வந்த பின்னர் அடிக்கடி போன் செய்வார்கள்.

* நட்பாக பழகும் போது, வெளியே அழைத்தால் வராமல் காரணம் சொல்லும் ஆண்கள், காதல் வந்துவிட்டால், ஒரு நாள் கூட பிரிந்திருக்க முடியாத நிலையில், விடுமுறை நாட்களில் தேடி வந்து, வெளியே செல்லலாம் என்று அழைப்பார்கள்.

* பிறந்த நாள் வந்தால், எதிர்பார்க்காத வகையில் நீண்ட நாள் ஆசையாக மனதில் வைத்திருக்கும் பொருட்களை வாங்கிக் கொடுத்து, மகிழ்விப்பார்கள்.

* அடிக்கடி கோபப்படுவார்கள். உதாரணமாக, ஒருநாள் அவர்களை பார்க்க முடியாதவாறு வந்தாலோ அல்லது வெளியே எங்கேனும் செல்வதாக இருந்தாலோ, அதனை அவர்களிடம் சொல்லாமல் சென்றால் கோபத்துடன் அக்கறையாக பேசுவார்கள்.

* அடிக்கடி வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் அக்கறையாக பேசி, அனைவரது மனதிலும் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிப்பார்கள். அதிலும் உங்களால் செய்ய முடியாதவற்றையும், அவர்கள் கஷ்டப்பட்டு செய்து முடிப்பார்கள்.

* எப்போதும் "உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்" என்று சொல்வார்கள். அதிலும் அப்போது தான் அவர்களை விட்டு வந்திருப்பீர்கள். அந்த நேரம் இதைச் சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்று சொல்வார்கள்.

இதுப் போன்று பல உள்ளன. உங்கள் நண்பன் இதுப் போல் நடக்கிறார்களா? அப்படியெனில் அவர்களிடம் வெளிப்படையாக கேளுங்கள்.

குறிப்பு:

நட்பிலும் இத்தகைய கோபம், அக்கறை, பரிசு போன்றவை இருக்கும். ஆனால் காதல் இருந்தால், நமக்கே நம்ப முடியாதவாறு சிறிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப் பட்டு பேசுவார்கள். எனவே வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது.

English summary

Signs That He Is In Love With You

If you want to know, your best friend is in love with you. Check out the symptoms.
Desktop Bottom Promotion