For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயது அதிகமாக இருப்பவர்களை திருமணம் செய்யப் போறீங்களா?

By Maha
|

பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். அதற்காக ஒரே வயதுள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலும் அது குறைவு தான். இவ்வாறு திருமணம் செய்யும் போது, பெண்ணை விட ஆணின் வயது சற்று அதிகமாக இருந்தால், நிறைய நன்மைகள் உள்ளன. அதே சமயம் தீமைகளும் உள்ளன. இது பெரும்பாலும் பெண்களுக்கு தான் பொருந்தும். ஏனெனில் ஆண்கள் யாரும் தன்னை விட பெரியவரை திருமணம் செய்து கொள்வது இல்லை. அவ்வாறு செய்து கொண்டாலும், அது குறைவாகவே இருக்கும்.

ஆகவே எவரேனும் தன்னை விட வயது பெரியவரை திருணமம் செய்வதைத் தவறு என்று கூறினால், அப்போது தாமாக யோசிக்க வேண்டியது அவசியமாகிறது. சொல்லப்போனால், இத்தகைய வயது இடைவெளியில் பெரும்பாலும் நன்மைகளே அதிகம் நிறைந்துள்ளது. சரி, இப்போது அவ்வாறு வயது அதிகமாக உள்ளவரை திருமணம் செய்தால் என்ன நன்மை மற்றும் தீமைகள் நிறைந்துள்ளன என்பதைப் பார்ப்போமா!!!

Advantage and Dis-advantage Of Age Gap In Relationship

நன்மைகள்:

* தன்னை விட பெரிய ஆண்களை திருமணம் செய்து கொண்டால், ஏதேனும் கஷ்டமான சூழ்நிலையோ அல்லது பிரச்சனையின் போது சரியாக முடிவெடுக்கத் தெரியவில்லையென்றால், அத்தகையவரை திருமணம் செய்து கொள்ளும் போது, ஈஸியாக சரிசெய்து விடலாம். ஏனெனில் அவர்களுக்கு அனுபவம் உள்ளது. எனவே எத்தகைய பிரச்சனைக்கு எப்படி நடக்க வேண்டும் என்று நன்கு தெரியும். ஆகவே இந்த வாழ்க்கைப் பாடத்தை அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

* பெண்கள் சிலருக்கு எது நன்மை, எது தீமை என்பது தெரியாது. அது தெரியாமலேயே விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். ஆகவே இவ்வாறு தன்னை விட சற்று வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்வதால், நன்மை எது, தீமை எது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு நடக்க முடியும்.

* முக்கியமான ஒரு நன்மை, அவ்வாறு வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையில் இருப்பார்கள். எனவே திருமணத்திற்குப் பின், வாழ்க்கையில் எந்த ஒரு பணப் பிரச்சனையும் இருக்காது. பின் எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.

தீமைகள்:

* வயது அதிகம் உள்ளவர்கள் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, சுட்டித்தனமாக ஏதாவது ஒரு செயலை செய்தால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு, கடுமையாக நடப்பார்கள். அதேசமயம் அவர்கள் சுட்டித்தனம் என்று நினைத்து ஏதேனும் செயலைச் செய்வது, நமக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும். பின்னர் எலியும் பூனையுமாகத் தான் நடக்க நேரிடும்.

* வயது குறைவாக இருக்கும் பெண்கள் வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்யும் போது, ஆண்களுக்கு ஒருவித நம்பிக்கையில்லாத கோபம் வரும். அது என்னவென்றால், வயது குறைவாக இருப்பதால், தன் மனைவி இயம் வயது ஆண்களிடம் நட்புறவுடன் பேசும் போது, கோபம் வந்து சண்டை போடுவார்கள்.

ஆகவே எதுவானாலும், சரியான புரிதல் இருந்தால், எந்த ஒரு வாழ்க்கையும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சந்தோஷமாக செல்லும். வேறு ஏதாவது நன்மைகள் மற்றும் தீமைகளை நீங்கள் உணர்ந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Advantage and Dis-advantage Of Age Gap In Relationship | வயது அதிகமாக இருப்பவர்களை திருமணம் செய்யப் போறீங்களா?

The difference in age can bring advantages as well as disadvantages among couples. The major difference in such relationships is the level of maturity. However, a slight age gap of 5-6 years can be good. Lets take a look at few Advantage and Dis-advantage of having an age gap in relationships.
Story first published: Monday, February 25, 2013, 15:53 [IST]
Desktop Bottom Promotion