For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் ஏன் அடிக்கடி "ஐ லவ் யூ" சொல்லமாட்ராங்க...

By Maha
|

காதல் செய்யும் பெண்களிடம், உங்கள் துணைவர் அடிக்கடி "ஐ லவ் யூ" என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வார்களா? என்று கேட்டால், பெரும்பாலான பெண்கள் இல்லை என்று தான் சொல்வார்கள். ஏனெனில் காதல் செய்வதற்கு முன், பெண்கள் காதலை ஒப்புக் கொள்ளும் வரை அடிக்கடி சொல்லும் ஆண்கள், காதலை பெண்கள் ஒப்புக் கொண்ட பின்னர் சொல்வதில்லை. இவையே பெரும்பாலான காதல் செய்யும் பெண்களின் பிரச்சனை.

பொதுவாக ஆண்களுக்கு அடிக்கடி, அந்த மூன்று வார்த்தையை சொல்லப் பிடிக்காது. அவ்வாறு அடிக்கடி சொல்லாவிட்டால், உடனே அவர்களுக்கு பாசம் இல்லை, தமக்கு சரியானவர் இல்லை என்று தவறாக நினைக்கக் கூடாது. ஆகவே அந்த மாதிரி அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொல்லாமல் இருப்பதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளன. அத்தகைய காரணங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

Why Men Hate To Say, “I Love You”?
* ஆண்களுக்கு பெண்களைப் போன்று எதையும் சரியாக வெளிப்படுத்த தெரியாது. உண்மையில் சில ஆண்களுக்கு எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. ஆனால் பெண்கள் கேட்காமலேயே நிறைய வெளிப்படுத்துவதால், அவர்கள் ஆண்களிடம் நிறைய எதிர்பார்ப்பதோடு, அவை நடக்கவில்லை என்றதும், உடனே கோபப்பட்டு சண்டைப் போடுகிறார்கள்.

* ஆண்களைப் பொறுத்த வரை, அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொன்னால் மட்டும் தான், காதல் உள்ளதாக அர்த்தமா என்று எண்ணுவார்கள். ஆண்களைப் பொறுத்த வரை, ஒரு முறை அந்த மூன்று வார்த்தையை சொன்னாலும், இதயத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே தான் அவர்கள் அடிக்கடி சொல்வதில்லை.

* அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொல்வது எரிச்சலை உண்டாக்கும். உதாரணமாக, ஆண்கள் குடும்பத்தை நல்லப்படியாக பார்த்துக் கொள்ளவும், எதிர்காலம் நன்கு சந்தோஷமாக அமையவும் வேலைக்கு செல்கிறார்கள். அவ்வாறு வேலை செய்யும் இடத்தில் அளவுக்கு அதிகமாக வேலைப் பளுவினால், டென்சனாக இருக்கும் போது, எப்படி "ஐ லவ் யூ" என்று சொல்லத் தோன்றும். அவ்வாறு சொன்னாலும், அது வெறும் வார்த்தையாகத் தான் இருக்கும். எனவே இதனைப் புரிந்து கொண்டு, பெண்கள் நடப்பது, உறவை மேலும் வலுப்படுத்தும்.

* ஒருவேளை உங்கள் துணை அடிக்கடி, இந்த மூன்று வார்த்தையை சொல்லாவிட்டால், அவர்களுக்கு உணர்ச்சியை சரியாக வெளிப்படுத்த தெரியவில்லை என்று அர்த்தம். மேலும் அவர்கள் காதலை சொன்னால், "அத்திப் பூத்தாற் போல்" எப்போதாவது ஒரு முறை மட்டும் தான், மனிதல் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளும் சரியாக வெளிப்படும் படி சொல்வார்கள்.

* சில ஆண்களுக்கு ஈகோ அதிகம் இருக்கும். அதிலும் அடிக்கடி "ஐ லவ் யூ" சொன்னால், எங்கு பெண்கள் தம்மை இழிவாக நினைப்பார்களோ என்று நினைத்து, தன்னை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு, சொல்லாமல் மறுப்பார்கள். அத்தகைய ஈகோவானது, அவர்களது நடவடிக்கைகளிலேயே நன்கு தெரியும். பெரும்பாலான காதல், இந்த ஒரு காரணத்திற்கு தான் பிரிகிறது. எனவே காதலில் ஈகோ இல்லாமல் இருந்தால், காதலானது நீண்ட நாட்கள் நிலைக்கும்.

இவையே ஆண்கள் அடிக்கடி "ஐ லவ் யூ" என்று சொல்லாமல் இருப்பதற்கான காரணம். என்ன நண்பர்களே! ஒப்புக் கொள்கிறீர்களா?

English summary

Why Men Hate To Say, “I Love You”? | ஆண்கள் ஏன் அடிக்கடி "ஐ லவ் யூ" சொல்லமாட்ராங்க...

Majority of men do not like to say, I Love You any or all the time. There are many reasons behind this. If your man is not saying 'Love You Too' every time, it doesn't mean he is not the right guy for you. Men often do not like to repeat these three magical words. Find out the reasons behind it...
Story first published: Monday, March 4, 2013, 17:54 [IST]
Desktop Bottom Promotion