For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உறவு போலியானது என்பதற்கான அறிகுறிகள்!!!

By Maha
|

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும் போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்கவழக்கங்கள் பிடித்துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பது போல் இருக்கும். ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்துவிட்டாலும், ஒருசில செயல்கள் இருக்க வேண்டும். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது.

சொல்லப்போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது. அத்தகைய உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம் போன்றவைகள் இருக்கத் தான் செய்யும். ஏனெனில் அவை இயற்கையானவை. அத்தகைய இயற்கையான சில செயல்கள் கூட, பழகும் துணையிடம் இல்லாவிட்டால், அந்த உறவை போலியானது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் போலியான உறவில் தான் எந்த ஒரு பிரச்சனையும், அக்கறையும் இல்லாமல் இருக்கும்.

சரி, இப்போது நீங்கள் துணையாக நினைத்து பழகும் போலியான அன்பு கொண்டவர் என்பதை அறிய சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம். அத்தகைய அறிகுறிகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்பை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துதல்

அன்பை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துதல்

அளவுக்கு அதிகமாக அன்பை வெளிப்படுத்துவது என்பது தவறில்லை. ஆனால் அத்தகைய அன்பை பொது இடங்களில் வெளிப்படுத்துவது தான் தவறானது. உண்மையில் காதல் செய்யும் எவரும், அன்பை பொது இடங்களில் வெளிப்படுத்தமாட்டார்கள். அன்பு என்பது ஒருவரது மனதில் இருந்தால், போதுமானது. அத்தகைய அன்பை மற்றவர் பார்க்கும் வகையில் பொது இடங்களில் வெளிப்படுத்துவது போலியான உறவைக் குறிக்கும்.

தீவிர ஆலோசனை இருக்காது

தீவிர ஆலோசனை இருக்காது

உண்மையான உறவில் ஆலோசனைகள் இருக்கும். அவ்வாறு ஆலோசனை செய்யும் போது இருவரும் ஒவ்வொரு புள்ளியிலிருந்து யோசித்து பேசுவோம். ஆனால் விவாதமானது எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது வேலை பற்றியோ இல்லாமல், வெறும் கூந்தல், ஆடை போன்றவற்றைப் பற்றியே இருந்தால், அது உறவை போலியானது என்று காட்டும்.

ஒருவரை ஒருவர் சரியாக தெரியாது

ஒருவரை ஒருவர் சரியாக தெரியாது

துணையின் விருப்பமான படம், ரெசிபி, நிறம் மற்றும் மறக்க முடியாத நிகழ்வு போன்றவை தெரியுமா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் இருந்தால், அவர்/அவள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையென்றும், மேலும் அது உண்மையான அன்பு இல்லை என்றும் தெரிவிக்கிறது.

வாதங்களே இருக்காது

வாதங்களே இருக்காது

சண்டைகள் மற்றும் வாதங்கள் இருந்தால் தான், உறவு நன்கு வலுவாக இருக்கும். ஆனால அத்தகையது எதுவும் இல்லாமல் எந்நேரமும் சாதாரணமாக இருந்தால், அது வாழ்வில் சுவாரஸ்யத்தை குறைந்து, உறவை போலியானது போல் காட்டும்.

குடும்பத்தை சந்திக்க விருப்பமில்லாதது

குடும்பத்தை சந்திக்க விருப்பமில்லாதது

எந்த ஒரு நட்போ அல்லது காதலோ கிடைத்தாலும், முதலில் அவர்களது குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனால் போலியான உறவு இருந்தால், அத்தகையவர்களை சந்திக்க விருப்பமில்லாமல், அடிக்கடி வேலை உள்ளது என்று ஓடிவிடுவார்கள்.

கூட்டமாக இருக்க நினைப்பது

கூட்டமாக இருக்க நினைப்பது

காதலிக்கிறார்கள் என்றால் துணையை தனியாக சந்திக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அத்தகைய எண்ணம் இல்லாமல் இருந்தால், துணையுடன் இருந்து கொண்டு, நண்பர்களையும் அழைத்துக் கொண்டு எப்போதும் கூட்டமாகவே இருப்பார்கள்

பிரிவு வருத்தம்

பிரிவு வருத்தம்

துணையை பிரிந்து இருக்க முடியாத மனநிலை உண்டா? உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதமா? அவ்வாறு இல்லாவிட்டால், பின் அந்த உறவும் போலி என்பதை காட்டுகிறது.

கண்களுக்குள் இரகசியம் தெரியும்

கண்களுக்குள் இரகசியம் தெரியும்

துணையாக இருப்பவர்கள் இரகசியத்தை மறைப்பது, அவர்களது கண்களில் நன்கு தெரியும். உண்மையான உறவில் இரகசியங்கள் என்ற ஒன்று இருந்தால், அதுவும் போலியானது தான்.

நெருக்கம் இருக்கும், ஆனால் இருக்காது.

நெருக்கம் இருக்கும், ஆனால் இருக்காது.

எப்போதும் நெருக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நெருக்கமானது, அவர்கள் மனம் வருந்தும் போது, சமாதானப்படுத்துவதற்கு நெருக்கமானது வேண்டும். ஆனால் அது சுத்தமாக இருவ்வாலிட்டால், பின் அது நிச்சயம் உண்மையான உறவாக இருக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs To Show A Relationship Is Fake | உறவு போலியானது என்பதற்கான அறிகுறிகள்!!!

When you are in a serious relationship, you might see other happy couples and feel that they have a picture perfect life. But always remember, too much perfection is a sign of fakeness. These are some of the signs to identify a fake relationship.
Desktop Bottom Promotion