For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் ஆண்டின் நிறைவு விழாவை எப்படி கொண்டாடலாம்?

By Super
|

எல்லோருடைய வாழ்விலும் முக்கியமான மைல்கல்லாக விளங்குவது ஆண்டு விழாக்கள் ஆகும். அது ஒரு காதல் ஆண்டு விழா, திருமண ஆண்டு விழா அல்லது வேறு ஏதாவது சிறப்பு விழாவாக இருக்கலாம்.

அதிலும் திருமண நாளாக இருந்தால் துணைக்கு மறக்க முடியாத பரிசை அளித்து மகிழ்விக்கலாம். இல்லையெனில் திருமண நாளில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இருவரும் சேர்ந்து பார்வையிட்டு, மலரும் நினைவுகளால் ஒருவரையொருவர் மகிழ்விக்கலாம். மேலும் அந்நாளில் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு விருந்து கொடுத்து மகிழலாம். இதுவே பதினைந்தாவது ஆண்டு திருமண விழாவாக இருந்தால், அதை நினைவுப்படுத்தும் விதமாக வீட்டில் அழகான மரக்கன்று ஒன்றை நடலாம். என்ன செய்ய முடிவெடுத்தாலும், அவற்றை புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொண்டால், அது ஒரு இனிமையான நினைவுகளாக இருக்கும்.

மேலும் திருமணத்திற்கு பிறகு ஏதேனும் விழாக்கள் என்றால் உடனே வெளியே சென்று நிறைய பணத்தை செலவழித்து கொண்டாடுவோம். ஆனால் அவ்வாறு பணத்தை செலவழிப்பதை விட வீட்டிலேயே கொண்டாடுவது சிறப்பாக இருக்கும். சரி, அது எப்படி என்று பார்ப்போமா!!!

How to Celebrate Your Anniversary at Home

வழிமுறைகள்:

1. ஆண்டு நிறைவு நாளில் துணையுடன் எவ்வாறு நேரத்தைக் கழிக்கலாம் என்பதை முடிவு செய்யவும். அதற்கு பெரும் விருந்தையோ அல்லது சிறப்பாக இரவு விருந்தையோ உருவாக்க முடிவு செய்திருந்தால், இருவரும் சேர்ந்தே அதைச் செய்ய வேண்டும்.

2. இந்த நாளில் இருவரும் சேர்ந்து பிடித்த விஷயங்களைச் செய்ய திட்டமிட வேண்டும். மேலும் அத்திட்டமானது கடந்த ஆண்டு நினைவுகளை மலரச் செய்யுமாறு இருக்க வேண்டும். இல்லையெனில் முதலில் சந்தித்த போது விளையாடிய விளையாட்டுக்களை மீண்டும் விளையாடுங்கள். ஒருவருக்கொருவர் கதைகள் சொல்லி, கடந்த கால அனுபவங்களை நினைவிற்கு கொண்டு வரலாம்.

3. சிறப்பு விருந்தின் போது, துணைக்கு பிடித்தமான உணவை சமைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது அவள்/அவர் விசேஷ காலங்களில் வெளியே சென்று எதை விரும்பி சாப்பிடுகிறாரோ அதை வீட்டிலேயே சமைக்கவும்.

4. ஏற்கனவே தினமும் நேரத்தை ஒன்றாக செலவழித்திருப்பீர்கள். ஆனால் இந்த நாளை இருவர் மட்டுமே கொண்டாடும் சிறப்பு விழா என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு, இந்த நாளை சிறப்பான நாளாக மனதில் கொள்ளவும்.

5. இரவு நேரத்தில் வீட்டை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து, மதுபானம் அல்லது குளிர்பானங்களை அருந்தலாம். இது நல்ல ரொமான்ஸாக இருக்கும்.

குறிப்புகள்:

- இந்த சிறப்பான தருணத்தை நீங்கள் இருவரும் ஒன்றாக திட்டமிட்டு செலவழித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

- வெளியே சென்று பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, சேமிக்கப்பட்ட பணத்தில் துணைக்குத் தேவையான சிறப்புப் பரிசை வாங்கித் தரலாம்.

- வீட்டில் உங்களின் சிறப்பான நாள் ஒரு ஆச்சர்யத்தை கொடுக்க வேண்டும் என்றால், முதலில் உங்கள் துணைவரின் அன்றைய தின திட்ட செயல்பாடுகளை சரிபார்க்கவும்.

- இருவரும் தனிமையில் இருக்கும் போது, தொந்தரவு கொடுக்காத வகையில் தொலைபேசியை அணைத்து வைக்கவும்.

English summary

How to Celebrate Your Anniversary at Home | வீட்டில் ஆண்டின் நிறைவு விழாவை எப்படி கொண்டாடலாம்?

Anniversaries are important milestone events in everyone's lives. Whether it's a dating anniversary, a wedding anniversary, or any other special occasion it can be nice to celebrate at home instead of spending a lot of money for going out.
Desktop Bottom Promotion