For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெத்து சாம்பார்: ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்

By Maha
|

பெ‌ண்க‌ள் த‌ங்களது சகோதர‌ர் ம‌ற்று‌ம் சகோதர‌ர்களாக நினைப்போருக்கு ராக்கி அணிவிக்கும் நாள் தான் ரக்ஷா பந்தன். இந்நாளன்று வெறும் ராக்கியை மட்டும் கட்டாமல், தன் சகோதரர்களுக்கு தங்கள் கையால் சமைத்துக் கொடுத்தால், அவர்கள் மகிழ்வார்கள்.

இங்கு நமது வாசகர் சிவபிரசாந்தி, தன் அண்ணன் ராக்கேஷ் அவர்களுக்கு சமைத்து கொடுத்த ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளார். அந்த ரெசிபியின் பெயர் வெத்து சாம்பார். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இப்போது அந்த வெத்து சாம்பார் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Vethu Sambar For Raksha Bandhan

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
பூண்டு - 10 பற்கள்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டால், வெத்து சாம்பார் ரெடி!!!

English summary

Vethu Sambar For Raksha Bandhan

Vethu sambar is a popular recipe from Tamil Nadu and it tastes even better than the normal sambar. Take a look at how to prepare vethu sambar.
Desktop Bottom Promotion