For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் செய்ய வேண்டிய 15 காரியங்கள்!!!

By Super
|

பணி ஓய்வு என்பது முடிந்த வரை வேலை செய்த பின் அவற்றில் இருந்து ஓய்வு பெறுவது. நாம் வாழ்க்கையில் ஓடி ஓடி வேலை பார்க்கிறோம். நமக்கும், நம் குழந்தைக்கும் தேவையானவற்றை சேர்த்து வைத்த பின் ஒரு கட்டத்தில் வேலையில் இருந்து ஓய்வும் பெறுகிறோம். அதற்கு பிறகு வரப் போகும் வாழ்க்கையை பற்றி பல பேர் சிந்திப்பதில்லை.

இந்த நேரத்தில் ஒருவர் அனுபவிப்பது தனிமை, சலிப்பு மற்றும் தனிப்படுத்தப்பட்ட நிலை. ஆனால் இனி அது இருக்க போவதில்லை. ஆம், பணி ஓய்வு காலம் தான் வாழ்கையை அனுபவிக்க சிறந்த நேரம். நீண்ட காலம் வேலைகளிலேயே வாழ்க்கையை கழித்த பின், பணி ஓய்வு என்பது ஒரு வரம் தான் என்று சொல்லாம். ஏனெனில் இந்த நேரத்தில் நினைத்ததை செய்ய பல மணி நேரம் கிடைக்கும்.

சொல்லப்போனால், பணி ஓய்வு என்பது அதிகமான சுதந்திரத்தைக் குறிக்கும். பொதுவாக அதிகமான சுதந்திரமானது குழந்தைப் பருவத்தில் தான் கிடைக்கும். ஆகவே இப்போது குழந்தை பருவம் திரும்பி விட்டது. இத்தகைய பணி ஓய்வு பெற்ற பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள 15 அற்புதமான காரியங்களில் ஈடுபட்டால், சலிப்பு மற்றும் தனிமை நீங்கி வாழ்கையை சந்தோஷத்துடன் கழிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செல்லப்பிராணி வளர்த்தல்

செல்லப்பிராணி வளர்த்தல்

நாய்கள், பூனைகள், பறவைகள் அல்லது மீன்கள், இவற்றில் எதை பிடிக்குமோ தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும். இதனால் புது நண்பன் கிடைப்பதோடு, வீடு இல்லாத ஒரு பிராணிக்கு ஒரு குடும்பத்தை தரும் வாய்ப்பும் கிடைக்கும்.

பேரக்குழந்தைகள்

பேரக்குழந்தைகள்

குழந்தைகள் என்றால் அனைவரும் விரும்புவார்கள். அழகும் குறும்பும் நிறைந்தவர்கள் குழந்தைகள். இதுவே பேரக்குழந்தைகள் என்றால் அவர்களுடன் இன்னும் அதிகமாக விளையாட தோன்றும். எனவே இது உங்களுக்கான விளையாட்டு நேரம், என்ஜாய்!.

பயணம்

பயணம்

அழகிய வெளி உலகத்தை இப்போது கூட கண்டுகளிக்கலாம். வேலை காரணமாக போக முடியாமல் போன இடங்களுக்கு சென்று மகிழலாம்.

சுயசரிதை

சுயசரிதை

வாழ்க்கையை வாழ்ந்து விட்டீர்கள். இப்போது இந்த உலகத்திற்கு அதை சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. வாழ்க்கையை பற்றி, அதில் அனுபவித்த நல்லது கெட்டது என அனைத்தையும் சுயசரிதையாக எழுதலாம். இதனால் அனுபவங்கள் சில பேருக்கு பாடமாக விளங்கும்.

தியானம்

தியானம்

தியானம் மனதுக்கும் ஆத்மாவிற்கும் ஆழ்ந்த அமைதியை தரும். அதில் பல உடல் நல நன்மைகள் அடங்கியுள்ளது. இது போக தியானம் ஒருமுனைப்படுத்தும் திறனையும் அதிகரிக்கும். என்ன காரணமாக இருந்தாலும் சரி, இன்றே தியானத்தில் ஈடுபடுங்கள். இந்த அனுபவத்தை விரும்ப போவது உறுதி.

நடனம்

நடனம்

நடனம் ஆடும் அளவிற்கு உடம்பு ஒத்துழைத்தால், இந்த வகை உடற்பயிற்சியும் ஆரோக்கியமாக வைக்கும். மேலும் இது குதூகலத்தை தரும். சல்சா, சா சா சா போன்ற நடன வகைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள். பிடித்த நடன வகையை முறைப்படி கற்றுக் கொள்ளுங்கள்.

இசைக்கருவிகள்

இசைக்கருவிகள்

இசை கருவிகளின் சிறப்பு என்னவென்றால், தேர்ந்தெடுப்பதற்கு அவற்றில் பல வகை கருவிகள் உள்ளன. ஏற்கனவே ஏதாவது இசைக்கருவியை வாசிக்க தெரிந்தால், வேறு வாத்தியங்களை கற்றுக் கொள்ளவும். இசைக் கருவியை வாசிப்பது சாந்தப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு என்பதால் இதை கண்டிப்பாக மகிழ்வீர்.

மட்பாண்டம் தயாரித்தல்

மட்பாண்டம் தயாரித்தல்

மட்பாண்டம் தயாரித்தல் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு கலையும் கூட. கைகளால் அழகான ஒரு பொருளை படைப்பதால் கடவுளைப் போல் எண்ணுவீர்கள்.

திரைப்படம்

திரைப்படம்

வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் பல சினிமாக்கள் வந்து போகும். ஆனால் பார்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம். பணி ஓய்வுக்குப் பின் அனைத்து நேரத்தை தரளமாக விரயம் செய்யலாம். இந்நேரத்தில் பார்க்க விரும்பிய அனைத்து திரைப்படங்களையும் கண்டு மகிழலாம்.

ஓவியம்

ஓவியம்

வண்ணங்களின் மேல் ஆர்வம் இருக்கிறதா? அப்படியானால் ஓவியம் என்றால் கண்டிப்பாக விரும்புவீர்கள். ஒரு பேப்பரில் ஓவியம் தீட்டுவதையும் தாண்டி, சுவற்றில் தீட்டும் ஓவியம், ஃபேப்ரிக் ஓவியம், கண்ணாடி ஓவியம் மற்றும் கரித்தூள் ஓவியம் போன்ற பல வகைகள் உள்ளது. எனவே இவற்றை முயற்சி செய்யலாம்.

புகைப்பட கலை

புகைப்பட கலை

அழகிய நினைவுகளையும், உலகத்தில் உள்ள அற்புதமான இடங்களையும் கேமராவில் புகைப்படமாக பதிவு செய்யலாம். புகைப்படம் எடுப்பது என்பது எப்போதும் அதில் ஈடுபட வைக்கும் ஒரு பொழுதுபோக்காகும்.

மன்றங்களில் சேருங்கள்

மன்றங்களில் சேருங்கள்

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பல மன்றங்கள் உள்ளன. அந்த மன்றங்களில் சேர்வதால் மகிழ்ச்சி அடைவதையும் மீறி, பல வகையான ஓய்வு பெற்றவர்களின் நட்பும் கிடைக்கும்.

கோல்ப்

கோல்ப்

கோல்ப் என்பது மனதை அமைதியாக வைத்திருக்கும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாடுவதால் மட்டும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அது அமைந்துள்ள பசுமை வாய்ந்த மைதானமும், தூய காற்றினாலும் கூட மனம் அமைதி பெரும்.

புத்தகம் படித்தல்

புத்தகம் படித்தல்

படிக்கும் பழக்கம் வெளி உலகத்தை பற்றிய அறிவு வளர உதவும். இது ஓய்வான மற்றும் அமைதியான பொழுதுபோக்கு. ஆகவே படிக்க விரும்பிய அனைத்து புத்தகங்களையும் தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகளை பேணுதல்

குழந்தைகளை பேணுதல்

ஏகப்பட்ட நேரம் இருக்கிறதா? உடம்பும் ஆரோக்கியமாக இருக்கிறதா? அப்படியானால் வேலைக்கு போகும் பெற்றோர்களின் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளலாம். இது நேரத்தையும் வீணாக்காமால், பணம் சம்பாதிக்கவும் வழி வகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Things To Do After Retirement

Retirement is the time when you’re done with working all that you could. It is the time to be spent in loneliness, boredom and isolation. NO WAY! Not any more! Retirement is the perfect time to enjoy.
Desktop Bottom Promotion