For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனிமையை கையாள்வதற்கு சில சூப்பர் டிப்ஸ்....

By Maha
|

மக்கள் தனிமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. சிலர் தனிமையை சந்தோசத்திற்க்காகவும், ஒருசிலர் வேதனை கொண்டுள்ள சமயங்களிலும் தனிமையை விரும்புவர். சிலருக்கு அந்த தனிமை தானாகவே அமைந்து விடும். இப்படிப்பட்ட தனிமையை சமாளிக்க கற்றுகொள்வது தான் புத்திசாலித்தனம். தனிமை அனைவருக்கும் ஒரு அனுபவம். எனினும் அதிர்ஷ்டவசமாக, அதை சமாளிக்க பல வழிகள் உள்ளன.

முதலில் தனிமையை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு பெரிய தவறு என்று அர்த்தம் இல்லை. சில மாற்றங்கள் நம் வாழ்கையில் ஏற்படும் காலத்தில் தனிமை நம்மை நாடுகிறது. குறிப்பாக நீங்கள் உங்கள் அன்றாட வழக்கமான வேலையிலிருந்தோ இல்லை நம்முடன் இருப்பவர்களிடம் இருந்து பிரிவதாலோ இந்த தனிமை நம்மை உலுக்கும். எடுத்துக்காட்டாக, புது வேலையில் சேரும் பொழுது அல்லது திருமணமாகி புதிய உறவுகளுடன் இணையும் பொழுது, தனிமையில் இருக்க நேர்ந்திடும். எனவே இந்த நேரத்தில் ஏற்படும் தனிமையை தவிர்க்க, அவர்களை புரிந்து அவர்களுடன் கலந்து கொள்ள எடுக்கும் சில முயற்சிகளால், அந்த தனிமையானது நம்மை விட்டு விலகும்.

How to Deal With Loneliness

தனிமையைப் போக்க சில டிப்ஸ்...

தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாமே நம் சந்தோஷத்திற்காக இருப்பது. மற்றொன்று மிக சோகமாக இருக்கும் சமயம் தனிமையில் வாடுவது. இந்த இரண்டாம் வகையான தனிமை படுத்தும் பாட்டை சொல்லால் விவரிக்க இயலாது. அச்சமயம் நம்மை புரிந்து கொண்டவர்களிடம், நம் வேதனைகளை கொட்டித் தீர்ப்பதால் ஓரளவு அந்த தனிமையிலிருந்து விடை பெறலாம்.

நம்மை சார்ந்தவர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ நட்பு கொள்ளும் போது, தனிமையை தவிர்க்கலாம். இல்லையெனில் நம்மை போன்றே தனிமையில் வாடுபவர்களிடம் ஆலோசனை பெறுதல் அல்லது அவர்களிடம் அந்த தனிமையிலிருந்து எப்படி விலகி வந்தனர் போன்ற கேள்விகளை எழுப்புதலாலும், அந்த தனிமைக்கான விடை கிடைக்கும்.

மற்றவர்களிடம் பேசுகையில் நம்மை பற்றியே பேசி கொண்டு இருக்காமல், அவர்கள் பேசுவதையும் செவி கொடுத்து கேட்பது உறவை மேம்படுத்தும். அதை விட்டு நீங்கள் பேசுவதை மட்டுமே மற்றவர் கேட்க வேண்டும் எனில் அவர்களுக்கு உங்களோடு பேசுவது பிடிக்காமல், உங்களிடமிருந்து அறவே விலகுவர்.

உங்கள் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவழியுங்கள். அப்படி ஒன்றும் ஒரு முக்கியமான ஆளாக நீங்கள் வீட்டில் இல்லா விட்டாலும், அவர்களுடன் கலந்து பேசினால், உங்களையும் ஒரு முக்கியத்துவராக அவர்கள் ஏற்க வாய்ப்புள்ளது.

உங்களையே ஒரு சவாலாக எடுத்து கொள்ளுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களிடம் வந்து பேசும் வரையில் காத்திருக்காமல் நீங்களே அவர்களை கண்டு பேசுங்கள். உங்களின் துணைவரையோ அல்லது நெருக்கமான ஒருவரையோ இழந்த காரணத்தினால், நீங்கள் வேதனைக்குள்ளாகி தனிமையில் வாடுகிறவர்கள் என்றால், அவர்களுடன் சேர்ந்து வெளியே சென்று மனதை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் துணைவரை பிரிந்த துக்கத்தில் இருப்பவர்களானால், ஒரு செல்ல பிராணியை வளர்ப்பது நல்ல யோசனை. நாய் அல்லது பூனை உங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருக்கும். பெரும்பாலானோர் தனிமையை தவிர்க்க, செல்ல பிராணிகளை வளர்த்து, அதன் மீது முழு அன்பை செலுத்தி வருகின்றனர். இதனால் அந்த பிராணிகளும் உங்கள் மீது அத்தனை அன்பை செலுத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மற்றவர்களை வேதனை படும் வகையில் அவர்களை கேலி செய்வது நல்லது அல்ல. மற்றவர்களை பாராட்டுவது, அவர்களின் உடை அழகாக உள்ளது என சொல்வது ஒரு பெரிய ஐஸ் வைக்கும் ரகசியம். இதனால் அவர்கள் நீங்கள் அவர்களை கேலி செய்வதில்லை என்பதை நம்புவர். உங்கள் வருகை ஒரு சாந்தமாகவும் அன்பாகவும் இருந்தால் அனைவரையும் கவரலாம். தனிமைக்கு விடை கொடுங்கள், அனைவருடன் சேர்ந்து சந்தோசமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

English summary

How to Deal With Loneliness | தனிமையை கையாள்வதற்கு சில சூப்பர் டிப்ஸ்....

People feel lonely for a number of reasons, including simple social awkwardness or intentional isolation. Everyone experiences loneliness. Luckily, though, there are a number of ways to overcome it.
Story first published: Friday, February 1, 2013, 14:12 [IST]
Desktop Bottom Promotion