For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான... பட்டாணி புலாவ்

By Maha
|

தற்போது பச்சை பட்டாணியைப் பற்றிய நியூஸ் அதிகமாக உள்ளதா? ஏன் என்று தெரியுமா? ஏனெனில் இந்த மாதம் பச்சை பட்டாணி சீசன். அதுமட்டுமின்றி, இந்த பச்சை பட்டாணியில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதால், முடிந்த வரையில் பச்சை பட்டாணியைக் கொண்டு பல வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சி செய்திடுங்கள்.

மேலும் இங்கு அந்த பச்சை பட்டாணியைக் கொண்டு செய்யப்படும் ஒரு ஈஸியான புலாவ் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை காலை வேளையில் செய்து என்ஜாய் பண்ணுங்கள்...

Yummy Peas Pulao With Butter Recipe

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை நன்கு நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைத்து, பிரியாணி இலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து கழுவி வைத்துள்ள பாசுமதி அரிசியைப் போட்டு, கேரட் மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!

English summary

Yummy Peas Pulao With Butter Recipe

Today we would like to sharing a simple yet delicious way to prepare peas pulao. This peas pulao recipe has minced carrots and the rice smells extensively of butter. If you want to try some rice recipes for main course, then try this recipe.
Story first published: Wednesday, November 20, 2013, 19:18 [IST]
Desktop Bottom Promotion