For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலில் உள்ள முன்று நிலைகள்!!!

By Maha
|

Love
அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா!!!

காமம்: இது ஒரு வகையான அடிப்படைக் காதல். இந்த வகைக் காதல் தான் ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியை அதிகரிக்கும். அதிலும் மனதில் உள்ள உணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் யார் பழகுகின்றனரோ, அதற்கேற்றாற் போல் மனதில் காதலுணர்ச்சியானது அதிகரிக்கும். இந்த உணர்ச்சி ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் தான். அதிலும் டெஸ்ட்ரொஜன் (ஆண்) மற்றும் ஈஸ்ட்ரோஜன் (பெண்) என்னும் ஹார்மோன்கள் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன்கள் தான் ஆணிடம் விந்தகத்தையும், பெண்ணிடம் அண்டப்பையையும் உற்பத்தி செய்து, காம உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது.

அதிலும் எப்போது ஒருவரை உங்களுக்குப் பிடிக்கிறதோ, அப்போது உடனே இந்த வகையான காதலில் நுழைந்துவிடுவீர்கள். நிறைய மக்கள் காதலில் காமமும் ஒரு பகுதி என்று நினைத்து, வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் தான் அதனை காதலின் இரண்டாம் நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றனர். சொல்லப்போனால், இன்றைய மார்டன் உலகில், உடல்ரீதியான காதலும் ஒரு அடிப்படையாக, ட்ரெண்ட் ஆக உள்ளது.

ஈர்ப்பு: முதல் மற்றும் இரண்டாம் நிலைக் காதல் ஒரே மாதிரி தான். என்ன ஒரு வித்தியாசம் என்றால், இந்த நிலைக் காதலானாது, ஒருவரின் வெளிப்புறத் தோற்றம், அழகு, பேச்சு போன்றவற்றால் ஈர்க்கப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் ஈர்ப்பு, தன்னை ஈர்ப்பவரிடம் எதையும் சரியாக பொறுமையோடு பேசமுடியாதவாறு செய்யும். நிறைய பேருக்கு காதல் வந்துவிட்டால், எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள் தெரியுமா? இதற்கு அட்ரினல் என்னும் ஹார்மோன் தான் காரணம். இந்த ஹார்மோன் தான் மனதின் நிலையை பாதித்து, பொறுமையிழக்க வைத்து, சரியாக தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல் செய்யும். மேலும் இந்த ஹார்மோன், தன் வாழ்வில் இவ்வளவு ஒரு அழகான மனிதனை பெற வைத்ததை நினைத்து, அவர்களின் நினைப்பைத் தவிர, எந்த ஒரு செயலிலும் முழுமையான ஈடுபாட்டை செலுத்த முடியாதவாறு செய்யும்.

பிணைப்பு: இது மற்றொரு வகையான காதல். இது இருவரின் மனம் அல்லது உடல்ரீதியான ஒருங்கிணைப்பாக இருக்கலாம். இந்த வகையான ஒருகிணைப்பினால், இருவருக்கிடையே காதல் அல்லது அன்பு மலரும். இது இருமனங்களின் எண்ணங்கள் ஒன்றாக செயல்பட்டு, அதனால் ஈர்க்கப்படும் போது, இருவருக்கிடையேயும் ஒருவித பிணைப்பு அதிகரிக்கும். இந்த பிணைப்புகளானது, உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ இருக்கலாம். இவ்வாறான பிணைப்பு ஏற்படும் போது, நீங்கள் உங்கள் துணையுடன் பெரும்பாலான நேரம் இருக்க வேண்டுமென்று தோன்றும். இதன் மூலமாகவே காதலானது மலரும்.

இவையே காதலின் மூன்று நிலைகள் ஆகும். என்ன நண்பர்களே! உங்களுக்கு இந்த நிலைகளில், ஏதாவதொன்றின் மூலம் காதல் மலர்ந்துள்ளதா?

English summary

The 3 Phases Of Love | காதலில் உள்ள முன்று நிலைகள்!!!

When we fall in love, we often get confused in the beginning. In short, there are many stages of love that we all go through. The few phases of love are lust, attraction and bonding. You agree or not, every individual goes through either of the phases when in love.
Story first published: Monday, December 17, 2012, 18:10 [IST]
Desktop Bottom Promotion