Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

காதல் இல்லாதவங்களா நீங்க? கவலைய விடுங்க...

Posted by:
Updated: Thursday, February 14, 2013, 15:42 [IST]

காதலர் தினத்தன்று சிங்கிளாக இருப்பது என்பது ஒரு கொடுமையான விஷயம் போல் சிலர் வருத்தப்படுவார்கள். இந்த நேரத்தில் தான், காதல் செய்யும் அனைத்து நண்பர்களும், "காதலர் தினத்தன்று நீ என்ன செய்ய போகிறாய்?" என்று கேட்பார்கள். ஆனால் அவ்வாறு கேட்கும் போது சிலர் மிகவும் வருத்தப்படுவார்கள். ஏனெனில் எவ்வளவு தான் முயன்றாலும், காதலி/காதலன் இன்னும் அமையவில்லையே என்பதால் தான்.

குறிப்பாக காதலில் தோற்று போய் தனிமையில் இருப்பவர்களுக்கு, இது ஒரு நரகமான நாள் போன்று இருக்கும். இந்த தினத்தன்று தான் அதிகமான தனிமையை உணர்வார்கள். அதுமட்டுமின்றி, இந்த நாளில் காதலி/காதலனின் நினைவு மனதை அதிக காயப்படுத்தும். எனவே இத்தகைய கஷ்டங்களை அனுபவிக்காமல் இருப்பதற்கு, தம்மைத் தாமே சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சிலரோ காதல் இருப்பதற்கு இல்லாமல் இருப்பதை விரும்பி சந்தோஷமாக இருப்பார்கள். அத்தகையவர்களிடம் காதலைப் பற்றி சொன்னால், காதல் செய்து காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு, காதல் செய்யாமலேயே இருக்கலாம் என்று காதலை வெறுப்போடு சொல்வார்கள். என்ன தான் அவ்வாறு சொன்னாலும், ஒருவித சிறிய கஷ்டம் மனதில் இருக்கும். அத்தகையவர்களும் இந்த நாளில் தனிமையை உணர்வார்கள்.

எனவே தனிமையை தவிர்த்து, காதலர் தினத்தன்று சந்தோஷமாக இருப்பதற்கு ஒருசில சூப்பரான வழிகள் இருக்கின்றன. அத்தகைய வழிகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, காதலர் தினத்தன்று மகிழ்ச்சியாக இருங்கள்.

பார்ட்டி

காதல் செய்யாமல் இருப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். எனவே அத்தகையவர்களுக்காக ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து, அவர்களை அழைத்து அன்றைய பொழுதைப் போக்கலாம்.

நன்கு சாப்பிடலாம்

பிடித்ததை விரும்பி சாப்பிட்டால், உடைந்த இதயம் கூட சரியாகிவிடும். வாழ்க்கையில் யாரும் இல்லை என்பதற்காக, சரியாக சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து, பிடித்ததை ஆர்டர் செய்து, மூக்கு முட்ட சாப்பிட்டு, தூங்கலாம்.

அலுவலகத்தில் இருப்பது

காதல் செய்யாமல் இருப்பவர்களாக இருந்தால், அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்யலாம். அதுமட்டுமின்றி, இப்படி வேலை செய்வதை பாஸ் பார்த்தால், ஒரு வேளை மார்ச் மாதத்தில் சம்பள உயர்வு போதிய அளவு கிடைக்கலாம்.

பெற்றோர்களை பார்ப்பது

பெற்றோர்களை விட்டு வெளியூர்களில் இருப்பவர்கள், இந்த நாளன்று அவர்களை பார்க்க செல்லலாம். ஏனெனில் மற்றவர்களை விட, பெற்றோர்களின் காதலுக்கு தான் எந்த ஒரு முடிவும் இருக்காது. அதுவே எப்போதும் நிலைத்து இருக்கக்கூடியது.

பரிசுகள்

காதலர் தினத்தன்று யாரும் பரிசுகள் கொடுக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். அப்போது நாம் நமக்கு பிடித்ததை வாங்குவதற்கு ஷாப்பிங் சென்று, வாங்கி மகிழலாமே!

அழகுப்படுத்துவது

ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். எனவே இந்த நாளன்று ஸ்பா சென்று ஃபேஷியல், பெடிக்யூர் போன்றவற்றை செய்து, தங்களை அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

புத்தகம் படிப்பது

நன்கு சுவாரஸ்யமாக இருக்கும் புத்தகங்களை வாங்கி, வீட்டில் உட்கார்ந்து அமைதியாக படிக்கலாம்.

ட்ரிப்

எங்கேனும் பைக்கிலோ அல்லது காரிலோ, அமைதியாக ஒரு ட்ரிப் செல்லலாம். அதுவும் இருக்கும் ஊருக்கு வெளியே யாரும் இல்லாத அமைதியான இடத்திற்கு சென்றால், எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

Story first published:  Thursday, February 14, 2013, 15:22 [IST]
English summary
Being single on Valentine's Day is like a cruel practical joke. All your committed friends casually ask you what you will be doing to celebrate this day. Couples just fail to understand that spending Valentine's day alone could be an option. Here are some cool things that singles can do on Valentine's Day.
Subscribe Newsletter

Bold Talk