For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மற்றவருடன் நெருங்கி பழக நம்பிக்கை எப்படி துணை புரியும்?

By Maha
|

How to Feel Confident About Being Intimate Again
மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லை காதலாகவும் இருக்கலாம். இது சூழ்நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகுவதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இருக்கும். இத்தனை நாளும் நாம் மற்றவருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து, நம்பிக்கையுடன் அடுத்தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழகலாம் என்பதை மனதில் கொண்டு, அனைவரிடமும் நம்மால் பழக முடியும் என்பதற்கு இதோ இங்கே சில வழிகள்:

1. புது முயற்சி: எப்பொழுதும் தொடர்ச்சியாக செய்யும் வேலைகளில் இருந்து, மனதை மாற்றி, வேறு ஏதாவது புது வேலை செய்யவும். ஒரு பழக்கத்தை திடீரென்று மாற்றுவது கடினமாக இருப்பினும், அது நல்ல பலனைத் தரும். எப்படியெனில் ஒரு புதிய திசையில் நம்மை மாற்றிக் கொள்வதும், பல இட மாற்றமும் மனதிற்கு பெரும் நம்பிக்கையை கொடுக்கும்.

2. விருப்பு வெறுப்புகளுக்கு இடர் வராமல் பார்த்துக் கொள்வது: நாம் அடுத்தவருடன் பழக வேண்டுமெனில், அவர்களது பார்வை நம் மேல் படும்படி, நாம் நம்பிக்கையுடன் செயல்படுவது தான் முதற்படி. உதாரணமாக, ஒரு கிளப்பில்(club) கலந்து கொள்வது அல்லது குழுவில் சேர்வது, விளையாட்டில் ஈடுபடுவது போன்றவை செய்வதால் பிரபலமாக வாய்ப்புள்ளது. அதிலும் தன்னார்வம் கொண்டு செய்தல், சிறந்த பலனை தரும்.

3. சாத்தியக்கூறுகள் அமையுமாறு இருத்தல்: முக்கியமாக மனதிற்கு பிடித்த ஒன்றை செய்வதால், மனம் அதில் அதிக ஆர்வத்தைக் கொண்டு, அதில் ஒருவகையான ஒளியை தரும். எந்த நேரத்திலும் விரும்பும் ஏதாவது ஒன்றை செய்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை கவர நேரிடும். இதன் விளைவு, மற்றவர்களுடன் பழக வாய்ப்பை ஏற்படுத்தும்.

4. சிறிய முயற்சியும் கைகூடும்: எந்த ஒரு செயலை செய்யும் போது தோல்வி வந்தாலும், அதைக் கண்டு மனதை தளர விடாமல், தொடர்ந்து முயற்சித்தால், ஒரு நாள் நிச்சயம் லட்சியத்தை அடைய முடியும். எனவே எந்த ஒரு சிறிய முயற்சியையும் கைவிடாமல், தொடர வேண்டும்.

5. வயதுக்கு தகுந்தாற்போல் நடந்துகொள்வது: ஒவ்வொரு வயதினரிடம் பேசும் போதும், அதற்கு தகுந்தாற்போல் அவருடன் கலந்து கொள்வதன் மூலம், நம் நட்பின் நெருக்கம் அதிகரிக்கும். இதற்கு வயது வரம்பு ஒன்றும் இல்லை. பொதுவாக மக்கள் பல்வேறு அம்சங்களால் ஈர்க்கப்படுகின்றனர். இதைப் பொறுத்து, நாம் எந்த மாதிரியான நெருக்கத்தை கொண்டுள்ளோம் என்பதை உணரலாம்.

6. தட்டி கொடுத்தல்: உங்களை நீங்களே தட்டி கொடுத்து, செய்யும் வேலைகளை நீங்களே பாராட்டிக் கொள்வதால், மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

நெருக்கம் என்பது வெவ்வேறான மக்களுக்கு வெவ்வேறான விஷயங்களாகும். அது எப்படி இருக்கிறதோ, அப்படியே இருப்பது நல்லது. இதை புரிந்து நடந்து கொண்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். ஒவ்வொரு மனிதருடன் பழக பல வழிகள் உள்ளன. அதற்கு சமயமும் சந்தர்ப்பமும் அமைந்துவிட்டால் எல்லாம் உங்களுக்கு ஏற்றதாகவே நடக்கும்.

English summary

How to Feel Confident About Being Intimate Again | மற்றவருடன் நெருங்கி பழக நம்பிக்கை எப்படி துணை புரியும்?

Are you finding it hard to develop an intimate relationship again? Check out the tips to get into an intimate relation.
Story first published: Tuesday, January 22, 2013, 18:00 [IST]
Desktop Bottom Promotion